இந்த நடிகர்கள் அதற்கு அழைத்தால் ஓகே சொல்லிடுவேன்… ஓப்பனாக சொன்ன திவ்யா துரைசாமி..

இந்த நடிகர்கள் அதற்கு அழைத்தால் ஓகே சொல்லிடுவேன்… ஓப்பனாக சொன்ன திவ்யா துரைசாமி..

தமிழ்நாட்டில் இருக்கும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தான் திவ்யா துரைசாமி. இவர் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக திகழ்கிறார். இதனை அடுத்து இவருக்கு திரைப்படத்தின் நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது.

அந்த வகையில் இவர் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற தமிழ் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டால் இதனை அடுத்து இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

இதையும் படிங்க: லவ் ஜிஹாத் பண்ணிட்டாங்களா உன்னை.. ஷகிலா கேள்விக்கு VJ மணிமேகலை பதிலை பாருங்க..

திவ்யா துரைசாமி..

அந்த வகையில் நடிகை திவ்யா துரைசாமி 2021 ஆம் ஆண்டு மதில் என்ற திரைப்படத்தில் சன்மதி என்ற கேரக்டரோடை மிகச் சிறப்பான முறையில் செய்ததை அடுத்து 2022 ஆம் ஆண்டு குற்றம் குற்றமே என்ற படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் கோகிலா கேரக்டர் ரோலை மிகச் சிறப்பாக செய்திருந்தார்.


இதனை அடுத்து எதற்கும் துணிந்தவன், சஞ்சீவன் போன்ற படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்து. அந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டார்.

அந்த நடிகர்களுக்கு ஓகேனா நானும் ஓகே..

அண்மையில் இவர் நடிப்பில் வெளி வந்த ப்ளூ ஸ்டார் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதை அடுத்து இவருக்கு மேலும் பல பட வாய்ப்புகள் வந்து சேரும் என ரசிகர்கள் அனைவரும் கூறி வருகிறார்கள்.

சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி வண்ண வண்ண உடைகளை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணற வைப்பார்.


இந்நிலையில் அண்மை பேட்டி ஒன்றில் இவரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு உரிய விடையை மிகவும் ஓப்பனாக சொல்லியதை பார்த்து ரசிகர்கள் அசந்து இருக்கிறார்கள்.

ஓபனாக பேசிய பேச்சால் பரபரப்பு..

பேட்டியில் கேட்கப்பட்ட கேள்வியில் நயன்தாரா மற்றும் திரிஷாவின் படு கிளாமரான காட்சிகளில் ஒரு குத்தாட்டத்திற்கு கூடி ஆட்டம் போடக்கூடிய லேவலுக்கு இறங்கி வரக்கூடிய சூழ்நிலை இன்று நிலவக்கூடிய சமயத்தில் நீங்களும் அதுபோல கவர்ச்சியாக பாடல்களுக்கு நடனம் ஆடுவீர்களா? என்று கேட்கப்பட்டது.

ஐட்டம் பாடல்களுக்கு நடனமாட நான் ரெடி ஆனால் அது எனக்கு பிடித்த நடிகர்களாக இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அப்படி அவருக்கு பிடித்த நடிகர் யார்? என்று கேள்வி எழுப்பிய போது ஒரு நீளமான லிஸ்ட்டை கொடுத்து இருக்கக்கூடிய இவர் சூர்யா, கார்த்தி, அஜித், விஜய் என பலரையும் கூறி இருப்பது ரசிகர்களின் மத்தியில் வாயை பிளக்க வைத்து விட்டது.

இதையும் படிங்க: கடைசி வரை நிறைவேறாமல் போன கவுண்டமணியின் ஆசை..இந்த மாதிரி படத்துல நடிக்கனுமாம்..

மேலும் சமந்தா போன்ற நடிகைகள் அவர்களுக்கு பிடித்த ஹீரோக்களுடன் ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடி இருக்கிறார்கள் .அதுபோல நான் கூறிய நடிகர்கள் கிடைத்தால் கட்டாயம் நானும் அது போல் செய்வேன்.


எனினும் அந்த நடிகர்கள் என்னை அது போன்ற ஐட்டம் பாடலுக்கு ஆட கூப்பிட்ட மாட்டார்கள் என்ற கருத்தையும் ஓபனாக கூறிவிட்டார்.

தற்போது இந்த பரபரப்பான பேச்சு தான் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக இருப்பதோடு அவர்கள் அவர்களிடம் ஷேர் செய்யப்படும் விஷயமாக உள்ளது.

அத்தோடு திவ்யா துரைசாமியின் சாதுரியத்தையும் ரசிகர்கள் அவர்களுக்குள் பேசி வருகிறார்கள். எவ்வளவு சாமர்த்தியமாக இந்த கேள்விக்கு பதில் அளித்து இருக்கிறார் என்று அவரை பாராட்டியும் இருக்கிறார்கள்.