ஜோதிகா அட்ஜெஸ்ட்மெண்ட்? ஓகே சொல்லிடுவாங்க.. அதிலும், இதை சொல்லவே கூச்சமா இருக்கு.. பகீர் கிளப்பிய நடிகை!

நடிகை மற்றும் நடன இயக்குனருமான நபிஷா, NEWS TIME TAMIL யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தனது சினிமா அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். அந்த பேட்டியில் நடிகை ஜோதிகா திருமணத்திற்குப் பிறகு தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்கள் குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

பேட்டியில் நபிஷா கூறியதாவது: ஜோதிகா திருமணத்துக்கு முன்பு எந்த மாதிரியான கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், திருமணத்திற்குப் பிறகு இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் நிலையில், சில படங்களில் மோசமான காட்சிகளில் நடிப்பது பொருத்தமற்றது என்று தெரிவித்தார்.

“திருமணத்திற்குப் பிறகு 36 வயதினில் என்ற படத்தில் அழகாக நடித்திருந்தார். அதன் பிறகு ரேவதியுடன் இணைந்த படமும் நல்லதாக இருந்தது. ஆனால் அதற்குப் பிறகு மும்பை சென்று இரண்டு-மூன்று படங்களில் நடித்தார்.

ஒரு படத்தைப் பார்த்தபோது எனக்கு உடம்பு நடுங்கியது. ஆபாசம் என்றால் வெறும் நிர்வாணம் மட்டும் இல்லை, காட்சிகளை மறைமுகமாகக் காட்டினாலும் அது பாதிப்பை ஏற்படுத்தும்” என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், தமன்னா, திரிஷா போன்ற நடிகைகள் கவர்ச்சியான பாத்திரங்களில் நடிப்பதை சுட்டிக்காட்டிய நபிஷா, “அவர்களுக்கு குடும்பப் பின்னணி இல்லை. ஆனால் ஜோதிகாவுக்கு சூர்யா, சிவக்குமார் போன்ற பெரிய பின்னணி இருக்கிறது. மருமகளாக, மனைவியாக, தாயாக இருக்கும் போது இப்படியான அட்ஜஸ்ட்மெண்ட் தேவையா?” என்று கேள்வி எழுப்பினார்.

திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பது குறித்து பல்வேறு நிபந்தனைகள் விதித்ததாக கூட செய்திகளை பார்க்கிறோம், கார்த்திக் தம்பதியர் போல குடும்பப் பெயரைக் காப்பாற்ற வேண்டும் என்றும் நபிஷா தன் கருத்தைப் பதிவு செய்தார். “வெளியில் இருந்து வந்து குடும்பத்தின் பெயரை கெடுக்கும் விதமாக இருக்கக் கூடாது” என்றும் அவர் தெரிவித்தார்.

நபிஷாவின் இந்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சிலர் அவரது கருத்தை ஆதரிக்கும் வகையில் பதிவிட்டு வருகின்றனர். மற்றவர்கள் நடிகைகளின் தனிப்பட்ட தேர்வுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள், இவங்க யார்? லேடி பயில்வான் ரங்கநாதன் மாதிரி பேசுறாங்க என்று கலாய்த்து வருகின்றனர். அதே சமயம், இவர் சொல்வது உண்மை தான் என்றும் சிலர் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

ஜோதிகா ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் இந்த விவகாரத்தை உற்று நோக்கி வருகின்றனர். இந்த பேட்டியின் முழு வீடியோவை NEWS TIME TAMIL சேனலில் அல்லது இந்த லிங்கில் பார்க்கலாம் https://www.youtube.com/watch?v=UQiJNZa3VAoபார்க்கலாம்.

English Summary : In a viral interview on NEWS TIME TAMIL, actress and choreographer Nabisha shared her views on Jyothika’s film roles after marriage. She questioned the need for certain bold scenes, highlighting Jyothika’s position as Suriya’s wife, Sivakumar’s daughter-in-law, and mother of two children. Nabisha contrasted this with other actresses who adjust to such roles.
உடலுறவின் போது இதை செய்தால் மனைவி அடிமையாகிடுவாங்க.. ஆண்களுக்கு தெரியாத ரகசியத்தை உடைத்த மருத்துவர்!

உடலுறவின் போது இதை செய்தால் மனைவி அடிமையாகிடுவாங்க.. ஆண்களுக்கு தெரியாத ரகசியத்தை உடைத்த மருத்துவர்!