சென்னை : ஜெம் கிரானைட்ஸ் குழுமத் தலைவர் வீரமணி தொடர்பான போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தி, வழக்கு பதிவுக்குப் பின்னரும் சமூக வலைத்தளங்களில் நடன ரீல்ஸ் வெளியிட்டு வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
50 வயதைத் தாண்டிய நிலையிலும் தினமும் பாடல்களுக்கு ஆட்டம் போட்டு வீடியோ போடும் பழக்கம் அவருக்கு இருந்ததாகக் கூறப்படுகிறது.

1989-ல் அறிமுகமான சாந்தி, 30 ஆண்டுகளுக்கு மேலாக வீரமணியுடன் நெருக்கமாக இருந்ததாக காவல் துறை தரப்பு தெரிவிக்கிறது. அதனால்தான் இந்த வழக்கில் அவரை உடந்தையாகச் சேர்த்து கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அவர் அளித்த தகவல்களின் அடிப்படையிலேயே பாதிக்கப்பட்ட சிறுமிகள் பலர் அடையாளம் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு அக்டோபரில் வழக்கு பதிவு செய்யப்பட்ட பிறகும், ஆகஸ்ட் 26 ஓணம் வரை இடைவிடாமல் ரீல்ஸ் வெளியிட்டு வந்தார் சாந்தி. ஆகஸ்ட் 29-ல் வீரமணி, சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர்.
கைதுக்குப் பிறகு சாந்தி முன்கூட்டியே பேசி வைத்ததாகக் கூறப்படும் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. அதில் தான் சிறு வயதிலேயே பாதிக்கப்பட்டதாகவும், நம்பிக்கையைப் பயன்படுத்தி தன்னைச் சுயநலத்திற்குப் பயன்படுத்தியதாகவும் அவர் கூறியிருப்பதாகத் தெரிகிறது. இந்த வீடியோவை யார் பரப்பியது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
முதலில் சில மாதங்கள் விசாரணை நடத்திய உதவி ஆணையர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர் குழுவால் வீடியோவில் உள்ள சிறுமியைக் கண்டுபிடிக்க முடியாமல் வழக்கை முடிக்க மனு தாக்கல் செய்யப்பட்டது.
நீதிமன்றம் மறுவிசாரணை உத்தரவிட்ட பிறகு புதிய குழு இந்த வழக்கை எடுத்தது. அப்போது சாந்தியின் தகவல்கள் உதவியதாகக் கூறப்படுகிறது.
தற்போது வீரமணி உள்ளிட்டோர் சிறையில் உள்ளனர். மேலும் சிலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Summary in English : Shanthi, long associated with granite group head Veeramani since 1989, was arrested in the Chennai case along with him and her husband. Police say her details helped identify several girls after an earlier probe nearly closed. She kept posting dance reels even after last year’s complaint. A pre-recorded clip of her later circulated online; officers are checking who shared it.