“கொஞ்சம் போல விளக்கெண்ணெய் தேய்யுங்க..!” – வெய்யிலுக்கு முடிக்கு கவசம் மச்சி..!

வெயில் காலத்தில் அதிக அளவு ஏற்படும் வியர்வையின் மூலம் அது உங்கள் தலை முடிகளில் அதிகம் பரவி எண்ணற்ற வியாதிகளை ஏற்படுத்தி விடும். அது மட்டுமல்லாமல் முடி உதிர்தல் அதிகரித்து உங்கள் முடிகளின் ஆரோக்கியத்தை உரு குழைக்கும்.

எனவே எந்த கோடையில் நீங்கள் விளக்கெண்ணையை உங்கள் தலைக்கு முடிகளுக்கு சிறிதளவு தேய்ப்பதின் மூலம் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கிறது.

விளக்கெண்ணையை தலை முடிக்கு தேய்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விளக்கெண்ணையை உங்கள் தலையில் தேய்ப்பதின் மூலம் இதில் உள்ள வைட்டமின் ஈ, புரதம் போன்றவை தலைமுடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுக்கிறது.

அடர்த்தி அதிகமாக இருக்கக்கூடிய எந்த விளக்கெண்ணையை பயன்படுத்தும் போது லேசாக சூடு செய்து உங்கள் தலைமுடிக்கு மசாஜ் செய்து தேய்த்து விடலாம்.

 வாரத்துக்கு இரண்டு முறை தேய்த்துப் பாருங்கள். வெயிலின் தாக்குதலால் ஏற்படுகின்ற உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும்.

--Advertisement--

உங்கள் தலைமுடியை வலிமையாக்க கூடிய சக்தி இதற்கு இருப்பதால் முடி உதிர்வதை அடியோடு குறைக்கும். மேலும் இது முடி வளர்ச்சியை தூண்டி விடக் கூடிய சக்தி உள்ளது.

வெய்யிலால் ஏற்படக்கூடிய முடி பிளவுபடுதலை தடுக்கக்கூடிய ஆற்றல் இதற்கு உள்ளது. இதில் இருக்கும் அமினோ அமிலங்கள், ஒமேக ஆறு, கொழுப்பு அமிலங்கள் முடி உடைவதை தடை செய்கிறது.

முடியை அடர்த்தியாக கூடிய ஆற்றல் எந்த எண்ணெய்க்கு உள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த எண்ணெயை நீங்கள் தேய்ப்பதின் மூலம் உங்கள் முடி மென்மையாகும். இது ஒரு மிகச்சிறந்த கண்டிஷனர் போல செயல்படும்.

எனவே இந்த கோடை காலத்தில் நீங்கள் இந்த எண்ணெயை பயன்படுத்தி பாருங்கள். நிச்சயமாக ஏற்படக்கூடிய மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள். அப்படி உங்கள் தலைமுடியில் மாற்றம் ஏற்பட்டால் கண்டிப்பாக எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.