Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

மணி பிளான்ட் பற்றி தெரிந்த உங்களுக்கு காயின் பிளான்ட் பற்றி தெரியுமா?

வீடுகளில் அலங்கார செடியாக வளர்க்கக்கூடிய மணி பிளான்ட் மற்றும் அந்த மணி பிளான்ட்டினால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னென்ன என்று அனைவருக்குமே நன்றாகத் தெரியும்.

 அது மட்டுமல்லாமல் மணி பிளான்ட் எந்த இடத்தில் வைத்து வளர்ப்பதால் என்னென்ன நன்மைகள் வீட்டுக்கு கிடைக்கும் என்பது சொல்லி தெரிய வேண்டிய அவசியமே இல்லை.

அந்த வரிசையில் இன்று காயின் பிளான்ட் பற்றி உங்களுக்கு சில விஷயங்களை கூற போகிறேன். உங்களுக்கு காயின் பிளான்ட் பற்றிய விஷயங்கள் ஏதாவது தெரியுமா? அப்படி தெரியவில்லை என்றால் நீங்கள் கவலைப்பட வேண்டாம் அந்தச் செடியை பற்றி தான் நான் விரிவாக இப்போது கூற போகிறேன்.

காயின் பிளான்ட்

மணி பிளான்ட் போலவே இந்த காயின் பிளான்ட்டும் செல்வம் மற்றும் பணத்தோடு ஒரு நெருங்கிய தொடர்பை பெற்றுள்ளது என்று சீன வாஸ்துவான ஃபெங் சூய் விளக்கமாக கூறியிருக்கிறது. இந்த காயின் பிளான்ட் உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய பட்சத்தில் செல்வமும் பணமும் அதிகளவு வந்து சேரும் என்ற நம்பிக்கை இன்று வரை உள்ளது.

அதுமட்டுமல்லாமல் காயின் பிளான்ட் வைத்து நீங்கள் வளர்க்கும் போது உங்களது பொருளாதார மேம்பாடு அடைவதோடு மட்டுமல்லாமல் கடன் சுமை இருந்தால் அந்த கடன் சுமை அடியோடு  நீக்கக்கூடிய தன்மை இந்த செடிக்கு உள்ளதாம்.

--Advertisement--

மேலும் இந்த காயின் பிளான்ட் ஒரு காந்தத்தைப் போல செயல்பட்டு நம் வீட்டுக்கு தேவையான நேர்மறையான அதிர்வுகளை வழங்குகிறது. அதனால் வீட்டில் எப்போதும் செல்வமும் செழிப்பும் அதிகரிப்பதோடு மகிழ்ச்சியும் கூடுதலாக கிடைக்கும் என்பது தெரியவந்துள்ளது.

காயின் பிளான்ட் வளர்போர் வீட்டில் வளர்ச்சி நான்கு மடங்காக அதிகரிக்குமாம். வீட்டின் வாசலில் இந்த காயின் பிளான்ட் வைத்து வளர்ப்பதால் ஏழ்மை நீங்கி மிகப்பெரிய பணக்காரராக மாறுவதற்கான வாய்ப்புகளை இந்த செடி பெற்றுத் தருமாம்.

 எனவே இந்த காயின் பிளான்ட்டை நீங்கள் வடகிழக்கு திசையில் வைப்பதின் மூலம் அமைதி வளர்ச்சி கட்டாயம் கிடைக்கும்.

தொழில் செய்யக்கூடிய இடங்களில் இந்த காயின் பிளான்ட்  தலைவாசல் பகுதியில் அல்லது தென்கிழக்கு திசையில் வைத்தால் தொழில் அபிவிருத்தி ஆகி நல்ல முறையில் வளர்ச்சி காண்பார்கள்.

காயின் பிளான்ட் வளர்ப்பது மிகவும் எளிதானது. இந்த செடியை தொட்டியிலோ, பானையிலோ ஊன்றி நடலாம். மேலும் இந்த செடியானது சூரிய ஒளி மற்றும் நிழலிலும் நன்கு வளரும்.

Continue Reading
 

More in

Trending Now

To Top