சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள தம்பிபட்டி கிராமத்தைச் சேர்ந்த 40 வயதான வடிவேல் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.
கடந்த ஜூன் மாதம், தன்னை கவிதா என்று அறிமுகப்படுத்திய ஒரு பெண் செல்போன் மூலம் அவரை தொடர்பு கொண்டார். அந்த பெண் தனக்கு அவசரமாக பணம் தேவைப்படுவதாகக் கூறி, ஜூன் 9ஆம் தேதி வடிவேலிடம் இருந்து ஜி-பே மூலம் ரூ.4,500 பெற்றுக்கொண்டார்.

இதன்பிறகு இருவரும் தொடர்ந்து செல்போனில் பேசி பழகினர். நாளடைவில் அவர்களது உரையாடல் நெருக்கமான தன்மையை அடைந்தது.
உல்லாசமா இருக்கலாம் வா.. எல்லாமே பண்ணுறேன்..
அந்த பெண், “காரைக்குடிக்கு வந்தால் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருக்கலாம்.. எல்லாமே பண்ணுறேன்..” என்று ஆசை வார்த்தைகள் கூறினார். இதனை நம்பிய வடிவேல், ஜூன் 24ஆம் தேதி காரைக்குடிக்கு சென்றார்.
அங்கு அந்த பெண் அவரை “கொஞ்சம் தனிமையாக பேசலாம்” என்று கூறி, அருகில் உள்ள ஒரு பழைய ஓட்டு வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
வீட்டிற்குள் நுழைந்ததும், ஏற்கனவே பதுங்கியிருந்த சிலர் திடீரென வெளியே வந்து வடிவேலை சூழ்ந்துகொண்டனர். அவரை வலுக்கட்டாயமாக நிர்வாணப்படுத்தி தாக்கிய அந்த கும்பல், ரூ.50 லட்சம் பணம் தருமாறு மிரட்டியது.
தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று வடிவேல் தெரிவித்த நிலையில், அவரிடமிருந்த ஹோண்டா இருசக்கர வாகனம் மற்றும் செல்போனை பறித்துக்கொண்டு அந்த கும்பல் தப்பி ஓடியது.
பின்னர் வீட்டிற்கு திரும்பிய வடிவேல், இந்த சம்பவம் குறித்து காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் உடனடியாக புகார் அளித்தார்.
காவல்துறையின் தீவிர நடவடிக்கை
புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், காரைக்குடி புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்தனர்.
விசாரணையில், இந்த சம்பவத்திற்கு முக்கிய பங்கு வகித்த கவிதா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மூன்று பேர் தலைமறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களை கைது செய்ய காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பைனான்ஸ் தொழில் செய்பவர்களை குறிவைத்து இத்தகைய திட்டமிட்ட பணம் பறிப்பு சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவதாக உள்ளூர் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். வழக்கு தொடர்பான மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
English Summary : In Sivaganga district, 40-year-old finance professional Vadivel from Thambipatti village was lured by a woman named Kavitha through phone calls. After receiving ₹4,500, she convinced him to meet in Karaikudi. On June 24, she took him to an old house where a gang assaulted him, demanded ₹50 lakh, and robbed his bike and phone. Police arrested Kavitha and Tamilselvan; three others are absconding.
இதையும் படிங்க :
இதையும் படிங்க :