“அம்மா சொல்றேன் கேளுங்க… வீட்ல இருக்கிற தங்க நகையை வித்துடுங்க” என்று டிவியில் விளம்பரம் பேசும் குரல், தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ‘புன்னகை அரசி’ என்று அழைக்கப்பட்ட நடிகை கே.ஆர். விஜயாவின் குரல்தான்.
நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து, 1960-களில் லேடீஸ் சூப்பர் ஸ்டார் ஆன அந்த நடிகையின் வாழ்க்கை இன்று முற்றிலும் மாறிப்போய் இருக்கிறது.

கே.ஆர். விஜயாவின் தந்தை ராமச்சந்திர ராவ் ராணுவ வீரர். ஓய்வு பெற்ற பிறகு நடிகர் எம்.ஆர். ராதாவின் நாடகக் கம்பெனியில் சேர்ந்தார். அதற்காக குடும்பம் தமிழ்நாட்டின் பழனிக்கு இடம்பெயர்ந்தது. அந்தக் காலத்தில் குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்தது.
உடன் பிறந்தவர்கள் ஐந்து பேர் – நான்கு சகோதரிகளும் ஒரு சகோதரரும். சிறு வயதிலேயே நாடகக் கம்பெனிகளில் சிறு வேடங்களில் நடித்து, நடனமாடி குடும்பத்துக்கு உதவினார் விஜயா.
தந்தை ராமச்சந்திர ராவ் ஒரு ஆசை வைத்திருந்தார். “என் மகளை தமிழ் சினிமாவில் நடிக்க வைத்தால் குடும்ப வறுமை நீங்கும்” என்று. அதற்காக மூத்த மகள் தெய்வநாயகியின் பெயரை ‘கே.ஆர். விஜயா’ என்று மாற்றினார். இந்தப் பெயர் மாற்றத்துக்கு ஆலோசனை தந்தவர் எம்.ஆர். ராதாவே. சினிமா வாய்ப்புக்காக குடும்பம் பழனியிலிருந்து சென்னைக்கு இடம்பெயர்ந்தது.
1963-ல் ‘கற்பகம்’ படத்தில் ஜெமினி கணேசனுக்கு ஜோடியாக ‘ஜோதி’ வேடத்தில் அறிமுகமானார். அந்தப் படம் பெரும் வெற்றியைத் தந்தது. அதன் பிறகு தொடர்ந்து வாய்ப்புகள் வந்தன.
நல்ல நேரம் உள்ளிட்ட பல எம்.ஜி.ஆர் படங்களிலும், ஊட்டி வரை உறவு, தங்கை செல்வம், ராமன் எத்தனை ராமனடி, சொர்க்கம், தவப்புதல்வன், திரிசூலம், தங்கப்பதக்கம், ரிஷிமூலம் போன்ற பல சிவாஜி படங்களிலும் நடித்தார்.
அந்தக் காலத்தில் அவரது புன்னகை மட்டும் போதும் – பார்வையாளர்கள் மயங்கினர். அதனால்தான் ‘புன்னகை அரசி’ என்ற பெயர் நிலைத்தது.
தனிப்பட்ட வாழ்க்கையில் சுதர்சன் கம்பெனியின் முதலாளியும் தயாரிப்பாளருமான சுதர்சனை மணந்தார். அவருக்கு ஏற்கனவே இரண்டு மனைவிகள் இருந்தனர். அந்த திருமணம் அவரது வாழ்க்கையில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்தது. எவ்வளவு பெரிய நடிகையாக இருந்தாலும், முதல் இரண்டு மனைவிகளும் கடைசி வரை கே.ஆர்.விஜயா எங்கள் புருஷனின் வப்பாட்டி தான் என்று வெளிப்படையாகவே பேசினார்கள். சினிமா வாய்ப்புகள் குவிந்தது என்றாலும் வீட்டு வாழ்க்கை எளிதாக இல்லை.
பிறகு காலம் மாறியது. தனது தாயின் வாழ்க்கை முறை பிடிக்காமல் மகள் காதல் திருமணம் செய்து வீட்டை விட்டுச் சென்றுவிட்டார். கணவர் வேலாயுதம் 2016-ம் ஆண்டு இறந்துவிட்டார். அதன் பிறகு விஜயா தனியாகவே வாழ்கிறார்.
ஒரு காலத்தில் திரையில் சிரித்து, ஆயிரக்கணக்கான மக்களை சிரிக்க வைத்த நடிகை, இன்று வீட்டில் தனிமையிலும் கண்ணீரிலும் வாழ்கிறார். ‘புன்னகை அரசி’ என்று அழைக்கப்பட்ட அந்த முகத்தில் இப்போது புன்னகை இல்லை. அதுதான் மிகப்பெரிய சோகம்.
கே.ஆர். விஜயாவின் வாழ்க்கை ஒரு பக்கம் பெரும் வெற்றி, மறுபக்கம் ஆழ்ந்த தனிமை. சினிமா உலகம் கொடுத்த புகழும், வாழ்க்கை கொடுத்த பாடங்களும் இணைந்த கதை இது.
Summary : Veteran Tamil actress K.R. Vijaya, fondly called the Queen of Smiles, rose from a humble background to stardom after her 1963 debut in Karpagam opposite Gemini Ganesan. She acted in over a hundred Tamil and Telugu films with leading stars. After personal setbacks and living alone in later years, her once radiant smile has given way to quiet solitude.
