பிரபல கன்னட சீரியல் நடிகையும், தமிழ் தொலைக்காட்சியில் புகழ் பெற்ற ரக்ஷிதா மகாலட்சுமி தற்போது பாரம்பரிய புடவை அணிந்து வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
சமூக வலைதளங்களில் இந்தப் புகைப்படங்கள் வேகமாகப் பகிரப்பட்டு வருகின்றன. அழகிய தோற்றத்துடன் மென்மையான புன்னகையுடன் தோன்றும் ரக்ஷிதாவின் இந்தப் படங்கள் அவரது ரசிகர்களை மீண்டும் ஒருமுறை கவர்ந்திழுத்துள்ளன.

கன்னட தொலைக்காட்சித் தொடர்களில் அறிமுகமான ரக்ஷிதா மகாலட்சுமி, தமிழில் 'பிரிவோம் சந்திப்போம்' என்ற பிரபல தொடர் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.
அந்தத் தொடரில் தினேஷுடன் ஜோடியாக நடித்த அவர், பின்னர் பல தமிழ் மற்றும் கன்னட சீரியல்களில் முக்கிய வேடங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். சீரியல் ரசிகர்களிடையே அவருக்கு பெரும் வரவேற்பு இருந்தது.
விவாகரத்திற்கு இது தான் காரணம்!
2013ம் ஆண்டு 'பிரிவோம் சந்திப்போம்' தொடரில் ஜோடியாக நடித்த தினேஷை காதலித்து ரக்ஷிதா திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
சமீபத்தில் தினேஷ் தன்னை மிரட்டுவதாகவும், ஆபாசமான செய்திகளை அனுப்புவதாகவும் காவல்துறையில் புகார் அளித்திருந்தார் ரக்ஷிதா. இது தான் விவாகரத்திற்கு காரணம் எனவும் கூறினார். இந்தச் சம்பவம் அவரது தனிப்பட்ட வாழ்க்கையை மீண்டும் விவாதப் பொருளாக்கியது.
இருப்பினும், தனது தொழிலில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் ரக்ஷிதா, பிரபல ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மீண்டும் பெரும் புகழைப் பெற்றார்.
தற்போது வெள்ளித்திரையிலும் அசத்தி வரும் அவர், தனது வாழ்க்கையை சுதந்திரமாக வாழ்ந்து வருகிறார். விவாகரத்துக்குப் பிறகு புதிய கார், வீடு உள்ளிட்டவற்றை வாங்கி பெங்களூரில் தனது வாழ்க்கையை செட்டில் செய்துள்ளார்.
ரக்ஷிதாவின் உள்ளார்ந்த ஆசைகள்
சமீபத்தில் தனது விவாகரத்து குறித்து பேசிய ரக்ஷிதா, "என்னுடைய உலகத்தை நானே உருவாக்க நினைக்கிறேன்" என்று தெளிவாகக் கூறியுள்ளார். "எனக்குப் பலருக்கு உதவி செய்வதற்கு மிகவும் பிடிக்கும். நிறையப் பரிசுகளை மற்றவர்களுக்குக் கொடுப்பது பிடிக்கும்.
எல்லாவற்றிற்கும் மேலாகக் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்க வேண்டும், அவர்களைப் படிக்க வைக்க வேண்டும் என்ற பெரிய ஆசை இருக்கிறது" என்று தெரிவித்தார்.
"ஜாலியாக ஊர் சுற்றிக்கொண்டிருக்கும் எனக்குள் இப்படியொரு ஆசையும் இருக்கிறது. இதையெல்லாம் நான் சுதந்திரமாகச் செய்ய வேண்டும் என்றால் நான் தனியாகத்தான் இருக்க வேண்டும்.
இவை அனைத்திற்காகவும் தான் நான் எனக்கெனத் தனியாக ஒரு உலகத்தை உருவாக்கி வாழ்ந்து கொண்டிருக்கிறேன்" என்று உணர்ச்சிபூர்வமாகப் பதிலளித்துள்ளார் ரக்ஷிதா மகாலட்சுமி.
ரக்ஷிதாவின் இந்தப் பதில் பலரை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. தனது சொந்த வாழ்க்கையை சுதந்திரமாக வாழ்வதோடு, சமூகத்துக்கும் பங்களிப்பதில் ஆர்வம் காட்டும் அவரது மனப்பான்மை ரசிகர்களை ஈர்த்துள்ளது.
தற்போது புதிய புகைப்படங்களுடன் தனது ரசிகர்களை மகிழ்வித்து வரும் ரக்ஷிதா, தனது அடுத்தகட்ட திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டும் என்று அவரது ரசிகர்கள் வாழ்த்துகின்றனர்.
English Summary : Rakshita Mahalakshmi, the popular Kannada and Tamil serial actress, recently shared new saree photos that are being widely liked by fans. Known for her role in 'Pirivom Sandhippom', she was married to co-star Dinesh in 2013 and later separated. After participating in Bigg Boss, she has settled in Bangalore and shared her desire to help others and adopt children while living independently.