Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

ஜோதிகா யாரு தெரியுமா..? பலரும் அறியாத படு ஜோரான 10 உண்மைகள்..!

Tamil Cinema News

ஜோதிகா யாரு தெரியுமா..? பலரும் அறியாத படு ஜோரான 10 உண்மைகள்..!

இந்தியில் இருந்து தமிழுக்கு நடிக்க வந்த நடிகை ஜோதிகா. இங்கு முன்னணி நடிகையாக தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

ஆரம்பத்தில் எது மாதிரியான ரோல் கொடுத்தாலும் அந்த ரோலுக்கு பக்காவாக பொருந்தும் வகையில் தனது நடிப்பை சிறப்பான வகையில் வெளிப்படுத்தி ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்தார்.

நக்மா ஜோதிகாவின் அக்காவே இல்லை:

நடிகை ஜோதிகாவின் அக்கா தான் நடிகை நக்மா என நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில் நடிகை ஜோதிகாவின் அக்கா நக்மா இல்லை அதாவது நக்மா ஜோதிகா தந்தையின் முதல் தாரத்து மகள்.

இதையும் படியுங்கள்: உங்க படத்துல ரொமான்ஸ் பண்ணா தலையை வெ**டு.. இது என்ன மா..? லோகேஷ் கனகராஜிடம் கேட்கும் காயத்ரி..!

--Advertisement--

ஜோதிகா தன்னுடைய பள்ளி படிப்பையும், கல்லூரி படிப்பையும் மும்பையில் முடித்துவிட்டு பட்டம் பெற்றிருக்கிறார்.

முதன் முதலில் அஜித் நடிப்பில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த வாலி படத்தில் ஒரு சிறிய நூலில் நடித்துதான் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் ஜோதிகா.

அந்த படத்தின் மூலமே ஒரு நல்ல பிரபலத்தை ஏற்படுத்திக் கொண்டார். அந்த படத்தை தொடர்ந்து நடிகை ஜோதிகா இயக்குனர் வசந்த் இயக்கத்தில் வெளிவந்த பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார்.

நண்பர்களாக ஜோதிகா – சூர்யா:

இப்படத்தின் முதல் நாள் சூட்டில் இயக்குனர் வசந்த் சூர்யாவை கூப்பிட்டு இவர்தான் ஜோ இவர்தான் உன்னுடன் நடிக்கப் போற ஹீரோயின் இவங்க மும்பையில் இருந்து வந்திருக்காங்க.

இவங்களுக்கு தமிழ் தெரியாது நன்றாக பேசி பழகிக்கோங்க ஏனென்றால் இந்த படத்தில் நிறைய ரொமான்ஸ் காட்சிகள் இருக்கும்.

இதையும் படியுங்கள்: பிளாஸ்டிக்கில் உள்ளாடையா..? அவசரமா வந்தா என்ன பண்ணுவீங்க..? ஷில்பா ஷெட்டியை கலாய்க்கும் ரசிகர்கள்..!

எனவே நீங்கள் நண்பர்களாகிக்கொள்ளுங்கள் என்று கூறி அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். ஆனால் சூர்யா கொஞ்சம் வெட்கத்துடன் தயங்கி தயங்கி நிற்க ஜோதிகா சென்று கை கொடுத்து தன்னை அறிமுகம் செய்துக்கொண்டாராம்.

அதன் பின்னர் அந்த படத்தில் பேச வேண்டிய தமிழ் வசனங்கள் எல்லாம் ஜோதிகாவுக்கு கற்றுக் கொடுத்ததே சூர்யா தான் காரணம் ஆரம்பத்தில் ஜோதிகாவுக்கு தமிழே வராது மும்பையை சேர்ந்தவர் என்பதால் ஹிந்தி மட்டுமே தெரியும்.

அந்தப் படத்தில் சூர்யாவின் அன்பும் அரவணைப்பும் பார்த்து மயக்கிய ஜோதிகாவுக்கு அவரை மிகவும் பிடித்து போய் நெருங்கிய நண்பர்களாகிவிட்டனர்.

சூர்யாவின் குணத்தை பார்த்து மயங்கிய ஜோதிகா:

அதன் பின்னர் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் காக்க காக்க திரைப்படத்தில் ஜோதிகாவை ஹீரோயினாக நடிக்க வந்து கேட்டுள்ளார்.

உடனே ஜோதிகா இந்த படத்தில் ஹீரோவாக எனது நண்பர் சூர்யாவை போட முடியுமா? என கேட்க உடனே கௌதம் வாசுதேவ் மேனனும் அதற்கு ஓகே சொல்லி சூர்யாவையும் ஜோதிகாவையும் கமிட் செய்துள்ளார்.

இந்த படத்தில் இருவரும் நெருங்கி பழகி நண்பர்களாக இருந்தவர்கள் காதலர்களாக மாறிவிட்டார்கள். ஜோதிகாவுக்கு சூர்யாவிடம் இந்த நல்ல குணம் தான் மிகவும் பிடித்துப் போய்விட்டதாம் .

பெண்களை ஏறெடுத்து கூட பார்க்காமல் பெண்களை கண்டாலே கூச்சமும் வெட்கமும் ஆக இருந்து வந்த சூர்யாவை பார்த்த ஜோதிகா இப்படியும் ஒரு மனிதனா? என காதலில் விழுந்து விட்டார்.

சூர்யாவை பெரிய நடிகர் ஆக்கிய ஜோதிகா:

அதன்பின் ஜோதிகா சூர்யாவுக்கு நடிப்பை கற்றுக்கொடுத்து அவர் எப்படி நடிக்க வேண்டும் எப்படி உடை அணிய வேண்டும் எப்படி பேச வேண்டும் எப்படி படங்களில் தெரிய வேண்டும் பாடில் லாங்குவேஜ் எப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் பல விஷயங்களை கற்றுக் கொடுத்தாராம்.

இதையும் படியுங்கள்: வாலிபரை சரமாரியாக தாக்கிய சுந்தரா ட்ராவல்ஸ் நடிகை ராதா.. இது தான் காரணமாம்..

இவர்கள் இருவருக்கும் இடையே இருந்த காதலின் தீவிரத்தை உணர்ந்த சூர்யாவின் தந்தை சிவக்குமார் இவர்களின் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

ஆரம்பத்தில் கொஞ்சம் தடை போட்டு இருந்தாலும் அதன் பின் சம்மதித்து இருவருக்கும் முறைப்படி திருமணம் செய்து வைத்தார்.

தற்போது இரண்டு குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகியும் காதல் குறையாமல் சிறந்த காதல் ஜோடிகளாக காதலர்களுக்கு தென்பட்டு வருகிறார்கள்.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top