எந்த பொண்ணுக்கும் என் நிலைமை வரக்கூடாது.. மனதை ரணமாக்கும் நடிகை நளினியின் பேட்டி..!

எந்த பொண்ணுக்கும் என் நிலைமை வரக்கூடாது.. மனதை ரணமாக்கும் நடிகை நளினியின் பேட்டி..!

கடந்த 1980களில், தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை நளினி. பல வெற்றிப் படங்களில் நடித்தவர். உதவி இயக்குனராக இருந்த ராமராஜனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அதன்பிறகு ராமராஜனும் சினிமா நடிகராகி முன்னணி கதாநாயகனாக மாறினார். 14 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த அவர்கள், ஒரு கட்டத்தில் பிரிந்து விட்டனர்.

நடிகை நளினி

தன் கடந்த கால வாழ்க்கை அனுபவங்கள் குறித்து நடிகை நளினி நேர்காணல் ஒன்றில் கூறியதாவது,

சினிமாவில் நடித்ததை விட சீரியல்களில் நடித்ததுதான் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. சின்னத்திரையில் நடித்து என்னை நானே பல விஷயங்களில் மெருகேற்றி இருக்கிறேன். நான் ரசித்து ரசித்து நடித்துக்கொண்டு இருக்கிறேன்.

சீரியலில்..

நான் மிகவும் மென்மையான கேரக்டர் கொண்டவள். ஆனால் சீரியலில் நடித்த போதுதான் எனக்குள் துணிச்சல் தைரியம் அதிகரித்தது. நம்மாலும் எதுவும் முடியும் என்ற தன்னம்பிக்கையை கொண்டு வந்தது. அந்த தைரியத்தில்தான் என் பிள்ளைகளை நல்ல முறையில் படிக்க வைத்து பெரியவர்கள் ஆக்கினேன்.

சினிமாவில் நடிப்பது தினமும் தினம் கஷ்டம்தான். சினிமா ஒன்றும் அவ்வளவு ஈஸியாக வந்துவிடாது. ஆனால் இப்போது சினிமா சிலருக்கு ஈஸியாக இருக்கலாம். நான் ஆரம்பத்தில் நிறைய படங்களில் நடித்துவிட்டு டைரக்டர்ஸ் பிடிக்காமல் வெளியே வந்திருக்கிறேன்.

இதையும் படியுங்கள்: முரளி.. டேனியல் பாலாஜி.. நடிகர் விஜய்.. மூவரும் உறவினர்கள்.. எப்படி தெரியுமா..?

பயந்து பயந்து நடிக்கிறேன்

இப்பவும் நான் நல்ல பெயர் வாங்க வேண்டுமே என்ற எண்ணத்துடன்தான் பயந்து பயந்து நடித்துக்கொண்டு இருக்கிறேன். நடிகையாக இருப்பதால் நிறைய சுதந்திரங்களை இழந்திருக்கிறேன் என்ற சிலர் சொல்கின்றனர். ஆனால் எனக்கு அப்படியல்ல. எங்கு சென்றாலும் நான்கு பேர் இருக்கின்றனர். அது பாதுகாப்பாக இருக்கிறது.

ராமராஜனை விட்டு பிரியும்போது…

என் கணவர் ராமராஜனை விட்டு பிரியும் போது நான் வாழ முடியுமா என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. அதனால் தற்கொலை செய்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். ஆனால் என் குழந்தைகளையும் சேர்த்து 3 பேருமே இறந்து விடலாம் என்றுதான் நினைத்தேன்.

இதையும் படியுங்கள்: நடிகர் முரளியின் மகளை பார்த்துள்ளீர்களா..? இப்போது என்ன செய்கிறார் பாருங்க..!

கிருஷ்ணதாசி சீரியலில்…

அப்போதுதான் கிருஷ்ணதாசி சீரியலில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அந்த சீரியலில் நான் நடித்த மனோன்மணி கேரக்டர்தான் என்னை நம்பிக்கை அளித்து வாழ வைத்தது. தைரியமான பெண்ணாக மாற்றியது. மீண்டும் சினிமாவில் நடிக்கிற சூழல் எனக்கு பிற்காலத்தில் உருவானது.

என்னுடைய திருமண வாழ்க்கையில் 14 ஆண்டுகள் சந்தோஷமாக வாழ்ந்தேன். ஒவ்வொரு நாளிலும் நடந்த நல்லது, கெட்டதுகளில் நல்லதை மட்டுமே எடுத்துக்கொண்டேன். மார்ச் 8 மகளிர் தினத்தன்றுதான் எனக்கு விவாகரத்து ஆனது. அந்த நாளில் இப்படி ஒரு நிலைமை யாருக்குமே வரக்கூடாது என நினைத்தேன்.

என் நிலைமை வரக்கூடாது..

ஏனென்றால் வாழ்நாள் முழுவதும் ஒரே கணவருடன் வாழ ஆசைப்பட்டவள் நான். என் கணவர் இல்லாத ஒரு வாழ்க்கை என்பதை நினைத்து கூட பார்க்க முடியாத நான், இன்று மதுரைக்கார பெண்ணாக தைரியத்துடன் தலைநிமிர்ந்து வாழ்ந்துக்கொண்டு இருக்கிறேன், என்று கூறியிருக்கிறார்.

எந்த பொண்ணுக்கும் என் நிலைமை வரக்கூடாது.. மனதை ரணமாக்கும் நடிகை நளினி வார்த்தைகளுக்கு பின், அவர் சாதித்து காட்டிய வாழ்க்கை நம் கண்களுக்கு தெரிகிறது.