Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

பத்துக்கு பத்து ரூம்.. ஒரு வேளை சோற்றுக்கே கஷ்டம்..!! – இயக்குனர் லிங்குசாமி பரிதாப நிலை..!

தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு தனி இடம் பிடித்தவர் இயக்குனர் லிங்குசாமி.இவர் 2001 ஆம் ஆண்டு வெளி வந்த ஆனந்தம் என்ற குடும்ப படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

இந்தப் படத்தை அற்புதமான முறையில் இயக்கிய இவர் தொடர்ந்து பல சூப்பர் சூப்பர் ஹிட் படங்களை இயக்கியிருக்கிறார். திரையுலகை பொருத்த வரை வெற்றி, தோல்வி என்பது சகஜம் தான். எனவே இதனை சரியாக பார்ப்பவர்கள் தான் இந்த துறையில் நிலைத்து நிற்க முடியும்.

அந்த வகையில் இயக்குனர் லிங்குசாமியும் வெற்றியோ, தோல்வியோ இரண்டையும் சமமாக பார்த்தவர். இவர் அண்மையில் பேட்டி ஒன்றில் தன்னை பற்றி கூறும் போது சென்னைக்கு வந்த புதிதில் இவருக்கு பல சங்கடங்கள் ஏற்பட்டுள்ளது.

மேலும் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யக்கூட இவரிடம் போதுமான அளவு பொருளாதார வசதி இல்லை என்று கூறியவர், பத்துக்கு பத்து ரூமில் தான் அவர் இருந்ததாக தெரிவித்திருக்கிறார்.

அத்தோடு ஒருவேளை சோற்றுக்கு கூட வழி இல்லாமல் இருந்தவர், இட்லி கடை ஒன்றில் கடன் வாங்கி சாப்பிட்ட நிலையை பாங்காக பகிர்ந்து இருக்கிறார்.

--Advertisement--

இவர் இயக்கத்தில் வெளி வந்த அஞ்சான் படம் படுமோசமான விமர்சனங்களை எழுப்பியது. இந்த படத்தை பார்த்தவர்கள் மட்டுமல்லாமல் பலரும் என்னை கடுமையாக சாடினார்கள். ஆனால் இதையெல்லாம் கடந்து சென்றால் தான் நாம் ஜெயிக்க முடியும். எந்த இடத்திலும் தேங்கி நிற்கக்கூடாது என்ற மன உறுதியோடு இருந்தாராம்.

மேலும் தனக்கு பக்க பலமாக இருக்கும் நண்பர் எப்படி இருந்தாலும் ஏதாவது ஒரு படம் பண்ணனும் என்று என்னிடம் வெற்றிமாறன் கூறுவது தனக்கு பூஸ்ட் குடித்தது போல் புத்துணர்ச்சியையும் உத்வேகத்தையும் ஏற்படுத்தும். 

மேலும்  உரிமையோடு படம் எடு பார்த்துக்கலாம் என்று சொல்லும் விஷால் போன்ற நண்பர்கள் என்னோடு இருக்கும் போது எனக்கு வேறென்ன வேண்டும் என லிங்குசாமி பேசியிருக்கிறார்.

எனவே ஒரு மனிதனின் வாழ்க்கையில் ஏற்படும் தோல்விகளின் சமயத்தில் கண்டிப்பாக நண்பர்கள் கை கொடுத்து உதவுவார்கள் என்பதற்கு வெற்றிமாறன் மற்றும் விஷாலின் பேச்சு லிங்குசாமிக்கு தைரியத்தை வரவழைத்து இருப்பதோடு மீண்டும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை தந்துள்ளது என கூறலாம்.

அந்த வகையில் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னேறியவர்களின் வரிசையில் இயக்குனர் லிங்குசாமியையும் நாம் உதாரணமாக மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டலாம்.

Continue Reading
 
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Tamil Cinema News

Trending Now

To Top