போண்டா மணியின் உண்மையான பெயர் இது தான் – எப்படி போண்டா மணி ஆனார்..?

நகைச்சுவையோடு பிறரை சிரிக்க வைத்த நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமான விஷயம் அறிந்ததே. இந்நிலையில் அவரின் இந்த பரிதாப நிலையைப் பற்றி பிரபலங்கள் பலர் தெரிவித்திருந்த கருத்துக்கள் இணையத்தில் வைரலாகி விட்டது.

வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்று கூறுவார்கள். அப்படி பிறரை சிரிப்பின் மூலம் மகிழ்ச்சி வெள்ளத்தில் நனைய விட்ட போண்டாமணியின் இரு சிறுநீரகங்களும் செயல் இழந்த காரணத்தால் அதற்கு உரிய சிகிச்சைகளை எடுத்து வந்தார்.

இந்நிலையில் வீட்டில் இவர் இருந்த சமயத்தில் திடீரென மயங்கி விழுந்தார்.எனவே இவரை குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அங்கு பரிசோதனைகளை செய்து பார்த்த மருத்தவர்கள் அவர் உயிர் ஏற்கனவே பிரிந்துவிட்டது எனக் கூறி ரசிகர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்கள்.

போண்டா மணி வடிவேல் இணைந்து செய்த காமெடி என்று வரை ரசிகர்களின் மத்தியில் விரும்பி பார்க்கக் கூடிய காமெடிகளில் ஒன்றாக திகழ்கிறது. குறிப்பாக இருவரும் இணைந்து நடித்த வின்னர், இங்கிலீஷ்காரன், கண்ணும் கண்ணும், மருதமலை, ஆறு போன்ற படங்களில் போண்டா மணியின் நடிப்பை இன்றும் மக்கள் ரசித்து வருகிறார்கள்.

ஆனால் போண்டா மணியின் ஒரிஜினல் பெயர் போண்டா மணி அல்ல. அவரது உண்மையான பெயர் கேத்தீஸ்வரன் என்பது தான். ஆனால் அவர் ஏன்? எப்படி? போண்டா மணியாக மாறினார் என்பது பற்றி இனி பார்க்கலாம்.

--Advertisement--

இலங்கையைச் சேர்ந்த போண்டா மணி சிங்கப்பூரில் வேலை பார்க்கும் போது பாக்யராஜை நிகழ்ச்சி ஒன்றில் பார்த்திருக்கிறார். அதனை அடுத்து இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்று சென்னை வந்திருக்கிறார்.

ஆரம்ப நாட்களில் சின்ன, சின்ன வேடங்களில் நடித்த இவருக்கு பெரிய அளவு வருமானம் இல்லாமல் வறுமையில் இருந்திருக்கிறார். ஒரு வேளை சோற்றுக்கே காசில்லாமல் கஷ்டப்பட்டவர் வெறும் போண்டாவை வாங்கி சாப்பிட்டு சில நாட்கள் தனது பசியை போக்கியிருக்கிறார்.

மேலும் சினிமாவில் நடிக்க ஒரு நல்ல பெயர் வேண்டும். தன் பெயரை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டதால் தான் உயிர் வாழ உறுதுணையாக இருந்த போண்டாவை தனது பெயரின் முதல் இடத்திலும், தனது குருநாதரான கவுண்டமணியின் பெயரில் மணி என்பதை இரண்டாவது பெயராக போட்டு போண்டா மணி என்ற பெயரை சினிமாவுக்காக வைத்துக் கொண்டார்.

இந்த பெயர் தான் கடைசி வரை இவருக்கு அடையாளமாகவும், மக்கள் விரும்பக் கூடிய வகையில் அமைந்தது. எனவே இவரது உண்மையான பெயரான கேத்தீஸ்வரன் என்ற பெயர் மறைந்து போண்டா மணி என்ற பெயர் நிரந்தரம் ஆனது.