திருமணம் ஆகவில்லை.. 25 வயசில் எடுத்த முடிவு.. அன்றே கணித்த மரணம்.. கொடூர வில்லன்.. நிறைவேறாத டேனியல் பாலாஜி கடைசி ஆசை..!

திருமணம் ஆகவில்லை.. 25 வயசில் எடுத்த முடிவு.. அன்றே கணித்த மரணம்.. கொடூர வில்லன்.. நிறைவேறாத டேனியல் பாலாஜி கடைசி ஆசை..!

சினிமாவில் வில்லனாக காட்டப்பட்ட ஒரு நடிகரின் கடந்த கால வாழ்க்கையை திரும்பி பார்க்கும்போது, அந்த மனிதரின் வளர்ச்சியும், செயல்பாடுகளும், சமூகத்தின் மீது கொண்டிருந்த மரியாதையும், அக்கறையும் புரிந்துக்கொள்ள முடிகிறது. அதே நேரத்தில் தனிப்பட்ட மனிதராக அவர் கடந்து வந்த வேதனைகளையும் தெரிந்துக்கொள்ள முடிகிறது.

டேனியல் பாலாஜி

கொடூர வில்லனாக ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர்தான் நடிகர் டேனியல் பாலாஜி. தரமணி திரைப்படக் கல்லூரியில் படித்த அவருக்கு, சினிமாவில் பெரிய டைரக்டராக வர வேண்டும் என்பதுதான் கனவு. ஆனால் காலம் அவரை சினிமாவில் கொடூர வில்லனாக நடிக்க வைத்து விட்டது.

மருதநாயகம் படம்

ஆங்கில படங்கள் சிலவற்றில் பணிபுரிந்த அவரை, தனது மருதநாயகம் படம் டிஸ்கஷனுக்கு அழைத்திருக்கிறார் கமல்ஹாசன். அவரும் பல விஷயங்களை கமலுடன் கலந்து ஆலோசித்து பேசியிருக்கிறார். ஆனால் ஒரு கட்டத்தில் அந்த படம் அப்படியே டிராப் ஆகி விட்டது.

திருமணம் ஆகவில்லை.. 25 வயசில் எடுத்த முடிவு.. அன்றே கணித்த மரணம்.. கொடூர வில்லன்.. நிறைவேறாத டேனியல் பாலாஜி கடைசி ஆசை..!

சித்தி சீரியலில்..

அதன்பிறகு காமராசு என்ற படத்தில் உதவி இயக்குனராக பணிசெய்திருக்கிறார் பாலாஜி. அது அவரது பெரியம்மா மகன் முரளி நடித்த படம்தான். இந்த சூழலில் சித்தி சீரியலில் நடிக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது. இல்லை இயக்குனராவதுததான் என் ஆசை என்று தெரிவித்த வற்புறுத்தி நடிக்க வைத்திருக்கிறார் சித்தி சீரியல் டைரக்டர்.

இதையும் படியுங்கள்: நடிகர் விஸ்வேஸ்வர ராவ் திடீர் மரணம்..! இது தான் காரணமா..?

அதில் டேனியல் என்ற வில்லன் கேரக்டரில் நடித்ததால், அந்த பெயருடன் டைட்டில் கார்டு வந்திருக்கிறது. ஆனால் துவக்கத்தில் அந்த பெயரை விரும்பாவிட்டாலும் பின்னர் அதை ஏற்றுக்கொண்டிருக்கிறார் டேனியல் பாலாஜி.
அதன்பிறகு சில படங்களில் சின்ன கேரக்டரில் நடித்த டேனியல் பாலாஜி, ஸ்ரீகாந்த், சினேகா நடித்த ஏப்ரல் மாதத்தில் படத்திலும் சினேகாவின் முறைப்பையனாக நடித்திருந்தார்.

திருமணம் ஆகவில்லை.. 25 வயசில் எடுத்த முடிவு.. அன்றே கணித்த மரணம்.. கொடூர வில்லன்.. நிறைவேறாத டேனியல் பாலாஜி கடைசி ஆசை..!

வேட்டையாடு விளையாடு

அவருக்கு மிகப்பெரிய திருப்பத்தை கொடுத்த படம் வேட்டையாடு விளையாடு மற்றும் பொல்லாதவன் படங்கள்தான். அந்த படங்களில் அப்படி ஒரு வில்லத்தனமான நடிப்பில் ரசிகர்களை மிரட்டிய டேனியல் பாலாஜி தொடர்ந்து வடசென்னை, பைரவா, பிகில் என பல படங்களில் நடித்தார்.

அசுரன், விடுதலை படங்களில் சில காட்சிகளில் மேக்கப் மேனாக செயல்பட்டு இருக்கிறார். தமிழ் படங்களில் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.

திருமணமே வேண்டாம்

ஆவடியில் இவர் கட்டிய கோவிலுக்கு, நடிகர் யாஷ் ஒரு தொகை கொடுத்து தன் அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தவிர, 25 வயதில் தனக்கு திருமணத்துக்கு பெண் பார்த்த நிலையில், இவருக்கு ஜாதகம் பார்த்த பெண்களுக்கு எல்லாம், மற்றவர்களுடன் திருமணமாகி போய் விட, இனிமேல் வாழ்க்கையில் திருமணமே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் டேனியல் பாலாஜி.

இதையும் படியுங்கள்: அப்பாவை போலவே உயரமாக இருக்கும் நடிகர் ரகுவரனின் மகன் இவர் தானா..!

உயிர் பிழைத்த அதிசயம்

இந்நிலையில் 2020ல் கொரோனா தொற்று 2வது அலையின் போது அதில் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறார் டேனியல் பாலாஜி. இனி இவர் உயிர் பிழைப்பது கஷ்டம் என டாக்டர்கள் சொன்ன நிலையில், தெய்வாதீனமாக அந்த பாதிப்பில் இருந்து உயிர் பிழைத்து மீண்டு இருக்கிறார் டேனியல் பாலாஜி. அவர் உயிர் பிழைத்த அதிசயித்தை பார்த்து டாக்டர்களே வியந்து போயினர்.

திருமணம் ஆகவில்லை.. 25 வயசில் எடுத்த முடிவு.. அன்றே கணித்த மரணம்.. கொடூர வில்லன்.. நிறைவேறாத டேனியல் பாலாஜி கடைசி ஆசை..!

கடைசி ஆசை

கடைசி வரை திருமணம் ஆகவில்லை. திருமணமே வேண்டாம் என 25 வயசில், டேனியல் பாலாஜி முடிவு எடுத்திருக்கிறார். கொரோனா தொற்றால் அன்றே கணித்த மரணம் கடந்தும் வாழ்ந்த கொடூர வில்லன் நடிகரான அவரது கடைசி ஆசை இயக்குனர் கனவு நிறைவேறாத நிலையில் மறைந்து விட்டார் டேனியல் பாலாஜி.

ப்பா.. இது தொடையா..? இல்ல, கர்லா கட்டையா..? கட்டிலே செஞ்சி போடலாம்.. சூடேற்றும் கனிகா..!