“புதனுக்கு உரிய பாசிப்பயிறு..!” – புதன்கிழமை சாப்பிட அளவற்ற ஆரோக்கிய பயன்கள்..!!

இன்று அனேகமான வீட்டில் அதிக அளவு துவரம் பருப்பு மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. இதை தவிர்த்து புதன்கிழமை தோறும் புதன் பகவானுக்கு உரிய பாசிப்பயிறை நீங்கள் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களை பெற முடியும்.

 உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடிய இந்த பாசிப்பயிற்றை சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை இந்த கட்டுரையை படிக்க நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

பாசிப்பயிறு  சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

👍உங்கள் உணவில் எங்கள் பாசிப்பயிரை சாப்பிடுவதின் மூலம் வைட்டமின் பி 9, பி 1, வைட்டமின் எ, சி, இரும்புச்சத்து, நார்ச்சத்து, புரதச்சத்து போன்ற பல சத்துக்கள் உங்களுக்கு மிக எளிதாக கிடைக்கும். குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணமாக கூடிய பயிறு வகைகளில் ஒன்று தான் இது.

👍மேலும் நீங்கள் பாசிப்பயிரை முளைகட்டி சாப்பிடுவதின் மூலம் உங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் எளிதில் கிடைப்பதோடு  செரிமானத்துக்கு உதவக்கூடிய பேக்டின் நார்ச்சத்து இதில் அதிக அளவு உள்ளது.

 👍இதில் இருக்கக்கூடிய ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் கெட்ட கொழுப்புகள் உடலில் சேர்வதை தடுப்பதால் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறப்பாக இருக்கும்.

--Advertisement--

👍 பாசிப்பயிரில் இருக்கும் பொட்டாசியம் ,நார்ச்சத்து ரத்த அழுத்தத்தை சீராக்க வைத்துக்கொள்ள உதவுவதால் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு ஏற்ற உணவாக இந்த பாசிப்பயிறு உள்ளது. இந்த பயிரை சுண்டல் போட்டு நீங்கள் தினமும் உட்கொள்ளலாம்.

👍 உடல் எடையை குறைக்க வேண்டும் என்று விருப்பமாக இருப்பவர்கள் இந்த பாசிப்பயிரை உட்கொள்வதின் மூலம் இதில் இருக்கும் நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து ஹெர்லின்  செயல்பாட்டை நிறுத்துவதின் மூலம் உங்கள் உடல் எடை விரைவாக குறையும்.

👍 கர்ப்பிணி பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் தேவையான அனைத்து வித ஆரோக்கியத்தையும் வழங்கக்கூடிய இந்த பாசிப்பயறில் ஃபாலேட்டுகள்  அதிக அளவு காணப்படுகிறது.எனவே இவர்கள் கட்டாயம் உணவில் இதை சேர்த்துக் கொள்ளலாம்.

👍 சருமத்தை பாதுகாப்பதில் இதன் பணி அளப்பரியது. இதில் இருக்கக்கூடிய ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள், பிரி ரேடிக்கல்களின் செயல்பாட்டை தடுத்து நிறுத்தி உங்கள் சருமத்திற்கு பொலிவை ஏற்படுத்துகிறது.

 எனவே அனைவரும் கட்டாயம் வாரத்தில் ஒருமுறை துவரம் பருப்புக்கு பதிலாக இந்த பாசிப்பயித்தை உணவில் சேர்த்துக் கொள்வதை கட்டாயம் ஆக்கிக் கொள்வதின் மூலம் இத்தகைய நன்மைகளை எளிதில் அடைக்க முடியும்.