Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

” உங்க இம்யூனிட்டியை அதிகரிக்கும் மலை நெல்லி சாதம்..!” இப்படி செய்யுங்க பாஸ்..!!

இன்று இருக்கக்கூடிய தலைமுறையைச் சார்ந்த குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி என்பது அவ்வளவாக இல்லை என்ற உண்மையை நாம் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். இதற்கு காரணம் உணவு பழக்க வழக்கங்களில் ஏற்பட்டிருக்கக் கூடிய மாறுபாடு மற்றும் நமது பாரம்பரிய உணவுகளை மறந்து துரித உணவுகளை நோக்கி நாம் சென்று கொண்டிருப்பதால் தான் இந்த பிரச்சனை கடுமையாக ஏற்பட்டுள்ளது.

 இந்த பிரச்சனையை உங்கள் உணவு முறையின் மூலம் சமன் செய்ய நீங்கள் இம்முனிட்டியை அதிகரிக்க கூடிய உணவுகளை உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

 அந்த வரிசையில் இன்று இம்யூனிட்டியை அதிகரிக்க கூடிய மலை நெல்லியில் இருந்து மலை நெல்லி சாதம் செய்து பிள்ளைகளுக்கு எப்படி கொடுப்பது என்பது பற்றி பார்க்கலாம்.

மலை நெல்லி சாதம் செய்ய தேவையான பொருட்கள்

1.அரிசி 200 கிராம்

2.நெல்லிக்காய் 20

--Advertisement--

3.மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்

4.உப்பு தேவையான அளவு

5.பச்சை மிளகாய் 4

6.எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன்

7.கடுகு அரை டேபிள் ஸ்பூன்

8.உளுத்தம் பருப்பு அரை டேபிள்ஸ்பூன்

9.கடலைப்பருப்பு ஒரு டீஸ்பூன்

10.கருவேப்பிலை சிறிதளவு

11.கொத்தமல்லி சிறிதளவு

செய்முறை

முதலில் அரிசியை நன்கு களிந்து குக்கரில் உதிரி உதிராக வரும் அளவிற்கு நீரை ஊற்றி இரண்டு விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்.

 இதனை அடுத்து வானிலையை எண்ணெயை ஊற்றி அதில் தாளிக்க தேவையான கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு இவற்றை போட்டு வெடிக்க விடவும்.

 இதை வெடித்து வரும்போது சிறிதளவு கறிவேப்பிலையை போட்டுக் கொள்ளுங்கள். இப்போது நீங்கள் எடுத்து வைத்திருக்கும் 20 நெல்லிக்கனிகளை நன்கு துருவியில் துருவி அந்தத் துருவலை இப்போது நீங்கள் தாளிசம் செய்ய போட்டிருக்கும் பொருட்களோடு கலந்து மஞ்சள் தூளையும் சேர்த்து நன்கு கிளறி விடுங்கள்.

 இதனை அடுத்து குக்கரில் எடுத்து வேக வைத்திருக்கும் சாதத்தை எடுத்து இதில் போட்டு நன்கு கலந்து கொள்ளுங்கள். உப்பு தேவையானில பொடி உப்பை மேல் சேர்த்து நன்கு கிளறி விடுங்கள்.

 இப்போது சூடான சுவையான நெல்லிக்காய் சாதம் தயாராக உள்ளது. இதை உங்கள் பிள்ளைகள் கொண்டு செல்லும் லஞ்ச் பேக் கொடுத்து விடலாம். இல்லையெனில் மாலை நேரத்தில் அனைவரும் வீட்டில் அமர்ந்து சாப்பிடலாம்.

Continue Reading
 

More in

Trending Now

To Top