மத்தியப் பிரதேச மாநிலம் ஷஜாபூர் மாவட்டத்தில் ஒரு இளைஞருக்கு நடந்த திருமணம், அதன் பின் ஏற்பட்ட சந்தேகங்கள், குடும்ப மோதல் மற்றும் போலீஸ் புகார் ஆகியவை இப்போது பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
32 வயதான இந்த இளைஞர் காய்கறி வியாபாரம் செய்து வருபவர். அவரது குடும்பம் அண்டை வீட்டாரின் மூலம் ராஜ்கர் மாவட்டம் பச்சோர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணைப் பார்த்து திருமணம் நிச்சயித்தது. குடும்பம் அடுத்த ஆண்டுக்கு திருமணத்தை ஒத்திவைக்க விரும்பியபோதும், பெண் வீட்டார் விரைவில் திருமணம் நடத்த வேண்டும் என வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஜூன் 29ஆம் தேதி பச்சோரில் உள்ள ஒரு கோயிலில் இந்து மதச் சடங்குகளின்படி திருமணம் நடைபெற்றது. மணமகன் குடும்பம் சுமார் 5 லட்சம் ரூபாய் செலவழித்ததாகவும், பெண் வீட்டாருக்கு 1 லட்சம் ரூபாய் பணமாக அளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமணத்திற்கு அடுத்த நாள் முதலே முதல் இரவு நடைபெறவில்லை. ஆசையாக முதலிரவு அறைக்குள் நுழைந்த மணமகனிடம் மணமகள் மாதவிடாய் காலம் என்று சொல்லி தள்ளினார். அடுத்த நாள் வயிற்று வலி என மற்றொரு காரணம் கூறினார். ஜூலை 2ஆம் தேதி மணமகள் தன் தாய் வீட்டுக்குச் சென்றார். சுமார் மூன்று வாரங்கள் கழித்து ஜூலை 23ஆம் தேதி மீண்டும் கணவன் வீட்டுக்கு வந்தார்.
அதன் பிறகுதான் குடும்பத்தினருக்கு சந்தேகம் வலுத்தது. மணமகனின் அண்ணியார் (ஜேத்தானி) மணமகளின் முகத்தில் சவரம் செய்வதற்கான கிரீம் பூசியிருப்பதைப் பார்த்தார்.
கேட்டபோது சவரம் செய்கிறேன் என மணமகள் ஒப்புக்கொண்டார். கை, கால் மற்றும் உடலில் ஆண்மைத் தன்மை கொண்ட முடிகள் இருப்பதும் கவனிக்கப்பட்டது. அடுத்த நாள் குடும்பத்தினர் கூடுதல் சந்தேகத்துடன் ஆராய்ந்ததில், மணமகள் திருநங்கை என குடும்பம் உறுதி செய்ததாகக் கூறுகின்றனர்.
ஜூலை 24ஆம் தேதி மணமகன் குடும்பம் பெண் வீட்டாருக்கு தகவல் தெரிவித்து, மணமகளை அழைத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்டது. பெண் வீட்டார் ஷஜாபூருக்கு வந்தனர். ஆனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டு, மணமகன் குடும்பத்தினரைத் தாக்கி திட்டியதாக புகார் எழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து ஜூலை 25ஆம் தேதி ஷஜாபூர் கோத்வாலி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
போலீசார் மணமகளின் தந்தை லட்சுமிநாராயண் உள்ளிட்ட ஐந்து பேர் மீது (ஆசாத், ராகேஷ், ராஜா, சந்த்ரோபாய் – அனைவரும் ராஜ்கர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்) வழக்குப் பதிவு செய்துள்ளனர். மோசடி, தாக்குதல் மற்றும் பணத்தை அபகரித்தல் தொடர்பான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோத்வாலி போலீஸ் நிலையப் பொறுப்பாளர் சந்தோஷ் பாகேலா கூறுகையில், “இந்த நபர் திருநங்கையா என்பதை மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகுதான் உறுதிப்படுத்த முடியும். குற்றச்சாட்டுகள் உண்மை என நிரூபிக்கப்பட்டால் மோசடி வழக்கில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வரும் வரை குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதை போலீசார் தெளிவுபடுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் திருமணத்திற்கு முன் முக்கிய தகவல்களை மறைப்பது, குடும்பங்கள் இடையே நம்பிக்கை இழப்பு மற்றும் சட்டரீதியான சிக்கல்கள் குறித்து பலரும் பேசத் தொடங்கியுள்ளனர். விசாரணை முடிவுகள் என்னவாக இருக்கும் என்பதை காத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது.
English Summary : In Shajapur, Madhya Pradesh, a 32-year-old vegetable vendor claimed 25 days after his June 29 temple wedding that his bride is transgender. Excuses delayed intimacy; his sister-in-law later spotted her shaving and body hair. Family confronted in-laws, leading to alleged assault. Police registered a case against five for cheating and assault; medical verification pending.

