முரளி.. டேனியல் பாலாஜி.. நடிகர் விஜய்.. மூவரும் உறவினர்கள்.. எப்படி தெரியுமா..?

நடிகர் முரளி கடந்த 2010ம் ஆண்டில் திடீரென காலமானார். அவரது திடீர் மறைவு தமிழ் சினிமா துறையினரை மட்டுமின்றி, ரசிகர்களையும் மிகப்பெரிய வருத்தத்தில் தள்ளியது. அவரது சித்தி மகன், தம்பி டேனியல் பாலாஜி கடந்த சில தினங்களுக்கு முன்புதான் திடீரென மாரடைப்பால் காலமானார். சினிமாவில் கொடூர வில்லனாக மிரட்டிய அவர், மிகச் சிறந்த மனிதராக வாழ்ந்திருக்கிறார் என்பதை அதன்பின்பே பலராலும் அறிய முடிந்தது.

ஏனெனில் ஆவடியில் சொந்தமாக கோவில் கட்டி, பொதுமக்களுக்கு அர்ப்பணித்து இருக்கிறார். இது என் சொந்த கோவில் அல்ல. பொதுமக்கள், பக்தர்களுக்கு சொந்தமானது என்று கூறியிருக்கிறார். மேலும், இறந்த பிறகு தனது கண்களை தானமாக தந்திருக்கிறார்.

நடிகர் முரளி, நடிகர் விஜய், நடிகர் டேனியல் பாலாஜி என மூன்று பேருமே இதுவரை எதிலும் சம்பந்தப்பட்டவர்களாக இதுவரை எதிலும் இருந்தது இல்லை. இந்த நிலையில், அவர்கள் மூன்று பேரும் உறவினர்கள் என்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை தந்துள்ளது. ஆனால் அவர்கள் நெருங்கிய உறவினர்கள் என்பதை இந்த தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

முரளி

நடிகர் முரளி கர்நாடகாவை சேர்ந்தவர். அவரது அப்பா சித்தலிங்கா திரைப்பட இயக்குனர்தான். ஆனால் தமிழ் படங்களில் நடித்து பிரபலமானார் முரளி.

நடிகர் முரளியின் மனைவி பெயர் ஷோபா. முரளி – ஷோபா தம்பதிக்கு காவ்யா என்ற மகளும், அதர்வா என்கிற மகனும், ஆகாஷ் என்ற மகனும் உள்ளனர். காவ்யா, இ என் டி டாக்டராக, காவேரி மருத்துவமனையில் பணி செய்கிறார். அதர்வா இன்னும் திருமணம் செய்யாத நிலையில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

இதையும் படியுங்கள்: நடிகர் முரளியின் மகளை பார்த்துள்ளீர்களா..? இப்போது என்ன செய்கிறார் பாருங்க..!

சினேகா பிரிட்டோ

ஆனால் அதர்வாவின் தம்பி தன்னுடன் கல்லூரியில் படித்த சக மாணவி சினேகா பிரிட்டோ என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

சினேகா பிரிட்டோவின் தந்தை ஷேவியர் பிரிட்டோ ஒரு தொழிலதிபர். சினிமா தயாரிப்பாளராகவும் இருக்கிறார். நடிகர் விஜய் நடித்த செந்தூரப்பாண்டி, தேவா, பீஸ்ட் உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் இவர்தான்.

விஜயின் அத்தை மகள்

ஷேவியர் பிரிட்டோ, விஜயின் அப்பா எஸ்ஏ சந்திரசேகரின், தங்கை மகளை திருமணம் செய்தவர். அதாவது விஜயின் மகளை மணந்தவர். அந்த வகையில் அவர் அண்ணன் முறை ஆகிறார்.

அவரது மகளை திருமணம் செய்த வகையில் ஆகாஷின் தந்தை முரளிக்கு விஜய் உறவினராகிறார்.

இதையும் படியுங்கள்: நின்று போன KPY பாலா திருமணம்.. பெண் வீட்டார் போட்ட கண்டிஷன்.. மனமுடைந்த பாலா..

டேனியல் பாலாஜி

இதற்கிடையே நடிகர் முரளியின் அம்மாவும், நடிகர் டேனியல் பாலாஜியும் அம்மாவும் உடன் பிறந்த சகோதரிகள். அந்த வகையில், முரளியின் சித்தி பையன்தான் டேனியல் பாலாஜி. அதன்படி முரளியும், டேனியல் பாலாஜியும் அண்ணன் தம்பிகள்.

நெருங்கிய உறவினர்கள்

அந்த வகையில் முரளியின் இளைய மகன் ஆகாஷ், விஜயின் உறவினர் ஷேவியர் பிரிட்டோவின் மகள் சினேகா பிரிட்டோவை திருமணம் செய்ததால், முரளி – டேனியல் பாலாஜி – விஜய் ஆகியோர் நெருங்கிய உறவினர்களாக இருக்கின்றனர்.