இரண்டாம் மனைவியான நடிகை அமலா.. பலரும் அறியாத ரகசியம்..!

நடிகை அமலா, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு அழகான நடிகை. கடந்த 1980, 90களில் இவர் நடித்த படங்கள் பலவும் மிகப்பெரிய ஹிட் படங்களாக தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன.

குறிப்பாக வேலைக்காரன், மாப்பிள்ளை, சத்யா, மெல்லத் திறந்தது கதவு, கொடி பறக்குது, அக்னி நட்சத்திரம், உத்தம புருஷன் என பல படங்களை குறிப்பிட்டுச் சொல்லாம்.

தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா மனைவிதான் அமலா. இவரது மகன்தான் ராம்சரண். மற்றொரு கூடுதல் தகவலாக, நடிகை சமந்தாவின் முன்னாள் மாமியார் இவர்தான்.

அமலா

நடிகை அமலா குறித்து பத்திரிகையாளர் மற்றும் பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் வீடியோ ஒன்றில் கூறியதாவது,

நடிகை அமலா, நடிகர் டி ராஜேந்தர தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்திய நடிகை. கலாஷேத்ராவில் இருந்த அவரை நடிக்க அழைத்து வந்தவர் டி ராஜேந்தர்தான். அமலா மிகச்சிறந்த நடிகை. எப்படிப்பட்ட கேரக்டர் என்றாலும் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி விடுவார்.

கலாஷேத்ரா மாணவி

கலாஷேத்ரா மாணவியாக இருந்த அமலாவை, நடனம் தெரிந்த பெண்ணாக நடிகையாக தேர்வு செய்ய வேண்டும் என்பதற்காக அவரை தேடிப்பிடித்து, கலாஷேத்ராவுக்கு நேரில் சென்று, அமலாவை அழைத்து வந்து தன் படத்தில் நடிக்க வைத்தாா் டி ராஜேந்தர்.

இஸ்லாமிய பெண்ணாக நடித்தாலும், விதவை பெண்ணாக நடித்தாலும், கல்லூரி மாணவியாக நடித்தாலும் அவரது நடிப்பு மிக சிறப்பாக தான் இருக்கும். தனது முத்திரை நடிப்பால் ரசிகர்களின் மனங்களை வென்றவர் அமலா.

இதையும் படியுங்கள்: கோடிக்கணக்கில் சொத்து இருந்தும் சாமியார் ஆன முன்னணி நடிகை.. யாரு காரணம் தெரியுமா..?

பெற்றோர் பற்றிய தகவல்

நடிகை அமலாவின் பெற்றோர் குறித்து அவர் எந்த இடத்திலும் குறிப்பிட்டுச் சொன்னது இல்லை. அவரது பெற்றோர் பற்றிய யாருக்குமே எந்த விவரமும் தெரியாது. ஆனால் பெரிய குடும்பத்தை சேர்ந்தவர். கலாஷேத்ராவிலேயே வளர்ந்திருக்கிறார்.

நாகார்ஜூனா திருமணம்

தமிழில் நிறைய படங்களில் நடித்த அமலா, ஒரு காலகட்டத்தில் தெலுங்கு பக்கம் போனார். அங்கும் நிறைய படங்களில் நடித்தார். அப்போது தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவை திருமணம் செய்துக்கொண்டார்.

நாகார்ஜூனா ஏற்கனவே தயாரிப்பாளர் மகள் ஒருவரை திருமணம் செய்து, பின் அந்த மனைவியை பிரிந்துவிட்டு, விவாகரத்து ஆனவர். அவர், 2வது முறையாக அமலாவை திருமணம் செய்துக்கொண்டார்.

இதையும் படியுங்கள்: உள்ள இருக்குறது எல்லாமே பளிச்சுன்னு தெரியுது.. பொதுவெளியில் ஸ்ருதிஹாசன்.. வைரல் பிக்ஸ்..!

முக்கியமான ரோல்களில்

நடிகை அமலா இப்போதும் தனக்கு பிடித்தமான கேரக்டர்களில், தனது கணவரின் அனுமதியை பெற்று நடித்துக்கொண்டு இருக்கிறார். நிறைய படங்களில் நடிப்பதில்லை. ஒன்றிரண்டு படங்களில் முக்கியமான ரோல்களில் மட்டுமே நடிக்கிறார்.

ரகசியமே பலருக்கும் தெரியாது

நடிகர் நாகார்ஜூனாவின் இரண்டாவது மனைவி அமலா என்ற ரகசியமே பலருக்கும் தெரியாது, என்று அந்த வீடியோவில் நடிகர் பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.