தன்னுடைய வரலாற்றில் விஜய் தவற விட்ட ப்ளாக்பஸ்டர் வெற்றி படங்கள்..!

தன்னுடைய வரலாற்றில் விஜய் தவற விட்ட ப்ளாக்பஸ்டர் வெற்றி படங்கள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் நடிகைகள் பலருக்கும் இந்த அனுபவம் நிச்சயமாக இருக்கும். அதாவது அவர்கள் வேறு படங்களில் நடிக்க கமிட் ஆன நிலையில், மற்ற படங்களில் நடிக்க வந்த வாய்ப்பை வேண்டாம் என மறுத்திருப்பார்கள்.

ஆனால் அந்த படங்கள் மிகப்பெரிய ஹிட் படங்களாக வெற்றி பெறும். இவர்கள் மறுத்துவிட்டு நடித்த படங்கள், மிகப்பெரிய பிளாப் படங்களாக போயிருக்கும்.

வருத்தப்பட்ட இளம் நடிகர்கள்

இதுகுறித்து நடிகர் ஸ்ரீகாந்த் ஒரு நேர்காணலில் வருத்தப்பட்டு பேசியிருந்தார். நான் பாசில் இயக்கிய ஒரு படத்தில் நடிக்க வேண்டியவன். அந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்த போது வேறு ஒரு படத்தில் கமிட் ஆனதால், அந்த படத்தை தவிர்த்தேன். ஆனால் கடைசியில் அந்த படம்தான் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்று குறிப்பிட்டு வருத்தப்பட்டு இருந்தார்.

அதே போல் அப்பாஸ் பேசிய ஒரு பேட்டியிலும் இதே போல் தனக்கு கிடைத்த ஹிட் படங்களை தவற விட்டதாக குறிப்பிட்டு வருத்தப்பட்டு பேசியிருக்கிறார்.

இது ஸ்ரீகாந்த், அப்பாஸ் போன்று வருத்தப்பட்ட இளம் நடிகர்களின் அனுபவம் பலருக்கும் வாய்த்திருக்கும்.

விஜய்

நடிகர் விஜய் இப்போது த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கிய இந்த படத்தில் சினேகா, மீனாட்சி செளத்ரி, ரம்யாகிருஷ்ணன், கனிகா, லைலா உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்களும், பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், சுதீப் போன்ற முன்னணி நட்சத்திரங்களும் நடிக்கின்றனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு, விரைவில் ரஷ்யாவில் துவங்க இருக்கிறது. அங்கு 16 நாட்கள் ஷூட்டிங் முடிந்தவுடன் படப்பிடிப்பு அத்துடன் நிறைவடைகிறது.

மேலும் விஜய் நடிக்கும் 69வது படத்தை டைரக்டர் எச் வினோத் இயக்குவது உறுதியாக முடிவாகி விட்டது. இந்த படத்தின் ஷூட்டிங் வரும் ஜூன் 22ம் தேதி விஜய் பிறந்த நாளில் துவங்கி, டிசம்பர் மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: இளம் நடிகர் செய்த சீண்டல்.. குமுறி அழுத பானுப்ரியா.. ரகசியம் உடைத்த பிரபலம்..!

நடிக்க மறுத்த படங்கள்

இந்நிலையில் ஒரு சுவாரசியமான தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நடிகர் விஜய் நடிக்க மறுத்து ஹிட் ஆன படங்கள் எவை என்ற பட்டியல் கிடைத்துள்ளது. அதன்படி இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் உன்னை நினைத்து படத்தில் சில நாட்கள் நடித்து விட்டு விஜய் மறுத்துவிட்டார். பின் அந்த கேரக்டரில் சூர்யா நடித்தார்.

அடுத்து கவுதம் மேனன் இயக்கிய காக்க காக்க படத்தில் விஜய் மறுக்க, அதிலும் சூர்யா நடித்தார். முதலில் ஷங்கர் முதல்வன் படத்தில் நடிக்க அழைத்தது விஜயை தான். அவர் மறுத்ததால் அதில் அர்ஜூன் நடித்தார்.

தீனாவில் அஜீத்குமார்

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் தீனாவில் விஜய் நடிக்க மறுத்த நிலையில் அஜீத்குமார் நடித்தார். பொன்னியின் செல்வன் படத்தில் விஜய்தான் அருள்மொழி செல்வன் கேரக்டரில் நடிப்பதாக இருந்தார். பிறகு அவர் விலகி விட்டதால், ஜெயம் ரவி நடித்துள்ளார்.

லிங்குசாமி இயக்கிய சண்டக்கோழி படத்திலும் விஜய் மறுத்ததால் விஷால் நடித்துள்ளார். சேரன் டைரக்ட் செய்த ஆட்டோகிராப் படத்தில் முதலில் சேரன் நடிக்க அழைத்தது விஜயை தான். அவர் மறுத்து விட்டதால், சேரனே அந்த கேரக்டரில் நடித்தார்.

இதையும் படியுங்கள்: எந்த பொண்ணுக்கும் என் நிலைமை வரக்கூடாது.. மனதை ரணமாக்கும் நடிகை நளினியின் பேட்டி..!

சிங்கம், தூள்

அதே போல் சிங்கம், ரன், தூள், உள்ளத்தை அள்ளித்தா, அனேகன் போன்ற படங்களை கால்ஷீட் காரணமாக விஜய் மறுத்த நிலையில் மற்ற ஹீரோக்கள் நடித்து பெரிய அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

தவறவிட்ட பிளாக்பஸ்டர்

விஜய், தன்னுடைய சினிமா வரலாற்றில் தவற விட்ட ப்ளாக்பஸ்டர் வெற்றி படங்கள் இத்தனையா, என அவரது ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.