“உங்க வீட்டு ஜன்னல் ஈசியா சுத்தம் செய்ய..!” – வெங்காயம் ஒன்றே போதும்..!

நமது வீட்டில் இருக்கும் ஜன்னல்களுக்கு  மிக நேர்த்தியான முறையில் வர்ணங்களை பூசி இருப்போம். அது மட்டும் அல்லாமல் இந்த ஜன்னல்களில் இருந்து தூசிகள்,அதிக அளவில் வெளிச்சம் வராமல் இருக்க திரை சேலைகளையும் பயன்படுத்துவோம்.

இப்படி நாம் மிகவும் நேர்த்தியாக நமது ஜன்னல்களை வைத்திருந்தாலும் சன்னலில்  பிசுபிசுப்புகள் மற்றும் அழுக்குகள் தூசிகள் அடைவது வழக்கமான ஒன்றுதான்.

எப்படி இருக்க கூடிய ஜன்னல்களை நாம் சுத்தப்படுத்தும் போது சற்று கடினமாக இருக்கும். அந்த சூழ்நிலையில் நாம் கீழ்கண்ட குறிப்புக்களை பயன்படுத்தி நமது வீட்டு ஜன்னலில் இருக்கக்கூடிய அழுக்குகளையும், தூசிகளையும், பிசுபிசுப்புக்களையும் எளிதாக எப்படி சரி செய்வது என்பதை பற்றி இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

ஜன்னலை சுத்தப்படுத்தும் விதம்

உங்கள் வீட்டு ஜன்னல்களில் இருக்கும் இரும்பு கம்பிகளை முதலில் உலர்ந்த துணியால் தூசிகளை துடைத்து எடுக்க வேண்டும். பிறகு துணியை ஈரத்தில் நனைத்து துடைத்துவிட்டு மீண்டும் உலர்ந்த துணிகள் துடைப்பதன் மூலம் ஜன்னலில் இருக்கக்கூடிய தூசிகள் நீங்கிவிடும்.

சில சமயம் உங்கள் ஜன்னல் கம்பிகளில் அழுக்கு மற்றும் கரைகள் அதிகளவு படிந்திருக்கும். இதை நீக்க நீங்கள் பாத்திரம் தேய்க்கும் லிக்விட் சிறிதளவு எடுத்துக் கொண்டு அதை துணியில் லேசாக விட்டு நேரடியாக உங்கள் ஜன்னல் கம்பிகளை அழுத்தி தேய்க்கும் போது படிந்திருக்கும் கரைகள் பளிச்சென்று நீங்கிவிடும்.

--Advertisement--

அழுக்கு கரைகள் நீங்கி விட்டாலும் ஜன்னலில் பிசுபிசுப்பாக எண்ணெய் பசை அப்படியே இருக்கும். இந்த எண்ணெய் பசையை நீக்க நீங்கள் வெங்காயத்தை எடுத்து அதில் தேய்த்த பிறகு பாத்திரம் தேய்க்கும் லிக்விட் சிறிதளவு எடுத்து நீரில் கலந்து அதை ஒரு துணியில் எடுத்து நீங்கள் நன்கு அழுத்தி தேய்ப்பதின் மூலம் ஜன்னலில் இருக்கும் எண்ணெய் பசை எளிதில் நீங்கும்.

மேலும் நீங்கள் உங்கள் திரை சேலைகளை வாரத்துக்கு ஒருமுறை அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை துவைத்துப் போடுவதின் மூலம் பார்ப்பதற்கு பளிச்சென்று இருக்கும்.

ஜன்னல் கண்ணாடிகளை கண்ணாடிகளைத் துடைக்கும் லிக்விடைஸ்ரே செய்து துடைத்து விடலாம். இந்த பணியை நீங்கள் வாரத்துக்கு ஒரு முறை செய்வதின் மூலம் உங்கள் ஜன்னல் கண்ணாடிகள் பார்ப்பதற்கு புதிது போல் பளபளப்பாக இருக்கும்.

மேற்கூறிய இந்த குறிப்புக்களை பயன்படுத்தி உங்கள் வீட்டு ஜன்னல்களை சுத்தப்படுத்துங்கள் கட்டாயம் புது ஜன்னல்களைப் போல அந்த ஜன்னல்கள் காட்டியடிக்கும்.