இளம் நடிகர் செய்த சீண்டல்.. குமுறி அழுத பானுப்ரியா.. ரகசியம் உடைத்த பிரபலம்..!

இளம் நடிகர் செய்த சீண்டல்.. குமுறி அழுத பானுப்ரியா.. ரகசியம் உடைத்த பிரபலம்..!

முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்துக்கொண்டிருந்த முன்னணி நடிகைகள், கதாநாயகிகளாக கொண்டாடப்பட்டவர்கள், அடுத்த 5 ஆண்டுகளில், அல்லது 10 ஆண்டுகளில் முன்னாள் கதாநாயகிகளாகி விடுகின்றனர். ஏன் அந்த ஹீரோவுக்கே கூட அக்காவாக, அம்மாவாக நடிக்கும் சூழ்நிலைக்கு வந்து விடுகின்றனர்.

அது நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்ற ஹீரோக்களுக்கு கூட நடந்திருக்கிறது. ஆரம்ப காலத்தில் ரஜினி, கமல் போன்றவர்களுக்கு ஜோடியாக நடித்த சுஜாதா, ஸ்ரீ வித்யா போன்றவர்கள் பிற்காலத்தில் அவர்களே அக்காவாக, அம்மாவாக நடித்தும் இருக்கின்றனர்.

ஆனால் ஹீரோக்கள் மட்டும் சொட்டை விழுந்த தலைக்கு விக்கை மாட்டிக் கொண்டு தன்னைவிட 40 வயது குறைந்த இளம் நாயகிகளுடன் கொஞ்சி குலாவி குத்தாட்டம் போடுகின்றனர்.

பானுப்ரியா

நடிகை பானுப்பிரியா, கடந்த 1980, 90களில் தமிழ் சினிமாவில் மிக முக்கிய முன்னணி நடிகையாக இருந்தவர். விஜயகாந்துடன் பரதன், சத்ரியன் படங்களில் நடித்திருந்தார்.

அதே போல் கார்த்திக்குடன் கோபுர வாசலிலே, அமரன் போன்ற படங்களில் நடித்திருந்தார். சத்யராஜ், பிரபு, அர்ஜூன், சிவக்குமார் போன்றவர்களுடன் பானுப்ரியா ஜோடியாக நடித்தவர்.

ஆளுமை மிக்க நடிகை

பானுப்ரியாவின் தங்கை நிஷாந்தியும் ஒரு நடிகைதான். எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் நடித்திருப்பார். பானுப்ரியா ஒரு மிகச்சிறந்த ஆளுமை மிக்க நடிகை. சிங்கிள் டேக் நடிகை என்ற பாராட்டையும் பெற்றவர்.

இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 157 படங்களில் நடித்துள்ள அவருக்கு 56 வயதாகிறது. அபிநயா என்ற மகள் இருக்கிறார். கணவர் இறந்துவிட்டார்.

செய்யாறு பாலு

நடிகை பானுப்ரியா குறித்து பிரபல சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியதாவது, பானுப்ரியா தமிழ் சினிமாவில் பல படங்களில் தன்னை அற்புத நடிகையாக வெளிப்படுத்தியவர்.

விஜயகாந்த், கார்த்திக், சத்யராஜ் என யாருடன் நடித்தாலும் அவரது நடிப்பு அற்புதமாக இருக்கும். சைதை தமிழரசி போன்ற சோடா பாட்டில் சுற்றுகிற கேரக்டரிலும் நடிப்பார். ஆஹா போன்ற படத்தில் மடிசார் கட்டிக்கொண்டு மாமியாக சாந்தமாக நடித்தும் அசத்துவார்.

ஆனால் சமீபமாக பானுப்ரியாவுக்கு நினைவுத்திறன் குறைந்துவிட்டதாக தகவல் பரவியது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி ஊடகங்களிலும் பானுப்ரியாவின் நினைவுத்திறன் குறைந்து விட்டது என்ற தகவல் பரவியது.

இதையும் படியுங்கள்: எந்த பொண்ணுக்கும் என் நிலைமை வரக்கூடாது.. மனதை ரணமாக்கும் நடிகை நளினியின் பேட்டி..!

நேரில் வந்த நடிகை ராதா

ஆனால் அப்படிப்பட்ட ஒரு சூழலில், சினிமா சார்ந்த யாருமே பானுப்ரியாவை அழைத்து அப்படி ஒரு செய்தி பரவி வருகிறதே, உண்மையா என்று கூட போனில் கூட யாரும் விசாரிக்கவில்லை. ஆனால் மும்பையில் இருந்து நேராக ஐதராபாத்தில் உள்ள பானுப்ரியா வீட்டுக்கு வந்து நேரில் நலம் விசாரித்தவர் நடிகை ராதா.

உடனடியாக மும்பைக்கு கிளம்பு, உனக்கு மருத்துவ சிகிச்சை அளித்து சரிசெய்து விடலாம் என அழைத்திருக்கிறார். அதெல்லாம் இல்லை என மறுத்திருக்கிறார் பானுப்ரியா.

ஷூட்டிங் ஸ்பாட்டில்

இந்நிலையில் ஒரு தமிழ்பட ஷூட்டிங்கில் கலந்துக்கொண்ட போது கேமரா முன் நின்று சில வசனங்களை பேசிய போது, சரியாக ஞாபகத்தில் வசனங்கள் நிற்காமல், பானுப்ரியா நிறைய முறை டேக் வாங்கியிருக்கிறார்.

இதையும் படியுங்கள்: முரளி.. டேனியல் பாலாஜி.. நடிகர் விஜய்.. மூவரும் உறவினர்கள்.. எப்படி தெரியுமா..?

இவங்களையே மாத்துங்க…

அப்போது பானுப்ரியாவுடன் நடித்த இளம் நடிகர், ஒண்ணு டயலாக்கை மாத்துங்க, இல்லைன்னா இவங்களையே மாத்துங்க என கோபமாக சொல்லி இருக்கிறார். இதற்கும் அந்த இளம் ஹீரோவின் அப்பாவுடனும் நடித்திருக்கிறார் பானுப்ரியா.

சீண்டலால்…

இளம் நடிகர் செய்த அந்த சீண்டலால், அந்த இடத்திலேயே குமுறி அழுதார் பானுப்ரியா என நடந்த ரகசியத்தை உடைத்திருக்கிறார் பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு.