Actress | நடிகைகள்
சோளக்காட்டில் மல்லாக்க படுத்தபடி.. சீரியல் நடிகை பாப்ரி கோஷ்..! – வைரலாகும் ஹாட் போட்டோஸ்..!
பாப்ரி கோஷ்,(Papri Ghosh) டிவி சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமான நடிகையாக இருக்கிறார். மக்களால் பரபரப்பாக, ரசித்து பார்க்கப்படும் சீரியல்களில், இவர் நடித்து வருகிறார். சீரியல்களில் மட்டுமின்றி, சினிமாவிலும் தனது பங்களிப்பை தந்து வருகிறார்.
தமிழ், பெங்காலி மொழிகளில் சில படங்களில் பாப்ரி கோஷ் நடித்திருக்கிறார். சீரியல் நடிகையாகவும் இருப்பதோடு, மாடலிங் துறையிலும் இருந்து வருகிறார். அதனால், மாடர்ன் டிரஸ்சில் அவ்வப்போது வந்து, ரசிகர்களை கிறங்கடித்து விடுகிறார்.
கடந்த 2009ம் ஆண்டில், கால்பேலா என்ற பெங்காலி படத்தில் பாப்ரி கோஷ் அறிமுகமானார். ஷங்கர் ரே இயக்கத்தில், ‘க்ரோத்’ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.

Papri Ghosh
தமிழில் 2015ம் ஆண்டில் வெளியான ‘டூரிங் டாக்கீஸ்’ என்ற படத்தில் நடித்தார். இதில் எஸ்ஏ சந்திரசேகர், மனோபாலா, ரோபோ சங்கர் போன்ற பிரபல நடிகர்கள் நடித்திருந்தனர். தொடர்ந்து விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்த ‘பைரவா’ படத்திலும் பாப்ரி கோஷ் நடித்திருந்தார்.
‘சர்கார்’ படத்திலும், சிறப்பு தோற்றத்தில் வந்து சென்றார். கடந்த சில ஆண்டுகளாக, சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டவர் இல்லம்’ சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார்.

Papri Ghosh
சினிமாவை காட்டிலும் சீரியலில்தான், பாப்ரி கோஷ்க்கு அதிக வரவேற்பும், செல்வாக்கும் இருக்கிறது. அதனால், அடுத்தடுத்து சீரியல் வாய்ப்புகள் அவருக்கு கிடைத்து வருகின்றன. அதனால் நாயகி, பாண்டவர் இல்லம், பூவே உனக்காக, சித்தி 2, மகராசி, வானத்தை போல, அருவி போன்ற சீரியல்களில், முக்கிய ரோல்களில், பாப்ரி கோஷ் பிஸியாக நடித்து வருகிறார்.

Papri Ghosh
சோஷியல் மீடியாவில் ஆக்டிவ் ஆக இருக்கிறார் பாப்ரி கோஷ். அதனால், அவர் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்கிறார். அம்மணி சிவந்த நிறம் கொண்டவர். எடுப்பான உடல் அமைப்பும், வசீகரமான முக தோற்றமும், மிக விரைவில் ரசிகர்களை கவர்ந்து விடுகின்றன. அதனால், அவரது வீடியோக்களை, புகைப்படங்களை ரசித்து, ரசித்து ரசிகர்கள் பகிர்ந்து வைரலாக்கி விடுகின்றனர்.
இப்போது, மிக வித்யாசமான ஒரு கோணத்தில், பாப்ரிகோஷ் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார், அதில், சோளக்காடு போல, வயல்வெளி போல காட்சி தரும் ஒரு காட்டுக்குள் அம்மணி, பேண்ட் சட்டை அணிந்த நிலையில், மல்லாக்க படுத்தபடி வானத்தை பார்த்துக்கொண்டு இயற்கையை ரசித்தபடி இருக்கிறார்

Papri Ghosh
, அவரது உருவத்தை பெரியதாக காட்டும் இந்த வீடியோ காட்சி பின், அப்படியே பின்வாங்கி சென்று காடு முழுவதையும் ‘கழுகு’ பார்வையில் காட்டுகிறது. முதலில் அவரை குளோசப்பில் காட்டிவிட்டு, பின் ஒரு ஆயிரம் மீட்டர் அப்படியே பின்னோக்கி மேலே சென்று, அந்த காடு முழுவதையும் காட்டும் நிலையில், நடுக்காட்டுக்குள் படுத்திருக்கும் பாப்ரி கோஷ் உருவமே கடைசியில் தெரியாமல் போய் விடுகிறது.
இந்த வீடியோ இப்போது, வைரலாகி வருகிறது. மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு, தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.
You must be logged in to post a comment.