VADIVELU இப்படி பண்ணாதிங்க..! காமெடி நடிகர்கள் ஆதங்கம்..! என்ன விஷயம் தெரியுமா..?

காமெடி நடிகர் போண்டா மணி இன்று காலை திடீரென மரணமடைந்தார். கடந்த சில நாட்களாக ஓய்வு எடுக்காமல் வேலை பார்த்து வந்த போண்டா மணி திடீரென இன்று வீட்டில் மயங்கி விழுந்திருக்கிறார்.

பதறிப்போனா அவருடைய குடும்பத்தினர் அருகில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவரை பரிசோதனை செய்திருக்கிறார்கள். அப்பொழுது அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்று மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர்.

இந்த செய்தி இணைய பக்கங்களில் செய்தி ஊடகங்களில் வெளியானதும் ரசிகர்கள் இந்த நாள் இப்படியா விடிய வேண்டும்.. என்று வருத்தப்பட்டார்கள். பல்வேறு திரைப்படங்களில் கவனிக்க வைக்கும் அளவுக்கான காமெடி காட்சிகள் நடித்த ரசிகர்களை சிரிக்க வைத்தவர் நடிகர் போண்டாமணி.

காமெடி நடிகராக மட்டுமில்லாமல் குணச்சித்திரன் நடிகராகவும் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை கணக்கச்சிதமாக செய்யக்கூடியவர். பல்வேறு திரைப்படங்கள் இவருடைய காமெடி காட்சிகளை நினைவூட்டும் விதமாக இருக்கின்றன.

குறிப்பாக சுந்தரா டிராவல்ஸ், நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஆறு உள்ளிட்ட படங்களில் இவருடைய நகைச்சுவை காட்சி குறிப்பிடத்தக்க பார்வையாளர்களை கவர்ந்தது. இந்நிலையில், இவருடைய திடீர் மரணம் ரசிகர்களை கலங்க வைத்திருக்கிறது.

--Advertisement--

இது தொடர்பாக இவருடைய இறுதி சடங்கில் கலந்து கொண்ட பல்வேறு காமெடி நடிகர்கள் அவருடைய குடும்பத்தினருக்கு நிதி திரட்டி அவருடைய குழந்தைகளின் பெயரில் வைப்பு நிதியாக ஒரு தொகையை வங்கியில் செலுத்தி அதிலிருந்து வரும் வட்டியை வைத்து அவர்களுடைய குடும்பத்தை எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் நடத்திக் கொள்ளவும் அதே சமயம் அவர்களுடைய குழந்தைகளின் கல்வி செலவுகளை ஏற்றுக் கொள்ளவும் காமெடி நடிகர் பெஞ்சமின் தலைமையில் ஒரு நிர்வாகத்தை ஏற்படுத்திய அதற்குண்டான தொகையை வசூலிக்கும் வேளையில் இறங்கி இருக்கிறார்கள்.

காமெடி நடிகர்கள் பலரும் தங்களால் முடிந்த உதவியை செய்து போண்டாமணி அவர்களின் குடும்பத்திற்கு வைப்பு நிதியாக ஒரு தொகையை ஏற்பாடு செய்து கொடுக்க இருக்கிறார்கள். இது குறித்து நடிகர்கள் தங்களுடைய பேட்டியில் கருத்துக்களை பதிவு செய்தனர்.

குறிப்பாக பிரபல காமெடி நடிகர் கணேஷ், காமெடி நடிகை ஆர்த்தியின் கணவர்.. பேசும் பொழுது.. அண்ணா அவ்வளவுதான் வாழ்க்கை.. நேற்று வரை இருந்தவன் இப்போது இல்லை.. இவருடைய குடும்பத்தை நாம் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.. எங்களால் முடிந்த உதவியை செய்து விட்டோம்.. தயவு செய்து நீங்கள் இப்படி இருக்காதிங்க அண்ணா.. உங்களைத்தான் சொல்கிறேன்.. உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்.. புரியுதா அண்ணா.. தயவு செய்து உதவி செய்யுங்க… உங்களுக்கு புரிகிறதா..? என நடிகர் வடிவேலுவை மறைமுகமாக குறிப்பிட்டு அவரிடம் கோரிக்கையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

நடிகர் வடிவேலு காமெடி நடிகர்களுக்கு பட வாய்ப்புகளை வழங்குவது கிடையாது. தன்னுடன் நடித்து ஒன்று இரண்டு படங்களில் அவர்களுடைய காமெடி பேசப்பட்டால் அடுத்தடுத்த படங்களில் அவர்களுக்கு வாய்ப்புகளை தட்டி விட்டு விடுவார் என்று சக காமெடி நடிகர்கள் கூறிக் கொண்டிருக்கும் நிலையில் ஒருவர் இறந்தே போய் விட்டார் என்ற நிலையில் அவருக்கு பண உதவி செய்யுங்கள் என்று தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

இவர்களுடைய ஆதங்கத்திற்கு காரணம் இருக்கிறது. வடிவேலுவும் ஒரு நடிகர் தானே.. அவர் என்ன செய்வார்..? என்று பலரும் கேட்கலாம்.

ஆனால் ஒரு படத்தில் ஒரு காமெடி காட்சியில் நடிகர் வடிவேலுவுடன் பல காமெடி நடிகர்கள் நடிப்பார்கள். அந்த படத்தில் நடிகர் வடிவேலுவுக்கு சம்பளம் கோடிகளில் இருக்கும். ஆனால், உடன் அடிக்கக்கூடிய நடிகர்களுக்கு தின சம்பளமாக சில ஆயிரங்கள் தான் இருக்கும் என்பது பலரும் தெரியாத ரகசியம்.

எனவே தான் சின்ன சின்ன காமெடி நடிகர்கள் நடிகர் வடிவேலுவுடன் தங்களுக்கு உதவி செய்யுமாறு கேட்கிறார்கள். சின்ன சின்ன காமெடி நடிகர்கள் எல்லாம் சேர்ந்து உருவாக்கிய ஒரு நடிகர் தான் வடிவேலு.

வடிவேலு மட்டுமே வளர்ந்துவிடவில்லை என்பதை வடிவேலு உணர்ந்து கொள்ள வேண்டும் என ரசிகர்கள் போலவும் இணையத்தில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

கோடிக்கணக்கான பணம் வைத்துக் கொண்டு இருந்தாலும் கடைசியில் எங்கே அதை எங்கே கொண்டு செல்ல போகிறோம்.. இங்கே போண்டா மணியின் குடும்பத்தினருக்கு ஒரு தொகையை வைப்பு நிதிக்காக கொடுத்தீர்கள் என்றால் அவர்கள் காலம் முழுதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று வடிவேலுவிடம் தங்களுடைய வேதனைகளை பதிவு செய்து வருகின்றனர்.