Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

இன்னைக்கு நான் காட்டப்போறது இது தான்..! – விதவிதமாக காட்டும் திவ்யதர்ஷினி..!

நடிகை டிடி ஸ்டைல்ஸ் என்ற டேக்கின் கீழ் நான் காட்டப்போறது இதுதான் என்று கூறி தன்னுடைய விதவிதமான சன் கிளாஸ்களை ரசிகர்களின் கண்களுக்கு காட்டி இருக்கிறார் நடிகை திவ்யதர்ஷினி.

நடிகைகள் ஆடைகளை தாண்டி பல்வேறு அழகு சாதனங்களை விரும்புவார்கள். அந்த வகையில், சன் க்ளாசுகளும் ஒரு அழகு சாதனமாகவே தற்போது மாறிவிட்டது என்று தான் கூற வேண்டும்.

அதிகமாக வெயிலடிக்கும் நேரங்களில் கண்களுக்கு அதிகப்படியான பிரகாசமான ஒளியை கடத்துவதை தவிர்க்கவே இந்த கூலிங் கிளாஸ்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன.

ஆனால் தற்போது இவை ஒரு ஸ்டைல் எலமெண்டாக மாறி இருக்கிறது என்று தான் கூற வேண்டும். காரணம் இளசுகள், பெண்கள். ஆண்கள் என இளசுகள் பலரும் கூலிங் கிளாஸ் அணிவதை ஒரு ஸ்டைல் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதற்கேற்றார் போலவே விதவிதமான வடிவங்களில் கூலிங் கிளாசுகள் வந்து கொண்டிருக்கின்றன. 50 ரூபாய் ஆரம்பித்து ஐந்து லட்சம் ரூபாய் வரை கூலிங் கிளாஸ்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

--Advertisement--

அதிலும் குறிப்பாக நடிகர் கூலிங் கிளாஸ் இல்லாமல் தோன்றுவது என்பது கடினமான காரியம். அதிலும் தெலுங்கு ஹீரோக்களை பார்த்தால் தூங்கிக் கொண்டிருக்கும்போது கூட கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டுதான் தூங்கி கொண்டு இருப்பார்கள்.

இந்த கொடுமையை எல்லாம் நாம் பார்த்துக் கொண்டுதான் வருகிறோம். மேலும் குறைந்த விலையில் சாலையோரம் விற்கப்படும் இந்த கூலிங் கிளாஸ்களால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனக் கூட பல்வேறு மருத்துவர்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து இருக்கிறார்கள்.

வெளிநாடுகளுக்கு செல்லும் போதெல்லாம் விதவிதமான கூலிங் கிளாசுகளை வாங்குவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறதார் திவ்யதர்ஷினி. அந்த வகையில் கை நிறைய விதவிதமான கூலிங் கிளாஸ்களை வைத்துக்கொண்டு போஸ் கொடுத்திருக்கும் திவ்யதர்சனியின் இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக தொகுப்பாளினியாக பயணம் செய்து வந்த நடிகை திவ்யதர்ஷினி தற்போது இனிய பக்கங்களில் கிளாமர் ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், டிடி ஸ்டைல்ஸ் என்ற பேக்கில் தன்னுடைய அழகு சாதன பொருட்கள் மற்றும் ஆடைகளை ரசிகர்களின் கண்களுக்கு காட்டிக்கொண்டிருக்கிறார் அந்த வகையில் தற்போது தன்னுடைய கூலிங் கிளாசுகளை ரசிகர்களுக்கு காட்டி இருக்கிறார் திவ்யதர்ஷினி.

Continue Reading
 

More in

Trending Now

To Top