“மனசுல மீனுக்குட்டி துள்ளுது..” – நடிகை சிம்ரன் கிளுகிளு போஸ்..! – சிணுங்கும் ரசிகர்கள்..!

சினிமா நடிகைகளில் அசததலான அழகி சிம்ரன். இவர் நடிப்பில் மட்டுமல்ல, நடனத்தில் நம்பர் ஒன் என்பதை பல பாடல் காட்சிகளில் நிரூபித்திருக்கிறார். மும்பையை சேர்ந்த இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானது, 1997 ல் வசந்த் இயக்கத்தில், விஜய் சூர்யா இணைந்து நடித்த நேருக்கு நேர் படத்தில்தான். இதில், ஸ்கூல் பையன் போல இருக்கும் சூர்யாவை, சிம்ரன் துரத்தி துரத்தி காதலிப்பார்.

அதன்பிறகு ஒன்ஸ்மோர், நட்புக்காக, அவள் வருவாளா, வாலி, ஜோடி, துள்ளாத மனமும் துள்ளும். பிரியமானவளே, உன்னைக்கொடு என்னைத் தருவேன், 12 பி, பார்த்தாலே பரவசம், பஞ்ச தந்திரம், பம்மல் கே சம்பந்தம், ரமணா, கன்னத்தில் முத்தமிட்டால், யூத், பிதாமகன், கோவில்பட்டி வீரலட்சுமி, உதயா, ஆயுத எழுத்து, நியூ, ஏழுமலை, சேவல், வாரணம் ஆயிரம், துப்பறிவாளன், சீமராஜா, பேட்ட, என, தமிழில் இவர் நடித்த படங்கள் மிக அதிகம்.

விஜய், அஜித், சூர்யா படங்களில் அதிக எண்ணிக்கையில் நடித்திருக்கிறார். சில படங்களில் சில காட்சிகளில், பாடல்களில் மட்டுமே நடனமாடி நடித்த படங்களும் இதில் உண்டு. பேட்ட, யூத், பிதாமகன், துப்பறிவாளன் போன்ற படங்களை சொல்லலாம்.

சிம்ரன், நடித்தது எல்லாமே வெற்றிப்படங்கள்தான். கமர்ஷியல் படங்களாக இந்த படங்கள், ரசிகர்ளுக்கு மிக பிடித்தவையாக அமைந்ததால், தமிழ் சினிமாவுக்கு வந்த சில ஆண்டுகளிலேயே சிம்ரன் முன்னணி நடிகையாக வந்துவிட்டார். அதுவும் ஒன்ஸ்மோர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மட்டுமின்றி, செவாலியே நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் நடிக்கும் அற்புத வாய்ப்பை பெற்றார்.

நல்ல நடிப்பாற்றல் கொண்ட சிம்ரன், நடன இயக்குநர் ராஜூ சுந்தரம், நடிகர் கமல்ஹாசன் ஆகியோருடன் ‘கிசுகிசு’க்கப்பட்டார். ஆனால், நாளடைவில் அது வதந்தியாக அணைந்து போனது.

--Advertisement--

ஒரு கட்டத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அபிமானியாக தன்னை வெளிப்படுத்திக்கொண்ட சிம்ரன், அதிமுக வுக்கு ஆதரவாக, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபுட்டார், தமிழகத்தில் பல பகுதிகளில், அவரை, ரசிகர்கள் நேரில் காண இந்த தேர்தல் பிரசாரம் வாய்ப்பாக அமைந்தது.

அவ்வப்போது, சிம்ரன் தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை அப்டேட் செய்து வருகிறார். அதில், சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் வந்த அவரது இளமைக்கால புகைப்படங்களை காணும்போது, இப்படி ஒரு அழகா? என ரசிக்கவும் தோன்றுகிறது.

காலம் இரக்கம் இல்லாதது; எப்படிப்பட்ட அழகையும் வயதை கொண்டு முதுமையால் அழிக்கப் பார்க்கிறது. ஆனால், எப்படி இருப்பினும் சிம்ரனை பார்க்கும் போது, சிலு சிலு என மனசுக்குள் ரசிகர்களுக்கு காற்று வீசவே செய்கிறது.