Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

இன்றைய ராசிபலன் 24 மார்ச் 2023 வெள்ளிக்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil :இன்றைய ராசிபலன் 24 மார்ச் 2023 வெள்ளிக்கிழமை. வாழ்க்கையில் சாதிக்க விரும்பக்கூடிய அனைவரும் தங்கள் கூறிய காலக்கூறுகள் எவ்வாறு இருக்கிறது? இந்த காலத்தில் அதை செய்வதால் நமக்கு நன்மை ஏற்படுமா? என்பது போன்ற விஷயங்களை ஜாதகத்தின் மூலம் கணித்து அதற்கு தக்கவாறு செயல்படுவதின் மூலம் லாபம் அடைய முடியும்.

அதுமட்டுமல்லாமல் தடங்கல்கள் தடைகள் ஏற்படுவது போல சூழ்நிலைகள் இருந்தால் அதை தகர்த்தெறிய கூடிய பரிகாரங்களை செய்து அதிலிருந்து எளிதில் வெளியே வந்து சாதனைகள் செய்ய முடியும். அதற்கு ஜோதிடம் பெரும் அளவு ஒவ்வொரு மனிதருக்கும் உதவி செய்கிறது. அதன் அடிப்படையில் இன்று நீங்கள் மேஷம் முதல் மீனம் வரை உள்ள 27 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் பற்றி விரிவாக பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு மகிழ்ச்சிகள் நிறைந்த நாளாக உள்ளது. உங்கள் நேர்மையான முயற்சியின் மூலம் நீங்கள் பல சாதனைகள் புரிந்து வளர்ந்து ஆச்சரியத்திற்கு இடம் தருவீர்கள். ஆன்மீக காரியங்களில் உங்களது மனது செல்லும். மகிழ்ச்சிகரமாகவும் திருப்திகரமாகவும் இருக்கக்கூடிய நாளாக இந்த நாள் விளங்குகிறது.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணி இடத்தில் நீங்கள் சாதகமான பலன்களை பெற முடியும். தொழிலைப் பொறுத்தவரை திட்டமிட்டு எதையும் செய்வீர்கள். இதனால் மகிழ்ச்சி ஏற்படும்.

நிதி நிலைமையை பொருத்தவரை இன்று பணவரவு அதிக அளவு காணப்படும். பணத்தை பங்குச்சந்தைகளில் முதலீடு செய்து பயன்பெறுவீர்கள்.

--Advertisement--

 ஆரோக்கியத்தை பொருத்தவரை ஆரோக்கியம் ஆரோக்கியமாகவே இருக்கும். திருப்திகரமான மனநிலையை நிறுவுவதால் ஆரோக்கியத்தைப் பற்றி கவலை வேண்டாம்.

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே என்று முன்னேற்றகரமான பலன்கள் உங்களுக்கு அதிகளவு கிடைக்கும். உங்களிடம் மறைந்திருக்கும் திறமைகள் வெளிப்படும்.  வெளி உலகத்து உங்கள் திறன்கள் தெரியவரும் .நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். இன்பமாகவும் ஆற்றலோடு செயல்படக்கூடிய தன்னம்பிக்கை மிக்க தினமாக உள்ளது.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை சிறப்பான வாய்ப்புகள் உங்களுக்காக காத்திருக்கிறது. உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதின் மூலம் மேல் அதிகாரிகளின் பாராட்டுக்கள் உங்களுக்கு கிடைக்கும்.

 தொழில் ஸ்தானம் அமோகமாக உள்ளது. நிதி நிலைமையை பொறுத்தவரை பண வரவும் அதிகமாக இருப்பதால் சேமிக்க கூடிய விஷயங்களை பணத்தை சேமிப்பீர்கள். இதன் மூலம் திருப்தி ஏற்படும். எனவே நிதியை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

 ஆரோக்கியமும் என்ற திருப்திகரமான நிலையில் உள்ளது. தைரியமான மனநிலை காரணமாக உங்கள் ஆரோக்கியம் மேம்பட்டு இருக்கும். எனவே ஆரோகத்தை பற்றி கவலை வேண்டாம்.

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே என்று உங்கள் செயல்பாடுகளில் அதிக அளவு ஆற்றல் இருக்காது. சவாலான நேரங்களை நீங்கள் சந்திக்க வேண்டி இருக்கும். இதனால் பதட்டம் ஏற்படும்.உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது மிகவும் நல்லது. குழந்தைகளின் வளர்ச்சி பற்றி கவலை ஏற்படும்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணி சூழலில் சிறத்தன்மை காணப்படாது. இதனால் உங்களுக்கு திறமையுடன் பணியை கையாள முடியாது. சக பணியாளர்களின் ஆதரவும் இல்லை என்பதால் கடுமையாக தொழில் நெருக்கடியை சந்திக்க நேரிடும் .மேல் அதிகாரிகளின் ஆதரவும் இல்லாத காரணத்தால் நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பணத்தட்டுப்பாடு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. உங்களால் பணத்தை சேமிக்க இயலாது. இது கவலையை ஏற்படுத்தித் தரும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை என்று மன உளைச்சலோடு இருப்பதால் ஆரோக்கியத்தில் சற்று தடுமாற்றம் ஏற்படும். எனவே ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது மிகவும் நல்லது.

கடகம்

கடக ராசி நேயர்களே இன்று உறுதியான முடிவுகளை எடுப்பதற்கு உகந்த நாள் அல்ல. நீங்கள் உங்கள் சௌவுரியங்களை இழக்க வேண்டி இருக்கும். இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தி தரும். மனம் அமைதியோடும் உறுதியோடும் இருப்பது அவசியம் என்பதால் தியானத்தில் உங்களது மனதை செலுத்த வேண்டும்.

தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை கூடுதல் பணி சுமை ஏற்படும். எளிதாக எதையும் கையாள முடியாது. அதிக வேலைப்பளு காரணமாக களைத்துப் போவீர்கள். எனவே தொழிலில் கவனத்தை செலுத்தவும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை இன்று பணத்தை கவனமாக கவனமாக கையாள வேண்டும். பண இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே ஜாக்கிரதையாக இருக்கவும்.

ஆரோக்கியத்தை பொருத்தவரை தாயாரின் உடல்நிலை கவலை அளிக்கும். சூடு சம்பந்தமான பிரச்சனைகள் உங்களுக்கு ஏற்படலாம். எனவே ஆரோக்கியத்தில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.

சிம்மம்

சிம்மராசி அன்பர்களே இன்று சுமூகமான பலன்கள் உங்களுக்கு ஏற்படும். நீங்கள் தொடங்கும் காரியங்களில் வெற்றி பெறக்கூடிய வாய்ப்புகளும் அதிர்ஷ்டமும் நிறைந்துள்ளது. இன்று மகிழ்ச்சிகரமாக இருப்பீர்கள். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக அமைந்துள்ளது.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பே உங்கள் பணிகளை முடித்து விடுவீர்கள். இதனால் மகிழ்ச்சி உங்களுக்கு அதிக அளவு ஏற்படும். தொழிலை பற்றி கவலைப்பட வேண்டாம்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பண வளர்ச்சி காணப்படுகிறது. பாதுகாப்பான வளமான நிதியை நீங்கள் மகிழ்ச்சியோடு சேமிக்கும் முயற்சிகள் ஈடுபடுவீர்கள்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரையில் நேர்மறை எண்ணங்கள் உங்கள் மனதில் அதிகரித்து இருப்பதால் ஆரோக்கியத்தில் எந்த சிக்கலும் இல்லை. ஆற்றல் மற்றும் தன்னம்பிக்கை உயர்ந்தும் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தி உள்ளது.

கன்னி

கன்னி ராசி நேயர்களே இன்று உற்சாகத்தோடு காணப்படும். நீங்கள் உங்கள் செயல்களை திறமையாக செய்து முடிப்பீர்கள். முக்கியமான முடிவுகளை எடுக்க இந்த நாளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் உங்களுக்கு வளமான எதிர்காலம் காத்திருக்கிறது.

 உங்கள் செயல்பாட்டிற்கும் உங்கள் தொழில் திறனுக்கும் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். முடிக்க முடியாது என்று சொல்லக்கூடிய பணிகளை கூட எளிதில் முடித்து உங்கள் திறமையை வெளிப்படுத்துவீர்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை என்று நீங்கள் பணத்தை பல வழிகளில் முதலீடு செய்வதற்கு முயற்சி செய்வீர்கள். அதிக அளவு பணம் இருக்கும் பணத்தை சேமிப்பீர்கள்.

ஆரோக்கியம் என்று மிகவும் சிறப்பாக உள்ளது. முழு ஆரோக்கியத்தோடு திகழும் உங்களுக்கு ஆரோக்கியத்தை பற்றி எந்த அச்சமும் தேவையில்லை.

துலாம்

துலாம் ராசி அன்பர்களே என்று நீங்கள் திட்டமிட்டு எல்லா செயல்களையும் செய்து முடிப்பதின் மூலம் நல்ல நல்ல பலன்களை பெற முடியும். தவறான முடிவுகள் எடுப்பதற்கு இன்று வாய்ப்புகள் அதிக அளவு உள்ளதால் முக்கிய முடிவுகளை எடுக்கும்போது யோசித்து எடுப்பது மிகவும் நல்லது. பெரியவர்களின் ஆலோசனை கேட்டு நடந்தால் வெற்றிகள் வந்த சேரும்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை நீங்கள் தொழில் நிமித்தமாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது உங்களுக்கு சில பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொடுக்கும். எனினும் குறித்த நேரத்துக்குள் உங்கள் பணிகளை முடிப்பது அவசியம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை கூடுதல் செலவுகள் வந்து சேரும். சேமிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. எனவே பணத்தை சிக்கனமாக செலவு செய்ய முயற்சி செய்யுங்கள்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை பற்களில் வலி வருவதற்கு வாய்ப்புள்ளதால் அதிக அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். வலி அதிகரித்தால் உடனே மருத்துவரை அணுகுவது மிகவும் சிறந்தது.

விருச்சிகம்

விருச்சிக ராசி நேயர்களே இன்றைய தினம் உறுதியான பலன்கள் உங்களுக்கு கிடைக்காது. அசாதாரமான சூழ்நிலைகளை நீங்கள் சந்திக்க வேண்டி இருப்பதால் கவனத்தோடு இருங்கள் பேசும் போது என்ன வார்த்தை பேசுகிறோம் என்பதை யோசித்துப் பேசுவது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை திறமையாக பணியாற்றுவது பணியாற்றினாலும் உங்களுக்கு தடைகள் வந்து சேரும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்காது. தொழிலில் கூடுதல் கவனத்தை செலுத்துவது மிகவும் அவசியமானதாகும்.

நிதி நிலைமையை பொருத்தவரை தவிர்க்க முடியாத செலவுகள் ஏற்படும். எனவே செலவினங்களை கட்டுப்படுத்துவது மிகவும் நல்லது தேவையற்ற செலவுகளை செய்ய வேண்டாம்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை முதுகு வலி வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. கண் சார்ந்த மருத்துவத்தை மேற்கொள்ள வேண்டி வரும். வேலை பளு காரணமாக கலைத்து இருப்பீர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.

தனுசு

தனுசு ராசி அன்பர்களே இன்று சாதகமான நாள் என்று கூறலாம். உற்சாகத்தோடு அனைத்திலும் வெற்றி பெற நீங்கள் முயல்வீர்கள். எந்த செயல்களிலும் உங்களுக்கு வெற்றி கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. பெரியவர்களின் ஆதரவை பெற்றிருக்கும் நீங்கள் இன்று வெற்றி மேல் வெற்றி பெற முடியும்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை பணியும் நல்ல வளர்ச்சி உள்ளது .வாய்ப்புகள் அதிகமாக வந்து சேரும் உங்களுக்கு இது திருப்தியை அளிக்கும். மேலதிகாரிகளின் பாராட்டு உங்களுக்கு அதிக அளவு கிடைக்கும்.

 நிதியை பொருத்தவரை இன்று தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய அளவுக்கு கணிசமான தொகை வந்து சேரும். உங்கள் வங்கி கையிருப்பு உயரும். எனவே நிதியை பற்றி நீங்கள் கவலை கொள்ள வேண்டாம்.

 ஆரோக்கியத்தை பற்றி பார்க்கும் போது திடமான ஆரோக்கியம் இன்று இருக்கும். மகிழ்ச்சியோடு எதையும் நீங்கள் செய்வீர்கள். உங்கள் ஆரோக்கியத்தை பற்றி நீங்கள் கவலையே பட வேண்டிய அவசியம் இல்லை. எந்த நாள் உங்களுக்கு சிறப்பான நாளாக அமைந்துள்ளது.

மகரம்

மகர ராசி நேயர்களே இன்று அதிகளவு சிந்தனைகளை செய்வீர்கள். இந்த சிந்தனையின் மூலம் உங்களுக்கு நல்லதே நடக்கும். எல்லா விஷயங்களையும் எளிதாக எடுத்துக் கொள்வதின் மூலம் உங்கள் மன நிலையில் நல்ல மாற்றம் ஏற்படும். தியானத்தை மேற்கொள்ளுங்கள். இதன் மூலம் உங்களுக்கு நல்ல பலன்கள் வந்து சேரும்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை பணி நிமித்தமாக பயணங்கள் செய்ய வேண்டி இருக்கும். பணியில் நிறைய சவால்களை சந்திப்பீர்கள். கடுமையான வேலை பணி காரணமாக சோர்வு ஏற்படும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை அதிர்ஷ்டகரமான நாள் இல்லை. தூர பிரதேசத்திலிருந்து எதிர்பார்த்த பண வரவு உங்களுக்கு வந்து சேராது. எனவே நிதியை சிக்கனமாக செலவு செய்யவும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை மன அழுத்தம் காரணமாக கால்களில் வலி ஏற்படலாம். அதிக வேலைப்பளு காரணமாக சில பிரச்சனைகள் ஏற்படும். எனவே ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.

கும்பம்

கும்ப ராசி நேயர்களே இன்று உற்சாகமும் ஆற்றலும் நிறைந்திருக்கும். இன்றைய நாளை சிறப்பாக திட்டமிட்டு நீங்கள் செயல்படுத்தலாம். உங்கள் திட்டங்களை செயலாற்ற தொடங்குவதற்கு மிகச் சரியான நாளாக இந்த நாள் அமைந்துள்ளது.

 தொழிற் ஸ்தானத்தை பொறுத்தவரை தொழில் சம்பந்தமாக பயணங்கள் மேற்கொள்ளலாம். தகவல் பரிமாற்ற திறமை காரணமாக பாராட்டுக்கள் உங்களுக்கு வந்து சேரும். உங்கள் முயற்சியில் நல்ல வெற்றி கிடைக்கும்.

 நிதி நிலைமை பொறுத்த வரை சிறப்பாக உள்ளது. பயனுள்ள சிறு சிறு செலவுகளை மேற்கொள்வீர்கள். அழகு குறிப்பு, மருந்து வாங்குதல் போன்றவற்றுக்கு செலவு செய்வீர்கள்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று முழுமையான ஆரோக்கியம் உங்களுக்கு காணப்படும் உற்சாகத்தோடு இருப்பீர்கள். இந்த நாள் முடிவில் தலைவலி வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதா ஆரோக்கியத்தில் சற்று கோடுகள் கவனத்தை செலுத்தவும்.

மீனம்

மீன ராசி நேயர்களே இன்று மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிறைந்து காணப்படும். நிலுவைவில் உள்ள பணிகள் அனைத்தையும் செய்து முடிப்பீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபடுவதின் மூலம் உங்கள் மனதில் மகிழ்ச்சி ஏற்படும்.

தொழிற்சாலத்தை பொருத்தவரை பணி சிறப்பாக இருக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பணியிட சூழல் அமைதியாக இருப்பதால் எளிதில் பணியாற்றி வெற்றிகளை குவிப்பீர்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை சுமாராக இருக்கும். குடும்பத்தில் பண செலவு ஏற்படும். கவனமாக பணத்தை செலவு செய்ய வேண்டும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை சிறப்பாக இருக்கும். இன்று முழுவதும் சிறப்பான ஆற்றலோடு நீங்கள் இருப்பீர்கள். எனவே ஆரோக்கியத்தை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

Continue Reading
 

More in

Trending Now

To Top