Posts

Showing posts with the label Naveen Kumar

திருமணமான 3 நாட்களில் பயங்கரம்... காட்டிக்கொடுத்த கல்யாண வீடியோ

Image
தஞ்சாவூர் இளம் பெண் உயிரிழப்பு வழக்கு: காதல் திருமண வீடியோ வைரலானதால் 3 நாட்களில் சோக முடிவு - பெற்றோர்கள் ஒப்புதல் வாக்குமூலம் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள நெய்வா விடுதி கிராமத்தைச் சேர்ந்த 20 வயது ஐஸ்வர்யா, தனது பள்ளிப் பருவ காதலன் நவீன் குமார் (20) உடன் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி நண்பர்களின் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். நண்பர்களின் கைத்தட்டல், மொபைல் போன் வீடியோ கேமரா, மலர்கள் என மகிழ்ச்சியின் உச்சத்தில் 10x10 அறையில் நடந்த அந்த அழகான காதல் திருமணத்தின் காட்சிகள் மொபைல் போனில் பதிவாகி, வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பகிரப்பட்டன. இந்த வீடியோ காட்டுத்தீயாய் பரவிய மூன்றாவது நாளிலேயே, எதிர்கால கனவுகளோடு தாலி கட்டிய காதலியின் முகத்தை இனி ஒரு முறை கூடப் பார்க்க முடியாமல் அந்த இளைஞன் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டது. பின்னணி: குடும்ப வறுமை காரணமாக 18 வயதிலேயே திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்த ஐஸ்வர்யா, தினமும் 12 மணி நேரம் மில் சத்தத்திற்கு மத்தியில் உழைத்து வந்தார். அவரது ஒரே நிம்மதி, பக்கத்து கிராமமான பூவாலூரைச் சேர்ந்த நவீன் குமார். டிப்ளமோ முடித்த நவீன், திருப...