“நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கட்டுமா..?” – மீனாவை கேட்ட முன்னனி தமிழ் நடிகர்..!

நடிகை மீனாவை திருமணம் செய்ய பிரபல நடிகர் பெண் கேட்ட தகவல் தற்பொழுது இணைய பக்கங்களில் வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனா அதனை தொடர்ந்து கிடைத்திருக்கிறார்.

Actress Meena
Actress Meena

தற்பொழுது அம்மா அத்தை உள்ளிட்ட கதாபாத்திரங்களையும் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை மீனாவின் கணவர் சமீபத்தில் நுரையீரல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழ் சினிமாவில் நடிகர்கள் அஜித் விஜய் கமல் ரஜினி உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் நடித்திருக்கும் நடிகை மீனா 90களில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர்.

Actress Meena
Actress Meena

ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாகவும் அதன் பிறகு அவருக்கு ஜோடியாகவும் நடித்த பெருமை நடிகை மீனாவுக்கு மட்டும் தான் உள்ளது. தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தியில் கூட சில படங்களில் நடித்திருக்கிறார் நடிகை மீனா.

இந்நிலையில், நடிகை மீனா தன்னுடைய கணவர் இறப்பை தொடர்ந்து இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள தயாராகி வருகிறார் என்றும் அவருடைய குடும்பத்தினர் நடிகை மீனா இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி வருகிறார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி கொண்டிருந்தன.

--Advertisement--

Actress Meena
Actress Meena

ஆனால், இதனை மறுத்து வந்தார் நடிகை மீனா. இந்நிலையில், நடிகை மீனா-வை முதன் முதலில் திருமணம் செய்து கொள்ள நடிகர் சரத்குமார் பெண் கேட்டதாகவும் எதற்கு அவருடைய அம்மா மறுப்பு தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பந்தம் கைவிடப்பட்டதால் தான் கடந்த 2010 ஆம் ஆண்டு வித்யாசாகரை திருமணம் செய்து கொண்டார் நடிகை மீனா என்று கூறுகிறார்கள். பிரபல நடிகரும் சர்ச்சைக்குரிய பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் இந்த தகவலை வெளியிட்டு இருக்கிறார்.

Actress Meena
Actress Meena

நடிகை மீனா குறித்து சமீப காலமாக இணைய பக்கங்களில் கிசுகிசுக்கள் வதந்திகள் அதிக அளவில் பரவி வருகின்றன. இந்நிலையில், நடிகர் சரத்குமார் நடிகை மீனாவை முதன்முறையாக திருமணம் செய்து கொள்ள விருப்பப்பட்டு அவருடைய வீட்டில் பெண் கேட்ட தகவல் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.