கடைசிவரை வப்பாட்டியாகவே வாழ்ந்த லேடி சூப்பர் ஸ்டார் கே.ஆர்.விஜயாவின் கொடுமையான கண்ணீர் கதை
“அம்மா சொல்றேன் கேளுங்க… வீட்ல இருக்கிற தங்க நகையை வித்துடுங்க” என்று டிவியில் விளம்பரம் பேசும் குரல், தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ‘புன்னகை அரசி’ என்று அழைக்கப்பட்ட நடிகை கே.ஆர். விஜயாவின் குரல்தான். நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து, 1960-களில் லேடீஸ் சூப்பர் ஸ்டார் ஆன அந்த நடிகையின் வாழ்க்கை இன்று முற்றிலும் மாறிப்போய் இருக்கிறது. கே.ஆர். விஜயாவின் தந்தை ராமச்சந்திர ராவ் ராணுவ வீரர். ஓய்வு பெற்ற பிறகு நடிகர் எம்.ஆர். ராதாவின் நாடகக் கம்பெனியில் சேர்ந்தார். அதற்காக குடும்பம் தமிழ்நாட்டின் பழனிக்கு இடம்பெயர்ந்தது. அந்தக் காலத்தில் குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்தது. உடன் பிறந்தவர்கள் ஐந்து பேர் – நான்கு சகோதரிகளும் ஒரு சகோதரரும். சிறு வயதிலேயே நாடகக் கம்பெனிகளில் சிறு வேடங்களில் நடித்து, நடனமாடி குடும்பத்துக்கு உதவினார் விஜயா. தந்தை ராமச்சந்திர ராவ் ஒரு ஆசை வைத்திருந்தார். “என் மகளை தமிழ் சினிமாவில் நடிக்க வைத்தால் குடும்ப வறுமை நீங்கும்” என்று. அதற்காக மூத்த மகள் தெய்வநாயகியின் பெயரை ‘கே.ஆர். விஜயா’ என்று மாற்றினார். இந்தப் பெயர் மாற்றத்துக்கு ஆலோசனை தந...