காதல் தோல்வி.. 3 தடவை மோசமான முடிவு.,. 40 வயதாகியும் திருமணம் செய்யாத பாக்யராஜ் மகள்.. தற்போதைய நிலை..!

காதல் தோல்வி.. 3 தடவை மோசமான முடிவு.,. 40 வயதாகியும் திருமணம் செய்யாத பாக்யராஜ் மகள்.. தற்போதைய நிலை..!

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக, இயக்குநராக, திரைக்கதை ஆசிரியராக கே. பாக்யராஜ் பல சாதனைகளை செய்தவர்.

ஒரு இயக்குநராக, தமிழ் சினிமாவில் பாக்யராஜ் மூலம் பல நடிகர், நடிகையர் அறிமுகமாகினர்.

குறிப்பாக கவுண்டமணி, செந்தில், கல்லாப்பட்டி சிங்காரம், பாண்டியராஜன், பார்த்திபன் என பலரை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்தவர்.

நடிகர் பாக்யராஜ்

சுவரில்லாத சித்திரங்கள், இன்றுபோய் நாளை வா, மௌனகீதங்கள், அந்த 7 நாட்கள், தாவணி கனவுகள், முந்தானை முடிச்சு, தூறல் நின்னு போச்சு என பல வெற்றிப்படங்களை தந்தவர்.

நடிகர் பாக்யராஜ், அவரது மனைவி நடிகை பூர்ணிமா, மகன் ஷாந்தனு, மகள் சரண்யா என நான்கு பேருமே சினிமாத்துறை சார்ந்தவர்கள்தான். ஷாந்தனு, சரண்யா சில படங்களில் நடித்தனர்.

ஆனால் இரண்டு பேருமே ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.

சரண்யா பாக்யராஜ்

ஷாந்தனு போல, சரண்யாவுக்கு பாக்யராஜ் மகள் என்ற அடையாளம் கூட கிடைக்கவில்லை. வெளிநாட்டில் படித்த போது, அங்கு காதல் வசப்பட்ட சரண்யா பாக்யராஜ், பலமுறை தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

ஆனால் பாக்யராஜ் குடும்பம், தற்கொலைக்கு முயன்ற அவரை காப்பாற்றி மனதை தேற்றி வைத்துள்ளது. அதனால் வெளியிடங்களுக்கு செல்லாமல், குடும்ப நிகழ்ச்சிகளில் மட்டுமே சரண்யா கலந்துக்கொள்கிறார்.

40 வயதாகியும்…

சரண்யா பாக்யராஜ், 40 வயதாகியும் இன்னும் தனிமையில்தான் இருக்கிறார். திருமணம் ஆகவில்லை. ஷாந்தனுவுக்கு திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் குழந்தை பிறக்கவில்லை.

இதையும் படியுங்கள்:  அந்த மூடு வந்தா இதைத்தான் பண்ணுவேன்.. கூச்சமின்றி ஓப்பனாக சொன்ன ரேஷ்மா பசுபுலேட்டி..!

மகளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. மகனுக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லை என்ற வேதனையால் மனம் வாடி கவலைப்பட்டுக் கொண்டு இருந்தாலும் வெளிப்படையாக அதை காட்டாமல் இருக்கிறார்கள் பாக்யராஜ் மற்றும் பூர்ணிமா தம்பதி.

பிஸினஸில்…

எனினும் திருமணம் ஆகவில்லை என்பதை பெரிய பாதிப்பாக எடுத்துக்கொள்ளாமல், சரண்யா பாக்யராஜ் ஷாப்பிங் மற்றும் ரீடெய்ல் வணிகத்தில் இப்போது ஈடுபட்டு வருகிறார்.

சினிமாவை விட்டு முற்றிலுமாக விலகி, பெண்களுக்கான ஆடை அணிகலன்கள் சார்ந்த பிஸினஸில் அதிக ஆர்வமாக இருந்து வருகிறார்.

இதையும் படியுங்கள்:  பிறந்தநாள் பார்ட்டி.. ஓவர் டைட்டான கவர்ச்சி உடை.. அவருக்கு முத்தம்.. கிறங்கடிக்கும் சன் டிவி சீரியல் நடிகை..!

மேலும், நடிகை ஹன்சிகா மோத்வானி 51வது படமான மேன் படத்தில், ஸ்கிரீன் ப்ளே வேலையை செய்திருக்கிறார்.

காதல் தோல்வியால் 3 தடவை மோசமான முடிவுகளை எடுத்தவர். 40 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாத பாக்யராஜ் மகள் சரண்யா பாக்யராஜ், தற்போதைய நிலையில் பிஸினஸ் வுமனாக மாறியிருக்கிறார்.