Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Andrea Jeremiah

உடை மாற்றும் அறையில்.. அது தெரிவது கூட தெரியாமல் செல்ஃபி..! – அலற விடும் ஆண்ட்ரியா..!

நடிகை ஆண்ட்ரியா ( Andrea Jeremiah ) முழு பெயர் ஆண்ட்ரியா ஜெரெமையா. இவர், நடிகையாக மட்டுமின்றி, பின்னணி பாடகியாக, சினிமா நாயகிகளுக்கு பின்னணி குரல் டப்பிங் கொடுப்பவராக இருந்து வருகிறார்.

தமிழ் சினிமாவுக்கு, ஆண்ட்ரியா பாடகியாக அறிமுகமானார். பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் சரத்குமாருக்கு மனைவியாகவும், ஆயிரத்தில் ஒருவன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாகவும் நடித்தார்.

ஆனால், இந்த படங்களில், இரண்டு நாயகிகளில் ஒருவராக தான் ஆன்ட்ரியா நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர், அரக்கோணம், ராணிப்பேட்டையை சேர்ந்தவர். ஆங்கில– இந்தியன் குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக உள்ளார்.

Image Source : instagram.com/therealandreajeremiah/

ஆண்ட்ரியா பத்து வயதில் இருந்தே, யங் இஸ்டார்ச்சு என்னும் குழுவில் பாடி வருகிறார். கல்லூரி மேடை நாடகங்களில் நடித்த அனுபவங்கள் உண்டு. அதனால்தான், சினிமாவில் இவரது நடிப்பு மிக இயல்பாக இருக்கிறது என, ரசிகர்கள் பாராட்டுகின்றனர். பொதுவாக, மேடை நாடகங்களில் நடித்தவர்களுக்கு, சினிமா கேமரா முன் நடிப்பது வெகு எளிதாக இருக்கும் என, பலரும் கூறி வருகின்றனர்.வேட்டையாடு விளையாடு படத்தில், ஒரு பாடல் பாடி இருக்கிறார். வெங்கட்பிரபு இயக்கிய மங்காத்தா படத்திலும் ஆண்ட்ரியா நடித்துள்ளார். அடுத்து கமல்ஹாசனுடன் விஸ்வரூபம் படத்தின் இரண்டு பாகங்கள், வெற்றிமாறன் இயக்கிய வடசென்னை படத்திலும் ஆண்ட்ரியா நடித்திருக்கிறார்.

Image Source : instagram.com/therealandreajeremiah/

கண்ணும் கண்ணும் நோக்கியா – அந்நியன் படத்திலும், கற்க கற்க – வேட்டையாடு விளையாடு படத்திலும், மாலை நேரம்– ஆயிரத்தில் ஒருவன் படத்திலும், ஏனோ ஏனோ – ஆதவன் படத்திலும், தீராத விளையாட்டு பிள்ளை – தீராத விளையாட்டு பிள்ளை படத்திலும், இதுவரை – கோவா படத்திலும், பூக்கள் பூக்கும் தருணம் – மதராசப்பட்டிணம் படத்திலும், ஹூ ஈஸ் த ஹீரோ – மன்மதன் அம்பு படத்திலும், நோ மணி நோ ஹனி –வானம் படத்திலும் என பல முக்கிய பாடல்கள் இவர் பாடியதே. இதில், சில பாடல்கள் எவர்கிரீன் பாடல்களாக இப்போதும் அடிக்கடி ரசித்து கேட்கப்படுகின்றன.

--Advertisement--

Image Source : instagram.com/therealandreajeremiah/

அதுமட்டுமின்றி வேட்டையாடு விளையாடு படத்தில் கமாலினி முகர்ஜிக்கும், ஆடுகளம்– படத்தில் டாப்ஸிக்கும், நண்பன் – படத்தில் இலியானாவுக்கும் பின்னணி குரல் டப்பிங் வாய்ஸ் கொடுத்தது ஆண்ட்ரியாதான்.சமீபத்தில் யுவன் ஷங்கர் ராஜா நடத்தும் இசை நிகழ்ச்சிக்காக ஆண்ட்ரியா, டிடி என அழைக்கப்படும் திவ்யதர்ஷினி மற்றும் இசைக்குழுவினர் லண்டன் சென்றுள்ளனர்.

Image Source : instagram.com/therealandreajeremiah/

லண்டனில் எடுக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ஆண்ட்ரியா பரவ விட்டிருக்கிறார். மாடர்ன் டிரஸ்சில் அவரது புகைப்படங்ககள், டிரண்ட் ஆகி வருகின்றன.
ஆண்ட்ரியாவை பொருத்த வரை, நல்ல நடிகை. நல்ல பாடகி, சிறந்த டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என்பதை நிரூபித்துள்ளார். அவர் பாடகி என்பதால், வெளிநாடுகளில் நடக்கும் முக்கிய இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாடவும் செய்கிறார்.

Continue Reading
 

More in

Trending Now

To Top