Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

டேனியல் பாலாஜி கேட்காமலே உதவி செய்த கே.ஜி.எஃப் ஹீரோ.. அப்படி என்ன செய்தார் தெரியுமா..?

திரை உலகில் நடிக்கும் நடிகர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் மக்கள் மத்தியிலும் நல்ல பிரபலம் இருக்கும். அந்த வகையில் டேனியல் பாலாஜி தென்னிந்திய திரை உலகில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டவர்.


அண்மையில் இவர் மரணம் அடைந்த செய்தியை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்ததோடு மட்டுமல்லாமல் திரை உலகில் இவரை போல ஒரு கலைஞர் கிடைப்பாரா? என்ற எண்ண அலைகளை ஏற்படுத்தியது.

டேனியல் பாலாஜி..

தனது மறைவால் திரையுலகுக்கு ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் டேனியல் பாலாஜி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகள் பலவற்றில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்.

இதையும் படிங்க: தினகரன் மகள் பற்றி இதுவரை வெளிவராத அதிர்ச்சி தகவல்கள்..

இவர் கேஜிஎப் ஹீரோ யாஷோடு இணைந்து நடித்த மக்கள் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை நிரந்தரமாக மாற்றியவர். இவருக்கு கேஜிஎப் ஹீரோ தக்க சமயத்தில் ஒரு மிகப்பெரிய உதவியை செய்திருக்கிறார். அதைப் பற்றி டேனியல் பாலாஜியும் ரசிகர்களுக்கு புரியும் படி இறப்புக்கு முன் பேசி இருக்கிறார்.

--Advertisement--


உதவி செய்த கேஜிஎப் ஹீரோ யார்..

இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருவதோடு அப்படி என்ன உதவியை கே ஜி எஃப் ஹீரோ யாஷ் செய்தார் என்று கேட்க வைத்துள்ளது.

அவர் தனக்காக இந்த உதவியை பெற்றுக் கொள்ளவில்லை. சிறு வயதிலிருந்து டேனியல் பாலாஜிக்கு ஆன்மீகத்தில் நாட்டம் இல்லாமல் இருந்தது. அதன் பிறகு ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்தவுடன் தான் கடவுள் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து ஆவடியில் கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய நிலையில் அவர் பேட்டி ஒன்றில் பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.


அந்த பேட்டியில் தனது அம்மாவின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் விதமாக அங்காள பரமேஸ்வரி கோயிலை கட்டிய டேனியல் பாலாஜிக்கு கேஜிஎப் ஹீரோ யாஷ் உதவி செய்ததை பெருமையோடும் பூரிப் போடும் தெரிவித்தார்.

என்ன செய்தார் தெரியுமா?

தனக்கு உதவி கிடைக்கவில்லையே என்று எதிர்பார்த்து காத்திருக்கும் மனிதர்களின் மத்தியில் டேனியல் பாலாஜி கட்டும் கோயிலுக்காக கேஜிஎப் படத்தின் நாயகன் சில லட்சங்களை பணமாக கொடுத்து உதவி செய்திருக்கிறார்.

எப்படி தெரியுமா? கேஜிஎப் படத்தில் நடிக்க கூப்பிடும் போது கோயில் கட்டிக் கொண்டிருக்கிறேன் வர முடியுமா? என தெரியவில்லை என டேனியல் பாலாஜி கூறியதை அடுத்து யாஷ் பணத்தை போட்டுவிட்டார்.

இதனை அடுத்து டேனியலும் நான் டேட்டே தரவில்லை. அதற்குள் பணத்தை போட்டு விட்டீர்களே என்று கேட்டதற்கு யாஷ் இது நீங்கள் கட்டுர கோயிலுக்கு என்று சொன்னதாக பேட்டியில் அவர் பகிர்ந்து இருக்கிறார்.

2011-ஆம் ஆண்டு பிரதீப் ராஜ் இயக்கத்தில் கன்னடத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான கிராதகா படத்தில் டேனியல் பாலாஜி இணைத்து நடித்திருப்பார்.

இதையும் படிங்க: இம்மாம் பெரிய உடம்புக்கு இத்துனூண்டு நீச்சல் உடையா..? அடிக்கும் வெயிலில் பூனம் பாஜ்வா ஜில் ஜில் போஸ்..!


எனினும் இவரோடு கேஜிஎப் படத்தில் நடிக்க முடியவில்லை என்றாலும் அதையெல்லாம் மனதில் கொள்ளாமல் அவர் டேனியல் பாலாஜி கட்டிய கோயிலுக்கு நன்கொடை வழங்கிய விஷயம் தற்போது தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க:

அத்தோடு கடவுளிடம் பயபக்தியாக இருக்க வேண்டாம். ஒரு பிரண்டை போல இருந்தால் போதுமானது. மனம் கஷ்டமாக இருந்தால் கடவுளிடம் சென்று புலம்புவேன். ஹாப்பியாக இருந்தால் போய் ஹய் சொல்லி விட்டு வருவேன் என்று பேசிய டேனியல் பாலாஜி தன் இறப்புக்கு பின்பும் கண்களை தானமாக தந்திருப்பது ரசிகர்களின் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதை அடுத்து கேஜிஎப் ஹீரோ யாஷ் டேனியல் பாலாஜி கேட்காமலேயே அவர் கட்டிய கோயிலுக்கு உதவி செய்ததை பற்றி ரசிகர்கள் அனைவரும் பேசி வருகிறார்கள். எனவே இது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top