உடலுறவுக்கு முன் இதை செய்.. காதலியின் விசித்திர ஆசை.. நிறைவேற்றிய காதலன்.. இப்போது இரண்டு பேரும் சிறையில்..

கிருஷ்ணகிரி மாவட்டம் சூழகிரி தாலுக்கா தேவதாசன்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த 30 வயது ஹாசினி. அழகிய தோற்றம், பொன் நகைகள் அணிந்து புன்னகைக்கும் இவர், திருமணமான பெண், ஒரு குழந்தையின் தாய். ஆனால் இந்த புகைப்படத்தின் பின்னால் மறைந்திருக்கும் இருண்ட ரகசியம் பார்ப்பவர்களை அதிர்ச்சியில் உறைய வைக்கும்.

ஹாசினியின் கணவர் ரமேஷ். ஓசூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். 2024-ம் ஆண்டு ஹாசினிக்கும் ரமேஷுக்கும் திருமணம் நடைபெற்றது. தற்போது அவர்களுக்கு மௌனிகா என்ற 1.5 வயது மகளும் உள்ளார். ஹாசினியின் சொந்த ஊர் ஆந்திரா மாநிலம் சாந்திபுர மண்டலம் போயனப்பள்ளி கிராமம்.

திருமணத்துக்கு முன்பே ஹாசினி தன் சொந்த ஊரைச் சேர்ந்த சிறுவயது நண்பர் யோகேந்திரனை (யுகேந்திரன்) காதலித்து வந்தார். ரமேஷுடன் திருமணம் ஆன பிறகும், சொந்த ஊருக்கு அடிக்கடி சென்று வந்த ஹாசினி, யோகேந்திரனுடன் மீண்டும் தொடர்பு ஏற்படுத்தினார். இருவரும் திருமணத்துக்குப் பின்னரும் கள்ளக்காதலைத் தொடர்ந்தனர்.

ஒரு கட்டத்தில் ஹாசினி யோகேந்திரனிடம், “இந்த வாழ்க்கை எனக்குப் பிடிக்கவில்லை. உன்னுடனே நிரந்தரமாக இருக்க வேண்டும். ரமேஷுடன் வாழ முடியாது. நாம் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும்” என்று தெரிவித்தார்.

யோகேந்திரனும் சம்மதித்தார். ஆனால் விவாகரத்து சாத்தியமில்லை என்பதால், ஹாசினி தன் கணவரை கொலை செய்யும் கொடூரத் திட்டத்தை முன்வைத்தார். அடுத்த முறை என்னுடன் உடலுறவில் இருக்கணும்நா கணவன் ரமேஷை தீர்த்து கட்டு என்று கூறினாள். யோகேந்திரனும் அதற்கு ஒப்புக்கொண்டார்.

சதித் திட்டம் வெற்றி பெற்ற தருணம்...

திட்டப்படி, ரமேஷை சொந்த ஊர் போயனப்பள்ளிக்கு அழைத்துச் சென்றனர். மறுநாள் ஹாசினி கணவரிடம், “மதியம் கூடுப்பள்ளி மண்டலத்தில் உள்ள புகழ்பெற்ற மல்லப்பா மலை மல்லேஸ்வர சுவாமி கோயிலுக்கு போய் வரலாம்” என்று ஆசை காட்டினார். ரமேஷும் மனைவியின் விருப்பத்தை நிறைவேற்ற மகளுடன் பைக் மூலம் புறப்பட்டார்.

பைக்கில் மலை ஏறும் போது, ஹாசினி தொடர்ந்து யோகேந்திரனுக்கு தகவல் கொடுத்துக் கொண்டிருந்தார். மூன்றாவது வளைவில் ஹாசினி தன் கைப்பையை வேண்டுமென்றே கீழே தவறவிட்டார். “ஏங்க... பேக் கீழே விழுந்துருச்சு” என்று கூறி கணவரை நிறுத்தச் சொன்னார். ரமேஷ் பைக்கை நிறுத்திவிட்டு, “நீ இங்கேயே இரு, நான் போய் எடுத்துட்டு வரேன்” என்று கீழே இறங்கினார்.

அந்த நொடி... மலைப்பகுதியில் மறைந்திருந்த யோகேந்திரனும் அவரது நண்பர்கள் நான்கு பேரும் சேர்ந்து ரமேஷைச் சுற்றி வளைத்து தாக்கினர். பின்னர் அவரை அடர்ந்த வனப்பகுதிக்குள் இழுத்துச் சென்று கத்தியால் கொடூரமாகத் தாக்கி கொலை செய்தனர். உடலை புதருக்குள் வீசிவிட்டு தப்பினர்.

பின்னர் யோகேந்திரன் ரமேஷின் பைக்கிலேயே ஹாசினியையும் குழந்தையையும் ஏற்றிக்கொண்டு அருகிலுள்ள ரயில் நிலையத்துக்குச் சென்று, பைக்கை அங்கே விட்டுவிட்டு ரயிலில் ஏறி தப்பியோடினர்.

பெற்றோர்களின் அதிர்ச்சி, போலீஸ் தேடுதல்

மதியம் கோயிலுக்கு போவதாகக் கூறி சென்ற மகள், மருமகன், பேத்தி மாலை வரை திரும்பாததால் ஹாசினியின் தாய் ருக்கம்மா பயந்துபோனார். தொடர்பு கொள்ள முடியாததால் அடுத்த நாள் காலையில் நல்லபுதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

குப்பம் டிஎஸ்பி பார்த்தசாரதி தலைமையிலான போலீசார் உடனடியாக மல்லப்பா மலைக்கு சென்று தேடினர். புதருக்குள் ரத்த வெள்ளத்தில் ரமேஷின் உடல் கிடந்தது. ஆனால் ஹாசினியும் குழந்தையும் காணவில்லை. சுற்றுப்புற சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது அதிர்ச்சி காத்திருந்தது — ரமேஷுடன் வந்த ஹாசினி, பின்னர் யோகேந்திரனுடன் அதே பைக்கில் குழந்தையுடன் தப்பிச் செல்வது பதிவாகியிருந்தது.

போலீசார் யோகேந்திரனுக்கு உதவிய கூட்டாளிகளை மொபைல் நம்பர் மூலம் கண்டுபிடித்து அதிரடியாக கைது செய்தனர். ஆனால் ஹாசினியும் யோகேந்திரனும் இன்னும் தலைமறைவாக உள்ளனர். அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

எல்லையோரப் பகுதியில் நடந்த இந்த கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்காதலுக்காக கணவரை கோயிலுக்கு அழைத்துச் சென்று கொலை செய்து, குழந்தையுடன் தப்பிய ஹாசினி-யோகேந்திரன் ஜோடியை போலீசார் விரைவில் பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


English Summary : Hasini, a 30-year-old woman from Devadasanpalli village in Krishnagiri district, is married to Ramesh who works in Hosur. The couple has a one-and-a-half-year-old daughter Maunika. Hasini maintained a close connection with her childhood friend Yogendra from Andhra Pradesh. 

During a temple visit to Mallappa hill, an unexpected situation occurred involving Ramesh. Hasini and Yogendra left the place with the child. Police are investigating and have detained some associates.

உடலுறவின் போது இதை செய்தால் மனைவி அடிமையாகிடுவாங்க.. ஆண்களுக்கு தெரியாத ரகசியத்தை உடைத்த மருத்துவர்!

உடலுறவின் போது இதை செய்தால் மனைவி அடிமையாகிடுவாங்க.. ஆண்களுக்கு தெரியாத ரகசியத்தை உடைத்த மருத்துவர்!