திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சீல் சாலை பகுதியில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை அறிய போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்சய் அணில் வாக்கர் தலைமையிலான போலீசார், அப்பகுதியில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் தொடர்ச்சியாக, இர்ஃபான் என்பவரது வீட்டில் இருந்து தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை போலீசார் கைப்பற்றினர்.
போதைப் பொருட்கள் வழங்கியதாக சந்தேகிக்கப்படும் இர்ஃபானின் உறவினர் பெண் தலைமறைவாக உள்ளதால், அவரை தீவிரமாக தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இப்பகுதியில் போதைப் பொருட்கள் புழக்கத்தை தடுக்க போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொதுமக்கள் இதுபோன்ற சந்தேகத்திற்குரிய நபர்களைப் பற்றிய தகவல்களை உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
English Summary : Tirupattur District SP Akshay Anil Wakkar led a surprise raid on shops along Vaniyambadi Seal Road to check for banned substances. Following the inspection, prohibited items were seized from Irfan's residence. Police are now searching for his absconding female relative linked to the case. Investigations are ongoing to curb drug-related activities in the area.