வடிவேலு ஒரு.. என்னையும்.. கோவை சரளாவையும் இதை பண்ணாரு.. கிழித்தெடுத்த ஆர்த்தி..!

தமிழ் திரை உலகில் வைகை புயல் என்று அழைக்கப்படும் நடிகர் வடிவேலு ஒரு மிகச்சிறந்த காமெடி நடிகராக வலம் வந்தவர்.


கவுண்டமணி செந்திலுக்குப் பின்பு தனக்கு என்று ஒரு சாம்ராஜ்யத்தை அமைத்துக் கொண்ட நடிகர் வடிவேலு தனது பாடி லாங்குவேஜ் கொண்டு பலரையும் சிரிக்க வைத்தார்.

நடிகர் வடிவேலு..

ஏற்கனவே நடிகர் வடிவேலு சிரிப்பு நடிகராக இருந்தாலும் சில்லரை தனமான இவரது புத்தியால் பல பேரிடம் டோஸ் வாங்கி வருகிறார். எனினும் தன்னை வளர்த்து விட்டவர்களை கூட நினைத்துப் பார்க்காமல் வந்த பாதையையும் திரும்பி பார்க்காமல் இவர் நடந்து கொள்ளும் முறை பற்றி இணையங்களில் செய்திகள் அதிக அளவு வெளிவரும்.

எனினும் தனது அசாத்திய காமெடி திறமையால் ரசிகர்கள் அனைவரையும் கட்டிப் போடக்கூடிய பிரம்மாஸ்திரமாகவே நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் முத்திரை பதித்திருக்கிறார்.

இந்நிலையில் நடிகர் வடிவேலு உடன் இணைந்து ஆச்சி மனோரமா, கோவை சரளா, ஆர்த்தி, வித்யூலேகா ஜாங்கிரி மதுமிதா என பல நடிகைகள் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறார்கள்.


எனினும் இந்த நடிகைகளுக்கு மக்கள் மத்தியில் ஒரு நிலையான இடம் கிடைக்காத காரணம் என்ன என்று தெரியவில்லை.

என்னை, கோவை சரளாவ பண்ணுனாரு..

மேலும் தமிழ் திரையுலகில் பிரபல காமெடி நடிகையாக திகழும் ஆர்த்தி நடிகர் வடிவேலு குறித்து பேசி இருக்கக்கூடிய சில செய்திகள் தற்போது இணையங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு காரணம் நடிகர் வடிவேலுவின் முகத்திரையை கிழிக்கும் நோக்கில் பிக் பாஸ் பிரபலமும் காமெடி நடிகையுமான ஆர்த்தி கூறிய விஷயங்கள் ரசிகர்களின் மத்தியில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய ஆர்த்தி கணேஷ், வடிவேலு குறித்து பேசிய விசயத்தில் இவர் நடிகர் வடிவேலுவோடு அருள், கிரி, கச்சேரி, வில்லு, கத்தி, சண்டை, குண்டக்க மண்டக்க போன்ற படங்களில் நடித்து இருக்கிறார்.


அப்படி அந்த திரைப்படங்களில் நடிக்கும் போது ஆர்த்தியை அழைத்த வடிவேலு நீ நல்லா நடிக்கிற என்று பாராட்டி உள்ளதாக சொன்ன அவர் வடிவேலு அழைத்து பாராட்டிய அளவுக்கு நடித்து விட்டால் அந்த படத்தில் அவர்களுக்கு காட்சி இருக்காது. தன்னை விட யாரும் நல்லா நடிக்க கூடாது என்று நினைப்பவர் வடிவேலு.

கிழித்தெடுத்த ஆர்த்தி..

இப்படிப்பட்ட குணம் கொண்டவர் தான் வடிவேலு என்ற விஷயத்தை பகிர்ந்ததோடு மட்டுமல்லாமல் 24-ஆம் புலிகேசி படத்திற்காக கோவை சரளாவையு,ம் என்னையும் இயக்குனர் சிம்பு தேவன் கமிட் செய்தார்.

ஆனால் வடிவேலு அவங்க எல்லாம் பார்த்த முகங்கள் எனவே இந்த படத்தில் நடிக்க வைக்க வேண்டாம் என்று எங்கள் இருவரையும் வெளியேற்றி விட்டார்.

இதனால் இந்த படம் ஒரு மிகப்பெரிய வெற்றியை அடையவில்லை என்று சொன்ன ஆர்த்தி வடிவேலு ஒரு பாம்பு மாதிரி என சொல்லி அவர் முகத்திரையை கிழித்திருக்கிறார்.


ஏற்கனவே வடிவேலுவின் குணம் குறித்து தாறுமாறாக பலரும் குறை சொல்லி வரக்கூடிய வேளையில் ஆர்த்தி போன்ற பிரபலமான நடிகைகளும் வடிவேலுவால் பாதிக்கப்பட்டு இருப்பது இந்த விஷயத்தின் மூலம் வெளி வந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விஷயத்தை அறிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் அருமையான அதிர்ச்சிக்கு உள்ளாகி இருப்பதோடு மட்டுமல்லாமல் வடிவேலுவை பற்றி கழுவி ஊற்றி வருகிறார்கள்.

---- Advertisement ----

Check Also

வடிவேலுவை இன்றுள்ள காமெடியன்கள் விமர்சிப்பது ஏன்..? உடைத்து பேசிய பாவா லட்சுமணன்..!

தமிழ் திரை உலகில் தவிர்க்க முடியாத காமெடிகளில் ஒருவராக இருக்கும் வடிவேலு மதுரையில் இருந்து கிளம்பி வந்த நகைச்சுவை புயல் …