விக்ரம் படத்துல ஏக வசனம் பேசுனீங்களே ஆண்டவரே.. தீயாய் பரவும் போட்டோ.. விளாசும் ரசிகர்கள்..!

உலகளாவிய அளவில் போதைப்பொருள் பரிமாற்றம் தினம் தோறும் பல்வேறு நவீன தொழில்நுட்பத்தோடு நடைபெற்று வருகிறது. அதனை கண்டுபிடித்து அழிக்க எத்தகைய சட்டங்கள் போட்டாலும் அதையும் மீறி போதை பொருள் பல உலக நாடுகளில் பயணித்து அதற்கு உரிய தொகையை பலருக்கும் பெற்றுத் தருகிறது.

அந்த வகையில் தற்போது 2000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்டவராக கருதப்படும் ஜாபர் சாதிக்கை கட்சியிலிருந்து அனைத்து பொறுப்புகளில் இருந்து நிரந்தரமாக நீக்கி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவு இட்டிருக்கிறார்.

விக்ரம் திரைப்படம்..

இந்த செய்தி தான் தற்போது இணையங்களில் பரபரப்பாக பேசப்படுகின்ற செய்தியாக உள்ளது. சுமார் மூன்று வருடங்களாக இந்தியாவிலிருந்து வெளிநாட்டிற்கு 2000 கோடி மதிப்புள்ள போதை பொருள் கடத்தியதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளரை மத்திய போதைப்பொருள் நிறுவனம் தேடி வருகிறது.


இதையும் படிங்க: உங்கள லிப்லாக் பண்ணனும்ன்னு கேட்டார்.. சரின்னு சொன்னேன்.. ஆனால்.. ரகசியம் உடைத்த பிரியா பவானி ஷங்கர்

இதனை அடுத்து டெல்லியில் சில நாட்களாக சில பேர் கைது செய்யப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இது சம்பந்தமான சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தெற்கு டெல்லியில் இரண்டு போதைப்பொருள் குடோனை கண்டுபிடித்திருக்கும் போலீசார் சுமார் 1700 கிலோ போதை பொருளை பறிமுதல் செய்து இருக்கிறார்கள்.

--Advertisement--

ஜாபர் சாதிக்..

அது மட்டுமில்லாமல் டெல்லியில் உள்ள மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் டெல்லி காவல் துணையோடு இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் 50 கிலோ போதை பொருளை கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த போதை பொருள் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு கடத்த முயன்ற மூன்று பேரையும் அதிரடியாக கைது செய்ததன் மூலம் போதைப் பொருள் கடத்த முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த போதைப் பொருள் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது யார் என்ற விஷயம் தெரிந்தால் நீங்கள் அதிர்ந்து விடுவீர்கள். தமிழகத்தைச் சேர்ந்த மூன்று நபர்களிடம் இது பற்றிய விசாரணை நடத்தப்பட்டது. மேலும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் கும்பலின் தலைவராகவும் கடத்தலுக்கு மூளையாகவும் செயல்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.


இவர் வேறு யாரும் இல்லை. திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் என்பவர் தான் கடந்த மூன்று ஆண்டுகளாக போதைப்பொருள் கடத்தல் தலைவனாக செயல்பட்டு இருக்கிறார். இவர் திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட கழக அணி துணை அமைப்பாளர் பதவியில் இருந்தவர்.

இவரோடு இவரது சகோதரர்கள் மைதீன் மற்றும் சலீம் இந்த கடத்தலுக்கு உறுதுணையாக இருந்த விஷயம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

போதைப்பொருள் கடத்தல்..

இதனை அடுத்து திமுக கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு கலங்கம் கற்பிக்கக் கூடிய வகையில் இவர்கள் செயல் பட்டதால் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஜாபர் சாதிக்கு நிரந்தரமாக நீக்கி இருக்கிறார்கள்.

திமுக ஆட்சிக்கு வந்ததை அடுத்து இந்த போதை பொருள் புழக்கமானது அதிகரித்து உள்ளதாக பாஜகவின் தலைவர் அண்ணாமலை கருத்துக்களை கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: பிறந்தநாள் பார்ட்டி.. ஓவர் டைட்டான கவர்ச்சி உடை.. அவருக்கு முத்தம்.. கிறங்கடிக்கும் சன் டிவி சீரியல் நடிகை..!


இதனை அடுத்து விக்ரம் படத்துல ஏக வசனம் பேசி போதைப் பொருளுக்கு எதிராக செயல்பட்ட ஆண்டவரே இந்த கடத்தல் நபர்களோடு இணைந்து எடுத்துக் கொண்ட போட்டோக்கள் ரசிகர்களின் மத்தியில் தீயாய் பரவி வருகிறது.

இதை பார்த்த ரசிகர்கள் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஜாபர் சாதித்துடன் நடிகர் கமலஹாசன் நெருக்கமாக நின்றபடி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியதால் விக்ரம் படத்தில் போதைப் பொருளுக்கு எதிராக ஏக வசனம் பேசினீர்களே ஆண்டவரே என்ன இதெல்லாம் என்று கடுமையான விமர்சனங்களை முன் வைத்து இருக்கிறார்கள். இதற்கு கமலஹாசன் என்ன பதில் தர போகிறார் என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.