கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்! நூதன முறையில் படம் பிடித்த கணவன்! தீயாய் பரவும் கன்றாவி வீடியோ!

தைவானின் தாவோயுவான் மாவட்டத்தில் நடந்த இந்த வழக்கு, ஸ்மார்ட் வீட்டு சாதனங்கள் ஒருபுறம் உண்மையை வெளிப்படுத்தும் ஆயுதமாகவும், மறுபுறம் தனியுரிமை மீறல் குற்றமாகவும் மாறும் என்பதை உலகுக்குக் காட்டியுள்ளது.

திருமண உரிமை மீறலை நிரூபித்து சிவில் வழக்கில் வெற்றி பெற்ற கணவர், அதே ஆதாரத்தைப் பெற்ற விதத்தால் குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றவாளியாகி ஐந்து மாத சிறைத் தண்டனை பெற்றுள்ளார்.

2021-ல் திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதியர் பெரும்பாலும் கணவரின் பெற்றோருடன் வசித்து வந்தனர். விடுமுறை நாட்களில் மட்டும் தாவோயுவான் குய்ஷான் பகுதியில் இருந்த தங்கள் விடுமுறை இல்லத்திற்குச் செல்வார்கள்.

2023 செப்டம்பரில் அந்த வீட்டிற்குச் சென்ற கணவர், தனக்கோ மனைவிக்கோ சொந்தமில்லாத பயன்படுத்தப்பட்ட பல் துலக்கும் தூரிகையையும் வேறு சில பொருட்களையும் கண்டார். சந்தேகம் எழுந்தது.

அடுத்து பார்க்கிங் பகுதியின் கண்காணிப்பு காமிரா பதிவுகளைப் பார்த்தார். அதில், முன்பு மனைவியை வீட்டிற்குக் கொண்டுவந்த அறிமுகமில்லாத ஒரு ஆண் தென்பட்டார். அவர் அங்கு தங்கிச் சென்றதற்கான தடயங்களும் இருந்தன. இதற்குப் பிறகு கணவரின் சந்தேகம் மேலும் வலுப்பெற்றது.

மூன்று மாதங்கள் கழித்து, 2023 டிசம்பர் 24 அன்று, அவர் மொபைல் செயலி மூலம் வீட்டில் இருந்த ரோபோ வெற்றி சுத்தம் செய்யும் கருவியைத் தொலைவிலிருந்து இயக்கினார்.

ஆரம்பத்தில் மனைவியுடன் பேசுவதற்காக அந்தக் கருவியின் ஒலி வசதியைப் பயன்படுத்த நினைத்ததாக அவர் பின்னர் நீதிமன்றத்தில் கூறினார். ஆனால் நேரலை காட்சியில் வீட்டிற்குள் வேறொரு ஆண் இருப்பதைக் கண்டதும், பதிவு செய்யும் வசதியைத் தனியாக இயக்கினார்.

அந்தப் பதிவில் மனைவி அந்த ஆணுடன் நெருக்கமாக இருந்ததும், உடை மாற்றும் தருணங்களும், உடை இல்லாத நிலையில் வீட்டிற்குள் நடமாடியதும் பதிவாகியிருந்ததாக வழக்கு விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு கணவர், மனைவி மற்றும் அந்த ஆண் மீது சிவில் வழக்கு தொடர்ந்தார். திருமண உரிமை மீறப்பட்டதாகக் கூறி NT$20 லட்சம் (சுமார் ₹60 லட்சம்) இழப்பீடு கோரினார்.

சிவில் நீதிமன்றம், இருவரின் தொடர்பு சாதாரண நட்பு எல்லையைத் தாண்டியிருப்பதாகக் கண்டறிந்தது. இருவரும் இணைந்து கணவருக்கு NT$5 லட்சம் (சுமார் ₹15 லட்சம்) இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.

தைவானில் திருமணத்தை மீறிய தொடர்பு குற்றவியல் குற்றமல்ல. ஆனால் மன உளைச்சல் மற்றும் திருமணக் கடமை மீறலுக்காக சிவில் இழப்பீடு கோர முடியும். அந்த வகையில் கணவர் வெற்றி பெற்றார்.

ஆனால் இங்கேதான் வழக்கு திருப்பத்தை எடுத்தது. மனைவி தனியாக குற்றவியல் புகார் அளித்தார். தனது அனுமதியின்றி அந்தரங்கத் தருணங்களை ரோபோ கருவி மூலம் பதிவு செய்ததாகக் குற்றம் சாட்டினார். அந்த வீடியோக்கள் பொது வெளியிலும் பரவிவிட்டது என கூறினார்.

கணவர் பதிவு செய்ததை ஒப்புக்கொண்டார். ஆனால் சிவில் வழக்கில் ஆதாரமாகப் பயன்படுத்துவதற்காக மட்டுமே பதிவு செய்ததாக விளக்கம் அளித்தார்.

தாவோயுவான் மாவட்ட நீதிமன்றம் இந்த வாதத்தை ஏற்கவில்லை. திருமண உறவு இருப்பதால் ஒருவரின் தனியுரிமையை மற்றவர் மீற முடியாது என்று தெளிவாகக் கூறியது. தனியுரிமை என்பது தனிநபரின் அடிப்படை உரிமை. திருமணக் கடமை அதைவிட மேலானதல்ல என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

மேலும், ரோபோ கருவி செயலி மூலம் நேரலை காட்சியைப் பார்க்க முடியும். ஆனால் வீடியோவைச் சேமிக்கத் தனியாக பதிவு பொத்தானை அழுத்த வேண்டும். கணவர் அந்தப் பொத்தானை வேண்டுமென்றே அழுத்தியதாக நீதிமன்றம் கண்டறிந்தது.

பதிவு தொடங்கும்போது சாதனம் எச்சரிக்கை ஒலி எழுப்பியிருக்கலாம். ஆனால் மனைவிக்கு அது தெரிந்திருந்தது அல்லது அவர் சம்மதித்திருந்தார் என்பதற்கு ஆதாரம் இல்லை என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

இதையடுத்து, அனுமதியின்றி அந்தரங்கக் காட்சிகளைப் பதிவு செய்த குற்றத்திற்காக கணவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டார். அவருக்கு ஐந்து மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தத் தண்டனையை NT$1,50,000 (சுமார் ₹4.5 லட்சம்) அபராதமாக மாற்றிக் கொள்ளும் வசதியும் உள்ளது. வழக்கு மேல்முறையீட்டுக்குத் திறந்திருக்கிறது.

ஒரே சம்பவத்தில் ஒருபுறம் இழப்பீடு பெற்ற கணவர், மறுபுறம் அதே ஆதாரத்தைப் பெற்ற முறையால் சிறைவாசத்தை எதிர்கொண்டிருப்பது இந்த வழக்கின் முக்கிய அம்சம்.

ஸ்மார்ட் கேமராக்கள், ரோபோ கருவிகள் போன்றவை வீட்டுக்குள் நுழைந்த பிறகு, தனியுரிமை எல்லை எங்கே முடிகிறது என்ற கேள்வியையும் இந்தத் தீர்ப்பு எழுப்பியுள்ளது.

Summary : A Taiwan man used a robot vacuum camera at a holiday home to record his wife with another man. He won NT$500,000 for violation of marital rights. She later filed a privacy case. The court sentenced him to five months, ruling personal privacy stands above marital claims.
இது போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழே உள்ள பட்டனை பயன்படுத்தி Tamizhakam-ஐ Tick செய்து Preferred Sources பட்டியலில் இணைத்துக்கொள்ளுங்கள்.