முதலிரவுக்கு முன் இதை செய்தேன்.. அது தான் கடைசி.. கூச்சமே இல்லாமல் ஓப்பனாக பேசிய நடிகை நமீதா!

சென்னை: பாலிவுட் மற்றும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயமான நடிகை நமீதா, சமீபத்தில் தனது திருமண நாள் குறித்து ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார். அந்த பேட்டியில் அவரது கணவரும் உடன் இருந்து சிரிக்க சிரிக்க பதிலளித்த நிகழ்வு, இணையத்தில் பெரும் கவனம் பெற்றுள்ளது.

பேட்டியின்போது, “நமீதா செய்யும் சமையலில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது?” என்ற கேள்விக்கு பதிலளித்த நமீதாவின் கணவர், திருமண நாளன்று (முதல் இரவுக்கு முன்பு) குடும்ப வழக்கப்படி மணப்பெண் செய்யும் பலகாரம் பற்றி நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.

“அந்த பலகாரத்தை நான் சாப்பிட்டேன். ஆனால் அது இனிப்பா, காரமா, புளிப்பா என எதுவும் எனக்கு தெரியவில்லை. அது என்னவென்றே புரியவில்லை” என்று சிரித்தபடி தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த நமீதா, எந்தவித கூச்சமும் இல்லாமல் வெளிப்படையாக கூறினார். “நான் சமைத்ததே இல்லை. குஜராத் வழக்கப்படி முதலிரவுக்கு முன் மணப்பெண்கள் ஒரு வகை இனிப்பை செய்வார்கள். அதை மட்டும் நான் செய்து கொடுத்தேன். அதுதான் அவர் இப்படி சொல்கிறார். அதன் பிறகு நான் சமைக்கவே இல்லை. இதுவரை அதுதான் கடைசி” என்று தெரிவித்தார்.

பொதுவாக பெண்கள் தங்களுக்கு சமைக்கத் தெரியாது என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள தயங்குவார்கள். ஆனால் நமீதா எந்த வெட்கமும் இன்றி, தனது உண்மையான நிலையை சிரித்தபடி பகிர்ந்துகொண்டது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த பேட்டி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நமீதாவின் இந்த வெளிப்படையான பேச்சு, “நடிகைகளும் மனிதர்கள்தான், அவர்களுக்கும் சமையல் பிடிக்காமல் இருக்கலாம்” என ரசிகர்கள் பலரை சிந்திக்க வைத்துள்ளது. சினிமா உலகில் பிஸியாக இருக்கும் நமீதா, தனது திருமண வாழ்க்கையை இப்படி இலகுவாகவும் நகைச்சுவையாகவும் பகிர்ந்துகொள்வது அவரது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

English Summary : In a recent interview, actress Namitha openly shared that she does not cook. She prepared a traditional Gujarati sweet on her wedding day as per family custom, which was the last time she cooked. Her husband humorously recalled the moment. Her frank admission has caught public attention.
உடலுறவின் போது இதை செய்தால் மனைவி அடிமையாகிடுவாங்க.. ஆண்களுக்கு தெரியாத ரகசியத்தை உடைத்த மருத்துவர்!

உடலுறவின் போது இதை செய்தால் மனைவி அடிமையாகிடுவாங்க.. ஆண்களுக்கு தெரியாத ரகசியத்தை உடைத்த மருத்துவர்!