Connect with us

திடீரென நிறுத்திவைக்கப்படும் சூப்பர்ஸ்டார் பாராட்டு மாநாடு ! காரணம் என்ன ?

jailer, Rajinikanth

Actress | நடிகைகள்

திடீரென நிறுத்திவைக்கப்படும் சூப்பர்ஸ்டார் பாராட்டு மாநாடு ! காரணம் என்ன ?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் மன்றம் சார்பில் மனிதம் காத்து வாழ்வோம் என்ற தலைப்பில் வரும் 26ம் தேதி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறவிருந்த மாநாடு தற்பொழுது ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சகோதரர் சத்தியநாராயண ராவ் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ சி சண்முகம், சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி, காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசு ,ஆகிய அரசியல் தலைவர்களும் இயக்குனர் எஸ் பி முத்துராமன், பி வாசு ,கார்த்திக் சுப்பராஜ் ,கேஎஸ் ரவிக்குமார்,நடிகர் ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்களும்பங்கு பெறுவதாக இருந்தது.

jailer, Rajinikanth

நிறுத்தி வைக்கப்பட்ட மாநாடு

ஆனால் தவிர்க்க முடியாத சில காரணங்களால் இந்த மாநாடு ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த தகவலில் அன்பு தலைவரின் சொந்தங்கள் எல்லாருக்கும் பணிவான வணக்கம். சென்னையில் நடைபெற இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மனிதம் காப்போம் என்ற விழா தற்பொழுது நிறுத்தி வைக்கப்படுகிறது.

சிரமத்திற்கு மன்னிக்கவும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் நேரில் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் வாராமல் தன்னுடைய உடல் நிலையை கருத்தில் கொண்டு பின்வாங்கினார்.

சமீபத்தில் ரஜினிகாந்த் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றிலும் இது பற்றி கூறியிருந்தார். தான் ஏன் அரசியல் வரவில்லை என்பது பற்றியும் அதற்கான காரணங்கள் என்ன என்பது பற்றியும் விரிவாக விளக்கி கூறியிருந்தார். இதற்கிடையில் இந்த மாநாடு ஏழை எளியவர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கும் நல உதவிகளை வழங்கும் விழாவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

jailer, Rajinikanth

தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். நெல்சன் இயக்கத்தில் சன் பிகிடுறேஸ் தயாரிக்கும் இந்த திரைப்படம் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோல பல சுவாரசியமான சினிமா செய்திகளை உடனுக்குடன் படிக்க நம்ம தமிழகம் இநத பக்கத்தை தொடர்ந்து படியுங்கள். பிடித்திருந்தால் உங்க நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Trending

Trending

To Top