Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“மணக்கும் முருங்கைக்காய் பொரியல்..!” – மாமனுக்கு இப்படி வெச்சு கொடுங்க..!

இதுவரை யாரும் முருங்கைக்காய் கொண்டு இப்படிப்பட்ட ஒரு பொறிகளை செய்திருக்க மாட்டார்கள். முருங்கைக்காய் என்றாலே வாயு தொல்லை இருக்கிறது என்று அதை ஒதுக்கி வைப்பார்கள் எப்படி செய்து சாப்பிடுவதின் மூலம் உங்களுக்கு வாயுத்தொல்லை ஏற்படாது மேலும் எளிதில் செரிமானம் ஆகும்.

பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்கு அதிக அளவு இரும்புச் சத்தை அள்ளித் தரக்கூடிய எந்த முருங்கக்காய் பொரியலை எப்படி செய்து நீங்கள் அசத்துவதின் மூலம் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் நீங்கள் செய்த முருங்கக்காய் பொரியலை நொடியில் சாப்பிட்டு விடுவார்கள். இப்படிப்பட்ட முருங்கைக்காய் பொரியல் செய்ய தேவையான பொருட்கள் என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

முருங்கைக்காய் பொரியல் செய்ய தேவையான பொருட்கள்

1.முருங்கைக்காய் 4

2.உப்பு தேவையான அளவு

3.இஞ்சி ஒரு துண்டு

--Advertisement--

4.பூண்டு பல் எட்டு

5.தேங்காய் கால் கப்

6.வரமிளகாய் 3

தாளிசம் செய்ய

7.தேவையான அளவு எண்ணெய்

8.கடுகு

9.உளுத்தம் பருப்பு

10.சீரகம்

செய்முறை

முதலில் முருங்கை காயை நன்றாக கழுவிக்கொண்டு பிறகு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். நறுக்கி வைத்திருக்கும் இந்த துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு போதுமான உப்பு சேர்த்து முக்கால் வேக்காடு வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

பிறகு பிரஷ்ஷாக நீங்கள் வைத்திருக்கும் தேங்காய் துருவல், பூண்டு, இஞ்,சி வரமிளகாய் இவற்றை அனைத்தையும் மையாக மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும்.

இப்போது அரைத்த எந்த கலவையை முக்கால் வேக்காடு பதத்தில் இருக்கக்கூடிய முருங்கைக்காயை அப்படியே போட்டு நன்கு கிளறி விட வேண்டும்.

தேங்காய், இஞ்சி, பூண்டு வர மிளகாய் அரைத்த இந்த கலவையில் இருக்கக்கூடிய சாரின் ரசம் முழுவதும் காய்க்குள் இறங்கி முழு வேக்காடு பதத்திற்கு வரை காத்திருக்கவும்.

பிறகு ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெயை ஊற்றி அதில் கடுகு, உளுத்தம் பருப்பை போட்டு வெடிக்க விட்டு தாளிசம் செய்த இந்த பொருட்களை உங்கள் முருங்கக்காயோடு சேர்த்து நன்கு கிளறி விடவும்.

 ஒரு நிமிடம் இந்த கலவையை அப்படியே மூடி வைத்து சில நிமிடங்களில் இறக்கி விடவும். எப்போது உங்கள் வீடு மணக்க கூடிய அளவிற்கு முருங்கைக்காய் பொரியல் தயார்.

Continue Reading
 

More in

Trending Now

To Top