பெயரே தெரியாமல்.. அழகில் மயக்கும் ஆண்ட்டி நடிகைகள்.. லிஸ்ட் பெருசா போகுதே..

பெயரே தெரியாமல்.. அழகில் மயக்கும் ஆண்ட்டி நடிகைகள்.. லிஸ்ட் பெருசா போகுதே..

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் மிகவும் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்து பெயர் எடுத்த நடிகைகள் பலர் அவர்களின் பெயர் கூட மக்களுக்கு தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால், அவர்களது நடிப்பும், அவர்களது அழகும் மக்கள் மனதில் ஆழமாக பதிந்து விட்டிருக்கும். அப்படி ஒரு நல்ல ரோலில் நடித்து அழகான தோற்றத்தை கொடுத்து மக்கள் மனதை கவர்ந்த நடிகைகள் சிலரை பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்ப்போம்.

நடிகை: சுரேகா வாணி:

அந்த வகையில் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை சுரேகா வாணி இவர் தமிழ் திரைப்படங்களிலும் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக கமலின் உத்தம புத்திரன், விக்ரம் நடிப்பில் வெளிவந்த தெய்வங்கள் திருமகன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். தெய்வத்திருமகள் படத்தில் எம்.எஸ். பாஸ்கரின் மனைவியாக நடித்திருந்தார். இந்த ரோல் அவருக்கு மிகவும் கச்சிதமான ரோலாக அமைந்து அவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் பாராட்டத்தக்க வகையில் இருந்தது. இவரது பெயர் இன்றளவும் தெரியவில்லை என்றாலும் அவரது முக தோற்றமும் நடிப்பும் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறது.

இதையும் படியுங்கள்: குடி போதையில் என் பின்னால் வந்து அந்த இடத்தில் அடித்தான்… சுய நினைவை இழந்து விட்டேன்.. கீர்த்தி சுரேஷ் பகீர்..!

--Advertisement--

நடிகை மாளவிகா அவினாஷ்:

அதற்கு அடுத்த லிஸ்டில் இருப்பவர் மாளவிகா அவினாஷ். இவர் சின்னத்திரையில் நடித்து மிகவும் பிரபலமானவர். தமிழில் ஜே ஜே , ஜெயம் கொண்டான் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். அத்துடன் அண்ணி சீரியலில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார். ,மேலும் செல்லமே ஆகிய தொடர்களிலும் நடித்த பிரபலமாக இருக்கிறார். இவரது நடிப்பும் இவரது தோற்றமும் மக்கள் மனதில் இடத்தை பிடித்திருந்தாலும் இவர் யார்? இவரை எங்கையோ பார்த்த மாதிரி இருக்கே என்று தான் பலரது எண்ணங்களிலும் தோன்றும்.

இதையும் படியுங்கள்: என்னது குணா ஹீரோயின் ஜோதிகாவின் சகோதரியா..? ரகசியம் உடைத்த பிரபலம்.. ரசிகர்கள் ஷாக்!

நடிகை பவித்ரா லோகேஷ்:

அடுத்த லிஸ்டில் இருப்பவர் தான் கன்னட நடிகை ஆன பவித்ரா லோகேஷ். இவர் கன்னடம் மற்றும் தமிழ் தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.குறிப்பாக பவித்ரா லோகேஷ் தமிழில் கௌரவம் அயோக்கிய கூகுள் குட்டப்பா போன்ற படங்களில் நடித்திருக்கிறார். அத்துடன் ஆர்ஜேபாலஜியின் வீட்டில் விசேஷம் திரைப்படத்தில் சௌமியாவின் அம்மாவாக நடத்து மிகப்பெரிய அளவில் பிரபலமானார். ஒவ்வொரு திரைப்படத்திலும் அவரது ரோல் அழுத்தமானதாக இருந்தது அவரது கதாபாத்திரம் கதைக்கு முக்கியமானதாக இருந்ததாலும் மக்கள் அவரை மறந்துவிடுகிறார்கள்.

நடிகை வினோதினி வைத்தியநாதன்:

அதற்கு அடுத்தது பிரபல தமிழ் நடிகையான வினோதினி வைத்தியநாதன் இவர் தமிழ் மற்றும் தமிழ் சினிமா மற்றும் அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார். தமிழ் சினிமாவில் பல படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக குணசத்திர வேடங்களில் நடித்த ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதையும் கவர்ந்தவர் வினோதினி வைத்தியநாதன். இவர் எங்கேயும் எப்போதும், ஜிகர்தண்டா, வேலைக்காரன், ராட்சசன், கோமாளி, பொன்னியின் செல்வன் போன்ற பல படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் ஏற்று நடித்திருக்கிறார். ரசிகர்கள் மனதில் மிகவும் பரிச்சயமான மிகவும் அழுத்தமான ரோல்களில் நடித்திருக்கும் இவரின் பெயரே பலருக்கு தெரிந்திராது என்பது தான் நிதர்சனமான உண்மை.

இதையும் படியுங்கள்: வயசுக்கு மீறுன கிளாமர்.. வெறும் உள்ளாடையுடன்.. தெரிய கூடாதது தெரிய நியத்தி கடம்பி…

நடிகை ஆஷா சரத்

அடுத்தது நடிகை ஆஷா சரத். இவரை தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. பார்த்தவுடன் அவர்தான் இவர் என அடையாளம் கண்டுபிடிக்கும் அளவுக்கு மிகவும் அழுத்தமான ரோல்களில் நடித்து பிரபலமானவர் ஆஷா சரத். இவர் மிகச்சிறந்த பரதநாட்டிய கலைஞர் அவர். ஆஷா சரத் தமிழில் வெளிவந்த கமலின் பாபநாசம் படத்தில் ஐஜி கீதா பிரபாகர் என்ற ரோலில் நடித்து அசத்தியிருந்தார். அவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் பாராட்டத்தக்க விஷயமாக இருந்து. கமல் கூட அவர்களின் நடிப்பை வியந்து பாராட்டி இருந்தார். மிகவும் அழகாக லட்சனமான தோற்றத்துடன் ஹோம்லி கதாபாத்திரத்துக்கு பக்காவாக பொருந்தும் ஆஷா சரத் திறமையான நடிப்பினை வெளிப்படுத்தியும் பெரிய அளவில் பேசப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.,