உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் உள்ள பால்தேவ் காவல் நிலையத்திற்குட்பட்ட சௌலி கிராமத்தில் அதிர்ச்சியூட்டும் ஒரு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடந்த ஜூன் 28-ஆம் தேதி அன்று தனது மூன்று வயது ஆண் குழந்தையைத் தாயே உயிரிழக்கச் செய்த விவகாரம் தற்போது அப்பகுதியில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

ஆரம்பத்தில் இந்த மரணம் இயற்கையானது என்று நம்பப்பட்டு சிறுவனின் இறுதிச் சடங்குகளும் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் முடிக்கப்பட்ட நிலையில், ஒரு மாதத்திற்குப் பிறகு இந்த மறைக்கப்பட்ட உண்மை வெளியே வந்துள்ளது.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட தாயான பிரியா சர்மா தனது கள்ளக்காதலனுடன் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது, அவரது மூன்று வயது மகனான ஆரவ் விளையாடிக்கொண்டே சத்தமிட்டு அழுதுள்ளான்.
தன் போன் உரையாடலுக்குக் குறுக்கிட்டு குழந்தை அழுது தொந்தரவு செய்ததால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், சிறுவனின் அழுகையை நிறுத்துவதற்காக அவனைக் கைக் கொண்டு அமைதிப்படுத்த முயன்றபோது தவறுதலாக உயிரிழக்கச் செய்துள்ளாள்.
இதில் மூச்சுத்திணறி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்ததைத் தொடர்ந்து, குடும்பத்தினரிடம் அதனை மறைத்து இயல்பான மரணம் போல நாடகமாடியுள்ளனர்.
மேலும் அக்கம் பக்கத்தில் நடத்தப்பட்ட விசாரணையில், அந்தத் தாய் தனது கள்ளக்காதலுடன் உடலில் உடை இல்லாமல் சமையலறையில் நின்றுகொண்டு வீடியோ காலில் அந்தரங்க செயல்களில் ஈடுபட்டிருந்ததாகத் தகவல் கிடைத்துள்ளது.
இதனை நேரில் பார்த்த மகன் “யார் இந்த அங்கிள்?” என்று கேட்டிருக்கிறான். இதனால் அதிர்ந்துபோன அந்தத் தாய், இந்த விஷயத்தைத் தன் கணவரிடம் கூறிவிடுவான் என்ற பயத்தில் அந்தக் குழந்தையை உயிரிழக்கச் செய்திருக்கிறாள்.
சம்பவம் நடந்து சுமார் ஒரு மாதம் கடந்த நிலையில், மனசாட்சியின்றி மறைத்து வைக்கப்பட்ட உண்மையை அந்தப் பெண் திடீரென தனது கணவனிடம் அழுது ஒப்புக்கொண்டுள்ளார். இதனால் அதிர்ந்துபோன குழந்தையின் மாமா ரமேஷ் சர்மா, கடந்த ஜூலை 27-ஆம் தேதி அன்று மாலை 112 டயல் மூலம் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலின் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட மதுரா காவல்துறையினர் இந்தச் செயலில் ஈடுபட்ட தாயின் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Summary in English : In Mathura district of Uttar Pradesh, a mother named Priya Sharma faces police inquiry after her three-year-old son Aarav passed away on June 28. The matter was first treated as natural. A month later she revealed the facts to her husband. The child’s uncle Ramesh Sharma informed authorities on July 27. Further checks pointed to private phone conversations that led to the sequence of events. Mathura police have registered a case and continue the probe.
