திருமணமான 3 நாட்களில் பயங்கரம்... காட்டிக்கொடுத்த கல்யாண வீடியோ

தஞ்சாவூர் இளம் பெண் உயிரிழப்பு வழக்கு: காதல் திருமண வீடியோ வைரலானதால் 3 நாட்களில் சோக முடிவு - பெற்றோர்கள் ஒப்புதல் வாக்குமூலம்

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள நெய்வா விடுதி கிராமத்தைச் சேர்ந்த 20 வயது ஐஸ்வர்யா, தனது பள்ளிப் பருவ காதலன் நவீன் குமார் (20) உடன் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி நண்பர்களின் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்.

நண்பர்களின் கைத்தட்டல், மொபைல் போன் வீடியோ கேமரா, மலர்கள் என மகிழ்ச்சியின் உச்சத்தில் 10x10 அறையில் நடந்த அந்த அழகான காதல் திருமணத்தின் காட்சிகள் மொபைல் போனில் பதிவாகி, வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பகிரப்பட்டன.

இந்த வீடியோ காட்டுத்தீயாய் பரவிய மூன்றாவது நாளிலேயே, எதிர்கால கனவுகளோடு தாலி கட்டிய காதலியின் முகத்தை இனி ஒரு முறை கூடப் பார்க்க முடியாமல் அந்த இளைஞன் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டது.

பின்னணி:

குடும்ப வறுமை காரணமாக 18 வயதிலேயே திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்த ஐஸ்வர்யா, தினமும் 12 மணி நேரம் மில் சத்தத்திற்கு மத்தியில் உழைத்து வந்தார்.

அவரது ஒரே நிம்மதி, பக்கத்து கிராமமான பூவாலூரைச் சேர்ந்த நவீன் குமார். டிப்ளமோ முடித்த நவீன், திருப்பூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். பள்ளிப் பருவத்தில் பேருந்தில் தொடங்கிய அந்த காதல், ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக திருப்பூர் வரை தொடர்ந்தது.

இந்த விஷயம் வீட்டுக்கு தெரிந்ததும், ஜாதி காரணம் காட்டி ஐஸ்வர்யாவின் பெற்றோர்கள் (பெருமாள் - ரோஜா) காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால் காதல் ஜோடி அதைப் பொருட்படுத்தாமல், டிசம்பர் 31ஆம் தேதி நண்பர்களின் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். அன்று முதல் இருவரும் பல்லடம் பகுதியில் வாடகை வீட்டில் இல்லறத்தைத் தொடங்கினர்.

வீடியோ வைரல் - பெற்றோர்கள் அதிர்ச்சி:

திருமண வீடியோ வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பரவியது. ஜனவரி 2ஆம் தேதி ஐஸ்வர்யாவின் பெற்றோர்கள் பல்லடத்துக்கு விரைந்தனர். மகளைத் தேடி போலீசில் புகார் கொடுத்தனர். ஒரு வழியாக தம்பதியர் கண்டறியப்பட்டனர். போலீசார் ஐஸ்வர்யாவை மட்டும் பெற்றோர்களுடன் அனுப்பி வைத்தனர்.

ஐஸ்வர்யா “பொண்ணை விட முடியாது, நானும் வருகிறேன்” என்று கெஞ்சியதாக நவீன் குமார் தெரிவித்தார். ஆனால் பெற்றோர்கள் “உன்னை கொல்லக்கூட தயங்க மாட்டாங்கடா” என்று எச்சரித்ததாகவும், போலீசார் “நீ ஊருக்கு போயிட்டு உங்க ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடு” என்று கூறியதாகவும் நவீன் கூறினார். அதனால் அவர் பொண்ணை விட்டு அனுப்பி வைத்தார்.

நவீன் உடனே சிங்கிள் பைக்கில் காரைப் பின்தொடர்ந்து, திருப்பூரிலிருந்து ஊருக்குச் சென்றார். காவல் நிலையத்திலிருந்து நெய்வா விடுதி வரை காரைப் பின்தொடர்ந்தார்.

அடுத்த நாள் துக்கச் செய்தி:

அடுத்த நாள் காலை, “ஐஸ்வர்யா உயிரிழந்தார்” என்ற துக்கச் செய்தி வந்தது. குடும்பத்தினர் உற்றார் உறவினர் யாருக்கும் தெரிவிக்காமல், சடலத்தை அவசர அவசரமாக சுடுகாட்டில் வைத்து எரித்து, சாம்பலை தண்ணீரில் கரைத்து அழித்துவிட்டனர்.

இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகித்த நவீன் குமார், உடனே வாட்டாக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, சுடுகாட்டிற்குச் சென்று தடயங்களைச் சேகரித்தனர்.

ஐஸ்வர்யாவின் பெற்றோர்கள் பெருமாள், ரோஜா மற்றும் உறவினர்களை அழைத்து தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ஒப்புதல்:

விசாரணையில் பெற்றோர்கள் ஜாதி வேறுபாடு காரணமாக மகளின் திருமணத்தை ஏற்க மறுத்து, அவரை வீட்டிற்கு அழைத்து வந்து உயிரிழக்கச் செய்ததாகவும், பின்னர் சடலத்தை எரித்து அழித்ததாகவும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர். ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள், இந்த சம்பவத்தை விசாரணைக் கூடத்தில் நடித்துக் காட்டியுள்ளார்.

பல்லடம் போலீஸ் நடவடிக்கை குறித்து விமர்சனம்:

பொதுவாக திருமணம் செய்து கொண்ட மேஜர் பெண்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப செயல்பட விடுவது வழக்கம். ஆனால் பல்லடம் காவல் நிலையத்தில் ஐஸ்வர்யாவின் விருப்பத்துக்கு மாறாக அவரைப் பெற்றோர்களுடன் அனுப்பி வைத்தது இந்த சோகத்திற்கு ஒரு காரணமாகக் கருதப்படுகிறது.

இதையடுத்து, கோவை மண்டல டிஐஜி சரவணசுந்தர், பல்லடம் காவல் ஆய்வாளர் முருகையாவை சஸ்பென்ட் செய்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். சமூகத்தில் இன்னும் வேரூன்றியிருக்கும் ஜாதி உணர்வுகள், இளம் காதல் ஜோடிகளின் வாழ்க்கையை எப்படி சாம்பலாக்குகிறது என்பதற்கு இந்த சம்பவம் சாட்சியாக உள்ளது.

English Summary : Twenty-year-old Aishwarya from Thanjavur district married her childhood love Naveen Kumar from a different community. Their wedding video spread on WhatsApp. Her parents took her home shortly after, and she passed away the next day. The family quickly cremated the body and disposed of the ashes. Her husband filed a complaint, prompting police investigation and an officer’s suspension.
உடலுறவின் போது இதை செய்தால் மனைவி அடிமையாகிடுவாங்க.. ஆண்களுக்கு தெரியாத ரகசியத்தை உடைத்த மருத்துவர்!

உடலுறவின் போது இதை செய்தால் மனைவி அடிமையாகிடுவாங்க.. ஆண்களுக்கு தெரியாத ரகசியத்தை உடைத்த மருத்துவர்!