இது இல்லாம என்னால இருக்க முடியாது.. ஹேண்ட் பேக்கில் எப்போவுமே இருக்கும்.. நதியா ஓப்பன் டாக்..!

கவர்ச்சியாக நடித்தால் மட்டும் தான் சினிமாவில் பெரும் வரவேற்பை பெற முடியும் என்று பல நடிகைகள் நினைத்துக் கொண்டிருந்த பொழுது அதை உடைத்து சில நடிகைகள் தமிழ் சினிமாவில் கவர்ச்சி இல்லாமல் நடித்தும் கூட பெரும் உச்சத்தை தொட்டு இருக்கின்றனர்.

அப்படியான சில நடிகைகளில் முக்கியமானவர் நடிகை நதியா. நதியாவை பொறுத்தவரை எப்பொழுதுமே மிகவும் பாரம்பரியமான உடையில்தான் திரைப்படங்களில் தோன்றுவார்.

சினிமா வாய்ப்பு:

ஒருவேளை மாடர்ன் உடையில் அவர் நடித்தாலும் கூட அதுவும் நாகரீகமான அளவில் தான் இருக்கும். இதனாலேயே நதியாவிற்கு தமிழ் சினிமாவில் அதிகமான ரசிகர்கள் உண்டு. 1984 ஆம் ஆண்டு மலையாள திரைப்படம் ஒன்றின் மூலமாகதான் முதன்முதலாக வெள்ளி திரையில் காலடி எடுத்து வைத்தார் நதியா.

அதற்குப் பிறகு அவருக்கு நிறைய திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைக்க துவங்கின. 1986 ஆம் ஆண்டு பூக்களை பறிக்காதீர்கள் என்கிற திரைப்படம் மூலமாக முதன்முதலாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

---- Advertisement ----

தமிழ் சினிமா வளர்ச்சி:

அதனை தொடர்ந்து அவருக்கு உயிரே உனக்காக, நிலவே மலரே போன்ற பல திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. எவ்வளவு பெரிய நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் கூட கவர்ச்சி இல்லாமல் நடிப்பதாக இருந்தால்தான் நடிப்பேன் என்று கரராக இருந்தவர் நடிகை நதியா.

அதனால்தான் அவ்வளவாக அவர் ரஜினி கமல் மாதிரியான பெரிய நடிகர்களுடன் திரைப்படங்களில் நடித்ததில்லை. ரஜினியுடன் கூட ராஜாதி ராஜா என்கிற ஒரு திரைப்படத்தில்தான் கதாநாயகியாக நடித்திருந்தார் நதியா திருமணத்திற்கு பிறகு அவ்வளவாக திரைப்படங்களில் நடிக்காத நதியா அதற்கு முன்பு ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்து விட்டார்.

ரீ எண்ட்ரி:

திருமணத்திற்கு பிறகு அமெரிக்காவிற்கு சென்று செட்டிலான நதியா பிறகு எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படம் மூலமாக திரும்பவும் தமிழ் சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகும் தாமிரபரணி, சண்டை, பட்டாளம் என்று வரிசையாக அவரது பெயர் சொல்லும் திரைப்படங்களாகவே அவையெல்லாம் அமைந்தன .

ஏனெனில் அந்த எல்லா திரைப்படங்களிலுமே நதியாவிற்கு முக்கியமான கதாப்பாத்திரங்கள் இருந்தன. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய நதியா, ”என்னுடைய ஹேண்ட் பேக்கில் எந்த ஒரு விஷயமும் இல்லாமல் என்னால் இருந்து விட முடியும். ஆனால் கைபேசி இல்லாமல் மட்டும் இருக்கவே முடியாது” என்று கூறி இருக்கிறார்.

அந்த அளவிற்கு கைபேசி ஒரு முக்கியமான பொருளாக மாறிவிட்டதாக கூறுகிறார். உண்மையில் நதியாவிற்கு மட்டுமல்ல பொதுவாகவே கைபேசி அந்த அளவிற்கு அனைவருக்கும் ஒரு முக்கியமான பொருளாக தான் மாறி இருக்கிறது.

---- Advertisement ----