அந்த மூடு வந்தா இதைத்தான் பண்ணுவேன்.. கூச்சமின்றி ஓப்பனாக சொன்ன ரேஷ்மா பசுபுலேட்டி..!

அந்த மூடு வந்தா இதைத்தான் பண்ணுவேன்.. கூச்சமின்றி ஓப்பனாக சொன்ன ரேஷ்மா பசுபுலேட்டி..!

சமூக வலைதளங்களில் அடிக்கடி தனது புகைப்படங்களை, வீடியோக்களை பதிவிட்டு தன் ரசிகர்களை குஷிப்படுத்துபவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறார்.

இன்றைய சீரியல்களை பொருத்தவரை, நாயகி வேடத்தில் நடிப்பவர்களை விட வில்லி கேரக்டரில் நடிப்பவர்கள் எளிதில் ரசிகர்களை கவர்ந்து விடுகின்றனர்.

அந்த வகையில் வில்லி கேரக்டரில் நடிக்கும் ரேஷ்மா பசுபுலேட்டியை ஏராளமான ரசிகர்களை பெற்றிருக்கிறார்.

ரேஷ்மா பசுபுலேட்டி

வேலையின்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் புஷ்பா கேரக்டரில் நடித்தவர் ரேஷ்மா பசுபுலேட்டி. இந்த படத்தில் நடிகர் சூரியின் மனைவியாக புஷ்பா நடித்திருப்பார்.

புஷ்பா புருஷன் நான்தான் என, ஒவ்வொரு காட்சியிலும், சூரியின் காமெடி இந்த படத்தில் பலத்த வரவேற்பை பெற்றது.

ஆனால் இந்த ஒரு படத்தை தவிர, வேறு படங்களில் ரேஷ்மா நடிக்கவில்லை.

சினிமாவில் தொடர்ந்து ரேஷ்மா பசுபுலேட்டி நடிக்காததற்கு முக்கிய காரணம், புஷ்பா கேரக்டரை போலவே கிளாமராக தொடர்ந்து நடிக்க வாய்ப்பு வந்துள்ளது.

சமூக வலைதளங்களின் வாயிலாக…

ஆனால் சீரியலில் நடித்தும், சமூக வலைதளங்களின் வாயிலாகவும் ரசிகர்களின் மனதில் மிக பிரபலமான ஒரு நடிகையாக ரேஷ்மா பசுபுலேட்டி இருந்து வருகிறார்.

சினிமாவில், சீரியலில் நடிப்பதற்கு முன்பு தொலைக்காட்சி தொடர்களில் தொகுப்பாளராகவும், சில ஆண்டுகள் விமானப் பணிப்பெண்ணாகவும் பணிசெய்தவர் ரேஷ்மா பசுபுலேட்டி என்பதும் கவனிக்கத்தக்கது.

சீரியல் பக்கம்

ஷகிலா, கிரண், ஷாம்லி போல நம்மையும் கவர்ச்சி நடிகையாக அடையாளப்படுத்தி விடுவர் என்பதால்தான், சினிமாவை புறக்கணித்து விட்டு சீரியல் பக்கம் ஒதுங்கி விட்டார் ரேஷ்மா பசுபுலேட்டி.

இதையும் படியுங்கள்:  பிறந்தநாள் பார்ட்டி.. ஓவர் டைட்டான கவர்ச்சி உடை.. அவருக்கு முத்தம்.. கிறங்கடிக்கும் சன் டிவி சீரியல் நடிகை..!

விஜய் டிவியில் கடந்த 2017ம் ஆண்டில் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 1ல் போட்டியாளராக பங்கேற்றவர் ரேஷ்மா பசுபுலேட்டி. அப்போது தனது வாழ்க்கையில் நடந்த துயரங்களையும், திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட ஏமாற்றங்களையும் ரசிகர்களுடன் பகிர்ந்துக்கொண்டார்.

ரசிகர்களை கிறங்கடித்து…

சோஷியல் மீடியாவில் சேலையிலும், மாடர்ன் டிரஸ்சிலும் அடிக்கடி ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார் ரேஷ்மா பசுபுலேட்டி. அவருக்கு என தனியாக ஒரு ரசிகர் வட்டமே, சமூக வலைதளங்களில் இருக்கிறது.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி, பாக்கியலட்சுமி சீரியலில் மற்ற நடிகர், நடிகைகள் காம்பினேஷன் நடிக்கும் காட்சிகள் எனக்கு மிகவும் குறைவாகவே இருக்கும்.

ஜாலியான மூடில்…

ஆனால் நான் யூனிட்டுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன். நான் எப்போதும் அமைதியாக இருக்கும் சுபாவம் கொண்டவள் நான் கிடையாது. ஜாலியான மூடில் இருக்கும்போது அமைதியாக இருக்க முடியாது.

இதையும் படியுங்கள்:  பத்து வருஷம் ஆச்சு.. ஆனா.. இன்னும் அது தெரியல.. கூச்சமின்றி கூறிய கயல் ஆனந்தி..!

நான் இருக்கும் இடத்தை கலகலப்பாக வைத்துக் கொள்ள ஏதாவது செய்து கொண்டே இருப்பேன் என்று கூறியிருக்கிறார் ரேஷ்மா பசுபுலேட்டி.

ஜாலியான மூடு வந்தா கலகலப்பாக ஏதாவது செய்துகொண்டே இருப்பேன் என்று ஓப்பனாக ரேஷ்மா பசுபுலேட்டி கூறியிருக்கிறார்.