Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

” உச்சி முதல் பாதம் வரை உடல் அழகு குறிப்புகள்..!” – ஆறு என்னென்ன பார்க்கலாமா..!

நீ நடந்தால் நடை அழகு, நீ சிரித்தால் சிரிப்பழகு என்று ஒவ்வொன்றையும் நாம் அழகாக பார்க்கும்போது உங்கள் உச்சி முதல் பாதம் வரை உடல் அழகு மெருகேற என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய ஆறு, அழகு குறிப்புகளை பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

நம் மேனியில் அழகாக மாற்ற எண்ணற்ற செயற்கை பொருட்களை நாம் பயன்படுத்தியும் அதனால் போதிய அளவு மாற்றம் கிடைக்கவில்லை என்று மன உளைச்சலோடு இருப்பவர்கள் கட்டாயம் இந்த இயற்கை அழகு குறிப்புகளை பயன்படுத்துவதன் மூலம் பக்க விளைவில்லாத மேனி அழகை நீங்கள் பெற முடியும்.

உச்சி முதல் பாதம் வரை அழகா உதவும் அழகு குறிப்புகள்

  1. உங்கள் உதடு சிவப்பாக மாற வேண்டும் என்றால் நீங்கள் பீட்ரூட் சாறை தினமும் இரவு உறங்குவதற்கு முன்பு லேசாக அப்படியே தேய்த்து விடுங்கள். இப்படி நீங்கள் தொடர்ந்து செய்வதின் மூலம் உங்கள் உதடு விரைவாக சிவப்பு நிறத்தை அடையும்.

  1. முட்டைக்கோஸ் ஒரு துண்டு எடுத்து மிக்ஸியில் போட்டு நன்கு அடித்து அதன் சாறை எடுத்து உங்கள் முகத்தில் தடவி வந்தால் முகச்சுருக்கங்கள் நீங்கும். இதே சாரை நீங்கள் உங்கள் சருமங்களில் தடவி வர எங்கெங்கு சுருக்கங்கள் இருக்கிறதோ அந்த சுருக்கங்களை எல்லாம் நீக்கி இளமையான தோற்றத்தை தரும்.

  1. இரவில் உறங்குவதற்கு முன்பு சிறிதளவு மஞ்சள், தேன் இவை இரண்டையும் கலந்து நீங்கள் உள்ளுக்குள் சாப்பிட்டு வந்தால் உங்கள் உடல் மினு மினுப்பாவதோடு மேனி அழகு கூடும்.

  1. கழுத்தில் இருக்கும் கருப்பு மறைய சிறிதளவு வெங்காயச் சாறு, ஆலிவ் எண்ணெய், பயத்த மாவு இவை எல்லாவற்றையும் கலந்து பேஸ்ட் பக்குவத்தில் உங்கள் கழுத்துப் பகுதியில் தடவி விட்டு பிறகு குளிர்ந்த நீரில் கழுவுவதன் மூலம் கழுத்தில் இருக்கும் கருப்பு அத்தனையும் விரைவில் நீங்கும்.

  1. முல்தான் மெட்டியில் வாரத்துக்கு ஒருமுறை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் முகத்தில் இருக்கக்கூடிய எண்ணெய் பிசுக்கு விரைவில் மறையும். சருமத்தில் எண்ணெய் வடிதல் ஏற்படாது.

  1. தினமும் அரிசி கழிந்த நீரில் உங்கள் முகத்தை கழுவுவதன் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகள் எளிதில் மறையும்.
Continue Reading
 

More in

Trending Now

To Top