Posts

Showing posts with the label dance reels

மலையூரு நாட்டாம.. மனச காட்டு பூட்டாம.. ஜெம் வீரமணி தோழி ஆட்டம்..! தினம் ஒரு ரீல்ஸ்.. அப்ப இது ரியலா?

Image
சென்னை : ஜெம் கிரானைட்ஸ் குழுமத் தலைவர் வீரமணி தொடர்பான போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தி, வழக்கு பதிவுக்குப் பின்னரும் சமூக வலைத்தளங்களில் நடன ரீல்ஸ் வெளியிட்டு வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 50 வயதைத் தாண்டிய நிலையிலும் தினமும் பாடல்களுக்கு ஆட்டம் போட்டு வீடியோ போடும் பழக்கம் அவருக்கு இருந்ததாகக் கூறப்படுகிறது. 1989-ல் அறிமுகமான சாந்தி, 30 ஆண்டுகளுக்கு மேலாக வீரமணியுடன் நெருக்கமாக இருந்ததாக காவல் துறை தரப்பு தெரிவிக்கிறது. அதனால்தான் இந்த வழக்கில் அவரை உடந்தையாகச் சேர்த்து கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அவர் அளித்த தகவல்களின் அடிப்படையிலேயே பாதிக்கப்பட்ட சிறுமிகள் பலர் அடையாளம் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு அக்டோபரில் வழக்கு பதிவு செய்யப்பட்ட பிறகும், ஆகஸ்ட் 26 ஓணம் வரை இடைவிடாமல் ரீல்ஸ் வெளியிட்டு வந்தார் சாந்தி. ஆகஸ்ட் 29-ல் வீரமணி, சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். கைதுக்குப் பிறகு சாந்தி முன்கூட்டியே பேசி வைத்ததாகக் கூறப்படும் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. அதில் தான் சிறு வயதிலேயே பாதிக்கப்...

வாய் முழுக்க “கூல் லிப்” துண்டு துண்டாக வெட்டி.. ஒரே ஊரில் இத்தனை கிரைம்களா? இணையத்தை அதிரவிட்ட இளம்பெண்!

Image
தென்காசி மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பெண் தொடர்ந்து சினிமா பாடல்களுக்கு டான்ஸ் ஆடி ரீல்ஸ் வெளியிட்டு வருபவர். ஆனால், சமீபத்தில் வெளியிட்ட ஒரு வீடியோவில், தனது சொந்த ஊரில் நடைபெற்று வரும் பல்வேறு கொடூரமான குற்றங்கள் மற்றும் சமூக சீர்கேடுகளை கடுமையாக விமர்சித்துள்ளார். வீடியோவில் என்ன கூறியுள்ளார்? வீடியோவில் அவர் ஆவேசமாக பேசியதாவது: தனது டான்ஸ் ரீல்ஸ்களைப் பார்த்து சிலர் தப்பாக பேசுவதாகவும், ஊரின் மானம் போகிறது என்று கூறுவதாகவும் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். ஆனால், ஊரில் நடைபெற்றுள்ள பல கொடூர சம்பவங்களை எடுத்துக்காட்டி, "அப்போது ஊர்மானம் போகலையா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். அவர் குறிப்பிட்ட சில அதிர்ச்சி தரும் சம்பவங்கள்: 12ஆம் வகுப்பு படிக்கும் பெண்ணை சிறு வயதிலேயே திருமணம் செய்து கொடுத்து, ஒரு மாதத்திலேயே கணவன் வெட்டிக் கொன்றது (கணவன் தற்போது ஜெயிலில் உள்ளான்). கறி வாங்க சென்ற சின்னக் குழந்தையை கறிக்கடையிலேயே பாலியல் வன்கொட...