செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் அருகே அனகாபுத்தூரைச் சேர்ந்த 28 வயது மீனா என்பவரின் கணவர் மணிகண்டன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு உடல்நிலை காரணமாக இறந்தார்.
இந்நிலையில் மீனா தனது 8 வயது மகளுடன் மாமனார் பெருமாள் (58) மற்றும் மாமியார் பத்மா (54) ஆகியோருடன் ஒரே வீட்டில் வசந்து வந்தார்.

இந்தச் சூழலில் மீனாவுக்கு மாமனார் பெருமாள் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனை மீனா கண்டித்ததுடன், மாமியாரிடம் தெரிவித்தார். இதனால் கோபமடைந்த பத்மா, கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
மாமனாரின் தொல்லைக்கு பயந்த மீனா, உறவினர் ஒருவரின் குழந்தையை துணைக்கு அழைத்து வந்தார். இரவு மூவரும் ஒரே அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு நேரத்தில் பெருமாள் கதவைத் தட்டினார்.
முதலில் கதவைத் திறக்காத மீனா, பின்னர் திறந்து என்ன வேண்டும் என்று கேட்டார். அப்போது பெருமாள் தவறான முறையில் நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
தன்னைத் தற்காத்துக்கொள்ள மீனா அங்கிருந்த அரிவாள் மணையைப் பயன்படுத்தி எதிர்த்தார். இதில் பெருமாள் காயமடைந்து சரிந்தார். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது பெருமாள் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
உடனடியாக சங்கர் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பெருமாளின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மீனாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணவனை இழந்து மூன்று மாத துக்கத்தில் இருந்த மருமகளுக்கு ஏற்பட்ட இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
English Summary : In Anagaputhur near Pallavaram in Chengalpattu district, 28-year-old widow Meena was living with her eight-year-old daughter and in-laws after her husband’s death three months ago. Late at night, her 58-year-old father-in-law Perumal entered the room and behaved inappropriately. While protecting herself, Meena used a sickle, resulting in Perumal sustaining fatal injuries. Police have recovered the body and are questioning Meena. The incident has caused shock in the area.இதையும் படிங்க :
இதையும் படிங்க :