Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

தனது மகனுக்காக 80 வயதிலும் நடிக்க தயாரான இயக்குநர் பாரதிராஜா

இயக்குநர் இமயம் பாரதிராஜா, செம்மண் புழுதி பறக்கும் குக்கிராமங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியவர். பல வெற்றிப்படங்களை தந்து, இயக்குநராக கொடி கட்டி பறந்த பாரதிராஜா, ஒரு நடிகராகவும் தன் திறமையை பல படங்களில் வெளிப்படுத்தி இருக்கிறார்.கடந்தாண்டில், ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் தனுஷின் தாத்தா கேரக்டரில், பிரகாஷ்ராஜூக்கு அப்பாவாக நடித்திருந்தார்.

பாரதிராஜாவின் மகன் மனோஜ், பல படங்களில் நடித்திருக்கிறார். தாஜ்மகால், பல்லவன், காதல் பூக்கள், அன்னக்கொடி, ஈரநிலம், வருஷமெல்லாம் வசந்தம், அல்லி அர்ஜூனா உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

ஆனால், மிகப்பெரிய இயக்குநரான பாரதிராஜாவின் மகன் மனோஜ் நடித்த படங்கள், அவருக்கு மிகப்பெரிய புகழை பெற்றுத் தரவில்லை. சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வந்த ‘விருமன்’ படத்தில் கூட மனோஜ் கார்த்திக்கு அண்ணன் கேரக்டரில் நடித்திருந்தார். அந்தளவுக்கு, துணை நடிகரை போல சிறிய கேரக்டர்களில் நடிக்கும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டார்.

இதையடுத்து, நடிகராக மனோஜ் வெற்றி பெறாத நிலையில், மகனை இயக்குநராக வெற்றி பெற வைக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார் பாரதிராஜா.
தந்தையின் பாதையில் இனி இயக்குநரான பாரதிராஜா மகன் மனோஜ், படம் இயக்க உள்ளார். மனோஜ், ஏற்கனவே இயக்குநர் மணிரத்னத்திடம் ‘பம்பாய்’ படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொக்ட்ஷன் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படத்தை, மனோஜ் இயக்க உள்ளார். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் பாரதிராஜாவும் நடிக்கிறார். இந்த படத்துக்கு, ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை, வரும் 31ம் தேதி வெளியிட உள்ளனர். இந்நிகழ்ச்சியில், மணிரத்னம் உள்ளிட்ட முக்கிய இயக்குநர்கள் பங்கேற்று, இயக்குநர் மனோஜை வாழ்த்தவும் செய்கின்றனர்.

--Advertisement--

தான் இயக்கும் முதல் படத்திலேயே, தனது தந்தை பாரதிராஜா நடிப்பதும், பல பேரை நடிக்க வைத்த பாரதிராஜா, தனது மகனின் இயக்கத்தில் நடிப்பதும் குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி, பாரதிராஜாவும் ‘தாய்மெய்’ என்ற படத்தை இயக்க உள்ளதாகவும், தகவல் வெளியாகி உள்ளது.

Continue Reading
 

More in

Trending Now

To Top