கேமரா முன் உடலுறவு.. ஆபாச பட ஸ்டார் விவகாரம்.. “இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் மீது வழக்கு பதிவு” உண்மையில் நடந்தது என்ன?

பிரபல யூட்யூபர் வருண் (Varun Talks) தனது சமீபத்திய வீடியோவில், இன்ஸ்டாகிராம் கிரிஷ் & ஐஸ்வர்யா என்ற கப்புள் இன்ப்ளுவன்சர்கள் தங்கள் மகனை அமெரிக்காவில் ஒரு ஆபாச பட நடிகராகக வேண்டும் என பேசிய ரீல்ஸ் வீடியோவை கடுமையாக விமர்சித்தார்.

இந்த விவகாரம் தமிழ்நாட்டு சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில வாரங்களாகவே சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்புக்கு உள்ளாகியுள்ளது இந்த விவகாரம். இதனை தொடர்ந்து, கோயம்புத்தூரில் ஒரு வழக்கறிஞர் இந்த தம்பதியர் மீது சைபர் கிரைம் பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

மறுபக்கம், நாட்டில் எவ்வாளவோ பிரச்சனை நடக்கிறது. இவர்கள் இப்படி பேசியது தான் உங்களுக்கு பெரிய பிரச்சனையா? இவர் நிஜமாகவே நல்ல தம்பதியினர் தான். பொழுதுபோக்குக்காக, விளையாட்டாக செய்த ஒரு விஷயத்தை கொண்டு அவர்கள் மீது அபாண்டமான பழியை போடக்கூடாது. என்று கிரிஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதியினருக்கு ஆதரவாகவும் பலர் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

அதன் முன் உடலுறவு.. ஆபாச பட நடிப்பு..

சமீபத்தில் வெளியான ஒரு ரீலில், தங்கள் மகன் அமெரிக்காவில் செட்டில் ஆவது, அங்கு போர்ன் ஸ்டார் அதாவது கேமரா முன் உடலுறவு கொண்டு, ஆபாச பட நடிப்பு நட்சத்திரமாக்க வேண்டும் என்ற கொடூரத்தை சாதரமாண விஷயம் போல சொல்லி நார்மளைஸ் செய்தது, மட்டுமில்லாமல், பிரபல ஆபாச பட நிறுவனங்களின் பெயரை குறிப்பிட்டு அந்த நிறுவனங்களில் வேலை கிடைப்பது, அங்கு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொள்வது போன்றவற்றை விரிவாக விவாதித்துள்ளனர்.

இப்படி, சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ள இவர்களின் காணொளி குறித்து பிரபல யூட்யூபர் வருண் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்.வருணின் முக்கியக் கருத்துகள்

வருண் தனது வீடியோவில், “கப்புள் விலாகர்ஸ்” மற்றும் “கப்புள் கண்டென்ட் கிரியேட்டர்கள்” மீது பொதுவான அதிருப்தியை வெளிப்படுத்தினார். அவர்களின் உள்ளடக்கம் தனக்கு இடையூறாக இருப்பதாகவும், என்னுடைய அல்காரிதம் பெரும்பாலும் அவர்களைத் தவிர்ப்பதாகவும் கூறினார்.

இந்தச் சூழலில் கிரிஷ் & ஆயிஷா தம்பதியைச் சுட்டிக்காட்டி அவர் பேசியதாவது:

  • இவர்கள் ஏற்கெனவே திமுகவுக்கு ஆதரவாகவும், பின்னர் தவெக (TVK) கட்சிக்கு ஆதரவாகவும் அரசியல் உள்ளடக்கங்கள் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.
  • இதை “ஃபார்வர்ட் திங்கிங்” என்று அழைத்து, பெற்றோருக்கு தங்கள் குழந்தையின் எதிர்காலத்தைப் பற்றி கனவு காண உரிமை உண்டு என வருண் பகடி செய்தார்.

பெற்றோர் உரிமை vs சமூகப் பாதிப்பு

வருண் ஒருபுறம் பெற்றோரின் உரிமையைப் பாதுகாத்து பேசினாலும், மறுபுறம் கடுமையான எச்சரிக்கையும் விடுத்தார்:

  • போர்ன் இண்டஸ்ட்ரியில் உள்ள ஜானி சின்ஸ் & கிஷா சின்ஸ் போன்றோரின் உதாரணத்தைச் சுட்டிக்காட்டி, அந்தத் துறையில் அடிமைத்தனம், போதை, STDகள், மனநலப் பிரச்சனைகள், சமூக ஒதுக்கல் ஆகியவை பொதுவானவை எனக் குறிப்பிட்டார்.
  • பல போர்ன் நடிகைகள் பின்னர் தங்கள் குழந்தைகள் தங்கள் பழைய படங்களைப் பார்க்கக் கூடாது என வருந்துவதாகவும் சொன்னார்.
  • கப்புள் விலாகிங்-ல் பலர் மனைவியை “ஷோகேஸ்” செய்வது, குழந்தைகளை சிறு வயதிலேயே அதிகப்படியான எக்ஸ்போஷருக்கு உள்ளாக்குவது, வீட்டு வன்முறையை கூட காமெடியாகக் காட்டி வைரல் ஆவது போன்றவற்றை கடுமையாகச் சாடினார்.

சைபர் புகார் & சட்ட நடவடிக்கை

கோயம்புத்தூரைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர், இந்த ரீல் மூலம் குழந்தையின் எதிர்காலத்தை பாதிக்கும் வகையில் உள்ளடக்கம் உருவாக்கப்பட்டதாகக் கூறி சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார்.

இது POCSO சட்டத்தின் கீழ் வழக்காக மாறுமா என்பது இன்னும் தெளிவாகவில்லை. வருண் இதை “புதிய வகை சமூகப் பிரச்சனை” எனக் குறிப்பிட்டு, அரசு தகுந்த சட்டத் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினார்.

வருணின் இறுதி எச்சரிக்கை

“இது வெறும் கப்புள் ப்ளாக்கிங் இல்லை. இது பேட் இன்ப்ளுவன்சிங் (Bad Influencing). இன்று ஒரு குடும்பம் இப்படிப் பேசுகிறது என்றால், நாளை பல குடும்பங்கள் இதை நார்மலாக்கும். குழந்தைகளை காமப் பார்வையோடு பார்ப்பதை நியாப்படுத்தும் ஒரு குழு உருவாகும்” என வருண் எச்சரித்தார்.

இந்த விவகாரம் தற்போது தமிழ்நாட்டு ட்விட்டர் (X), இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தீவிர விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம் “பெற்றோரின் தனிப்பட்ட கனவுக்கு சமூகம் தலையிடக் கூடாது” என்கிற கருத்தும், மறுபுறம் “குழந்தையின் எதிர்காலத்தை பொதுவெளியில் இப்படி விவாதிப்பது பொறுப்பற்ற செயல்” என்கிற கருத்தும் மோதுகின்றன.

இந்த மோதலில், கிரிஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதியினரின் ரசிகர்கள் இவர்களின் முந்தைய கால செயல்பாடுகளை கொண்டு அவர்களை ஆதரிக்கும் விதமாககருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்தச் சம்பவம், சமூக ஊடக இன்ப்ளுவன்சர்களின் பொறுப்பு, குழந்தைகளின் தனியுரிமை மற்றும் டிஜிட்டல் உள்ளடக்க ஒழுங்குமுறை ஆகியவை குறித்த பரந்த விவாதத்தைத் தூண்டியுள்ளது.

Summary : YouTuber Varun discussed a couple's social media video in which they spoke about their son's future settlement in America and possible career paths in film production companies. He highlighted parental rights to plan for children while noting concerns over public sharing of such ideas and its influence on society. A legal complaint was later filed in this matter.